Google Maps-ல் அசத்தல் அம்சம்; இனி "Reached Safely" மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியமே இல்ல!

|

பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என்கிற கவலை மற்றும் அச்சத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தால் அனுமதி மறுக்கப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூ அம்சம் (Google Street View) சென்னை, பெங்களூரு உட்பட 10 இந்திய நகரங்களுக்கு வந்ததை தொடர்ந்து கூகுள் மேப்ஸில் (Google Maps) மேலும் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதில் 'லோக்கேஷன் ஷேரிங்' அம்சமும் அடங்கும்!

அதில் 'லோக்கேஷன் ஷேரிங்' அம்சமும் அடங்கும்!

வெளியான 3 புதிய கூகுள் மேப்ஸ் அம்சங்களில், லோக்கேஷன் ஷேரிங் நோட்டிபிக்கேஷன்ஸ் (Location Sharing Notifications) என்கிற அம்சம் மிகவும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

குறிப்பிட்ட அம்சம் எப்படி வேலை செய்யும்? இது எப்படி வேலை செய்யும்? இதனால் என்ன பயன்? இதனுடன் சேர்ந்து அறிமுகமான மற்ற 2 அம்சங்கள் என்னென்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

"பயந்து போய்" வேலை செய்யும் கூகுள்?

கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களாகவே செம்ம பிஸியாக உள்ளது. பல்வேறு வகையான செக்யூரிட்டி அப்டேட்ஸ், மால்வேர் ஆப்கள் மீதான கெடுக்குபிடி, கூகுள் நியூஸ் மற்றும் ஜிமெயிலுக்கு புதிய டிசைன், மிகவும் சமீபத்தில் பிளே ஸ்டோர் ஆப்பிற்கு புதிய லோகோ, கூகுள் மேப்ஸில் ஸ்ட்ரீட் வியூ என வரிசையாக பல மேம்பாடுகளை நிகழ்த்திய வண்ணம் உள்ளது.

பெரிய காரணம் ஒன்றும் இல்லை - எல்லாம் ஒரு பயம் தான்!

கூகுளுக்கு என்னப்பா பயம்? உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனம் என்றால் அது கூகுள் தான், கூகுள் இல்லையேல் சகலமும் இல்லை என்று நாம் கூறலாம், ஆனால் கூகுளின் கஷ்டம் - கூகுளுக்கு தான் தெரியும்!

அப்படி என்ன தான் நடந்துட்டு இருக்கு?

அப்படி என்ன தான் நடந்துட்டு இருக்கு?

கடும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. கூகுள் நிறுவனமானது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற பிற ஆப்களிலிருந்து கடும் போட்டியை எதிர்கொள்கிறது.

கற்றல் முதல் பொழுதுபோக்கு வரை, நுகர்வோர்கள் வந்து சேரும் முதல் இடமாக "நான் தான்" இருக்க வேண்டும் என்று கூகுள் விரும்புகிறது. அந்த ஒரு காரணத்திற்காகவே தன்னால் முடிந்த எல்லாவற்றையும் நுகர்வோர்களுக்கு வழங்கி விட வேண்டும் என்கிற முனைப்பில், சமீப காலமாக "தீயாக" வேலை செய்து வருகிறது.

அதனொரு பகுதியாகவே கூகுள் மேப்ஸ், தாறுமாறான அம்சங்களை கொண்டு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமானது - லோக்கேஷன் ஷேரிங் நோட்டிபிக்கேஷன்ஸ் ஆகும்!

இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!

லோக்கேஷன் ஷேரிங் நோட்டிபிக்கேஷன்ஸ் என்றால் என்ன?

லோக்கேஷன் ஷேரிங் நோட்டிபிக்கேஷன்ஸ் என்றால் என்ன?

கூகுள் மேப்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'லோக்கேஷன் ஷேரிங் நோட்டிபிக்கேஷன்ஸ்' ஆனது மிகவும்
Functional ஆக மற்றும் Informative ஆக இருக்கிறது என்றே கூறலாம்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த புதிய அம்சம், யூசர்களின் "வருகை" மற்றும் "புறப்பாடு" தொடர்பான அறிவிப்புகளை பெற அனுமதிக்கும்.

புரியவில்லையா?

புரியவில்லையா?

விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், கூகுளின் அதிகாரப்பூர்வ பிளாக் போஸ்டின் படி, யாரேனும் ஒருவர் (குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரும் போது அல்லது (அவர் இருக்கும்) இருப்பிடத்தை விட்டு வெளியேறும்போது அது தொடர்பான நோட்டிபிக்கேஷன் உங்களுக்கு கிடைக்கும்.

இருப்பினும், இந்த அம்சம் செயல்பட, யூசர்கள் தங்கள் லோக்கேஷன் விவரங்களை மற்றொருவருடன் ஷேர் செய்ய வேண்டும் மற்றும் அந்த லோக்கேஷனிற்கான அலெர்ட்-ஐயும் செட் செய்ய வேண்டும்.

10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!

எடுத்துக்காட்டிற்கு...

எடுத்துக்காட்டிற்கு...

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஒரு தியேட்டருக்கு செல்கிறீர்கள் என்றால், அந்த இடத்திற்கான நோட்டிபிக்கேஷனை அவர்களுடன் பகிர வேண்டும் மற்றும் அலெர்ட்-ஐ எனேபிள் செய்ய வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்ட இடத்தை வந்து அடைந்ததும், அது தொடர்பான அறிவிப்பு உங்கள் நண்பர்களுக்கு கிடைக்கும். அதே போல உங்களுக்கு முன்னர், உங்கள் நண்பர்கள் தியேட்டருக்கு சென்றடைந்தால் அது தொடர்பான அறிவிப்பு உங்களுக்கு கிடைக்கும்; இதற்கு அவர்களும் நோட்டிபிக்கேஷனை எனேபிள் செய்து வைத்து இருக்க வேண்டும்.

அதேபோல, அவர்கள் குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியேறும்போதும் உங்களுக்கு அறிவிப்பு வரும்.

குழந்தைகளை ஈஸியாக கண்காணிக்க முடியும்!

குழந்தைகளை ஈஸியாக கண்காணிக்க முடியும்!

மேலே விளக்கப்பட்டபடி, ஷேர் செய்யப்பட்ட இடத்திலிருந்து யாராவது வெளியேறும்போதும், ​​அது தொடர்பான அறிவிப்பு உங்களுக்கு அணுக கிடைக்கும்.

இதன் மூலம், ஒரு நபர் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளார்கள் என்பதையும், அவர்கள் தவறான இடத்திற்கு செல்லவில்லை என்பதையும் நீங்கள் எளிமையாக அறிந்துகொள்ள முடியும்.

மேலும் உங்கள் நண்பர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்பதையும் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆகமொத்தம் பத்திரமாக வீட்டிற்கு வந்துவிட்டேன் என்கிற "Reached Safely" மெசேஜ்களுக்கு வேலை குறையும்!

சைலன்ட் ஆக Google பார்த்த வேலை; இந்தியாவிற்கு வந்தது Street View; யூஸ் செய்வது எப்படி?சைலன்ட் ஆக Google பார்த்த வேலை; இந்தியாவிற்கு வந்தது Street View; யூஸ் செய்வது எப்படி?

கூகுள் மேப்ஸ் அப்டேட் இதோடு நின்றுவிடவில்லை!

கூகுள் மேப்ஸ் அப்டேட் இதோடு நின்றுவிடவில்லை!

லோக்கேஷன் ஷேரிங் நோட்டிபிக்கேஷன்ஸ் அம்சத்துடன் சேர்த்து கூகுள் மேப்ஸில் 'ஏரியல் வியூ' காட்சிகள் மற்றும் "இன்னும் விரிவான" சைக்கிளிங் ரூட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஏரியல் வியூ அம்சம் ஆனது தற்போது வரை 100 லேண்ட்மார்க்-களுக்கு மட்டுமே என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள, சைக்கிளிங் ரூட்ஸ் அம்சம் ஆனது சைக்கிள் ஓட்டும் வழிகளைப் பற்றியது.

கூகுள் நிறுவனம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தன் மேப்ஸ் ஆப்பில் டர்ன்-பை-டர்ன் சைக்கிள் நேவிகேஷனை கொண்டுள்ளது. இப்போது அதில் - அதிக கார் போக்குவரத்தை எதிர்பார்க்கலாமா? எந்த வகையான சாலையில் பயணிக்க வேண்டும்? போன்ற தகவல்களை வழங்கும் படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Maps gets 3 New Features including Location Sharing Notifications Why it is Safe to use

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X