அட! ரூ.2000-க்குள் இப்படிலாம் கூட மொபைல் போன் கிடைக்குமா? சொல்லவே இல்ல!

|

"நண்பா! என்னோட மாத சம்பளமே ரூ.12,000 தான்.. இப்படி இருக்கும் போது.. என்கிட்ட வந்து ரூ.25,000 போன் வாங்குங்க.. ரூ.35,000 பட்ஜெட்ல வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்கள்னு பேசுறதால.. உங்களுக்கு எந்த புண்ணியமும் இல்லை. எனக்கு ஒரு புது போன் வேணும் தான்.. ஆனா அதோட விலை என் சம்பளத்துக்குள்ள இருக்கணும்!"

இதுதான் உங்களுடைய கோரிக்கை அல்லது மைண்ட் வாய்ஸ் என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

அட.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

அட.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

"என்ன? ரூ.2,000 க்குள் இப்படியெல்லாம் கூட மொபைல் போன்கள் கிடைக்கிறதா? இவ்வளவு நாட்களாக இது தெரியாமல் போய் விட்டதே!" என்று நீங்கள் நினைக்கும் படியான சில சூப்பர் பட்ஜெட் போன்களை தான் இங்கே பட்டியலிட்டு உள்ளோம்.

ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி ரூ.10,000 பட்ஜெட்டில் உள்ள எல்லா போன்களும் காலி.. இனி "இது" தான் மாஸ்!

ஆஃப்லைன் ஸ்டோர்களை தேடி அலைய வேண்டாம்!

ஆஃப்லைன் ஸ்டோர்களை தேடி அலைய வேண்டாம்!

இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், கீழ்வரும் எல்லா மாடல்களுமே அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது. ஆகையால் அவைகளில் ஒன்றை வாங்க, நீங்கள் ஆஃப்லைன் ஸ்டோர்களை தேடி அலைய வேண்டாம். வெறுமனே உங்களுக்கு பிடித்த மாடலை தேர்வு செய்து அதை ஆர்டர் செய்யவும்; அவ்வளவு தான்!

10. லாவா ஃப்ளிப் (Lava Flip)

10. லாவா ஃப்ளிப் (Lava Flip)

ஃபிளிப் போன்களை 'அவுட் ஆஃப் டிரெண்ட்' என்று யார் சொன்னது? அதுவும் ரூ.2,000 க்குள் வாங்க கிடைத்தால், இதை யாருக்கு தான் பிடிக்காது?

ஸ்டைல் ஆன டிசைன், 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளே, மேம்பட்ட VGA கேமரா என கலக்கும் இந்த சூப்பர் பட்ஜெட் போனின் விலை ரூ.1,699 மட்டுமே ஆகும்.

இது நியூக்ளியஸ் OS, 512 எம்பி ரேம், 1200mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் பேக் செய்கிறது.

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; வேற லெவல் டிமாண்டில் உள்ள லேட்டஸ்ட் Samsung போன்!

09. லாவா ஏ9 (Lava A9)

09. லாவா ஏ9 (Lava A9)

இந்த லாவா மொபைல் போன் - எளிமை மற்றும் நேர்த்தியின் கலவை ஆகும். இது கொடுக்கும் பணத்திற்கான மிகவும் 'வொர்த்' ஆன அம்சங்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற நல்ல ஸ்பீக்கருடன் வருகிறது. மேலும் இந்த மொபைலில் பல உள்ளூர் மொழிகளுக்கான ஆதரவும் உள்ளது. இதன் விலை ரூ.1,790 ஆகும்.

இது பார் ஃபோன் ஓஎஸ், 1700mAh பேட்டரி, 2.8 இன்ச் டிஸ்பிளே, ஃப்ளாஷ் உடனான 2 மெகாபிக்சல் ரியர் கேமரா போன்ற அம்சங்களையும் வழங்கும்.

08. டிஸோ ஸ்டார் 500 (DIZO Star 500)

08. டிஸோ ஸ்டார் 500 (DIZO Star 500)

Realme நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன டிஸோ, மலிவு விலையில் அசாதாரணமான மற்றும் தனித்துவமான அம்சங்களை கொண்ட தயாரிப்புகளை வழங்குவதற்காக அறியப்படுகிறது. அந்த பட்டியலில் Dizo Star 500 மாடலுக்கும் ஒரு இடமுண்டு. இதன் விலை ரூ.1,499 ஆகும்.

இது ஆண்ட்ராய்டு ஓஎஸ், 32 எம்பி ரேம், 1900mAh பேட்டரி, 2.8 இன்ச் அளவிலான டிஸ்பிளே, ஃப்ளாஷ் உடனான விஜிஏ கேமராவுடன் வருகிறது.

போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!போங்க.. எல்லாரும் போங்க! அழாத குறையாக Vodafone Idea செய்த காரியம்!

07. மைக்ரோமேக்ஸ் X818 (Micromax X818)

07. மைக்ரோமேக்ஸ் X818 (Micromax X818)

இந்திய பிராண்டான மைக்ரோமேக்ஸின் கீழ் வாங்க கிடைக்கும் பெஸ்ட் சூப்பர் பட்ஜெட் போனில் X818 க்கு நிச்சயம் ஒரு இடமுண்டு. இதன் விலை ரூ.1,474 ஆகும்.

இது Spreadtrum ஓஎஸ், 32 எம்பி ரேம், 1450mAh பேட்டரி, 2.8 இன்ச் டிஸ்பிளே, ஃப்ளாஷ் உடனான கேமரா போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

06. ஐடெல் இட்5626 (itel it5626)

06. ஐடெல் இட்5626 (itel it5626)

மெட்டாலிக் ஃபினிஷ் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் - இந்த பட்டியலில் உள்ள மிகவும் ஸ்டைலான மொபைல் இதுதான். இதன் விலை ரூ.1,729 ஆகும்.

இது நியூக்ளியஸ் ஓஎஸ், 4 ஜிபி ரேம். 2500mAh பேட்டரி, 2.8-இன்ச் டிஸ்பிளே, 32 ஜிபி ஸ்டோரேஜ், ஃப்ளாஷ் உடனான VGA ரியர் கேமரா போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

05. நோக்கியா 105 (Nokia 105)

05. நோக்கியா 105 (Nokia 105)

இந்த லிஸ்டில் நோக்கியா இல்லாமல் எப்படி? ஏனெனில் நோக்கியா என்றால் நம்பிக்கை. குறிப்பாக இந்த மாடல் ஒரு கலர்ஃபுல் ஆன போனை தேடும் பயனர்களுக்கானது. இதன் விலை ரூ.1,299 ஆகும்.

இது சீரீஸ் 30+ ஓஎஸ், 4 ஜிபி ரேம், 800mAh பேட்டரி, 1.8 இன்ச் டிஸ்பிளே, 32 ஜிபி ஸ்டோரேஜ் போன்றவைகளை பேக் செய்கிறது, இதில் கேமரா கிடையாது.

04. மோட்டோரோலா ஏ70 (Motorola A70)

04. மோட்டோரோலா ஏ70 (Motorola A70)

மோட்டோரோலா A70 - ஒரு ஸ்டைலான, நம்பகமான மற்றும் கச்சிதமான மொபைல் போன் ஆகும். சுவாரசியமாக ஒரு மீடியாடெக் ப்ராசஸர் உடன் வருகிறது மற்றும் நல்ல பெர்ஃபார்மென்ஸையும் வழங்குகிது. இதன் விலை ரூ.1,999 ஆகும்.

இது 32 எம்பி ரேம், 1750mAh பேட்டரி, 2.4 இன்ச் டிஸ்பிளே, 32 ஜிபி ஸ்டோரேஜ், ஃப்ளாஷ் உடனான 1.3 எம்பி ரியர் கேமரா போன்றவைகளையும் வழங்கும்.

03. லாவா ஜெம் (Lava Gem)

03. லாவா ஜெம் (Lava Gem)

பெயருக்கு ஏற்றபடி, லாவா ஜெம் நிச்சயமாக இந்த பட்டியலில் ஒரு "ரத்தினம்" தான். ஏனெனில் இது இராணுவ தர சான்றிதழ் உடன் நல்ல ஸ்டோரேஜ் மற்றும் வலுவான பேட்டரியையும் வழங்குகிறது. இதன் விலை ரூ.1,649 ஆகும்.

இது நியூக்ளியஸ் OS, 32 எம்பி ரேம், 1750mAh பேட்டரி, 2.8 இன்ச் டிஸ்பிளே, 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ், ஃப்ளாஷ் உடனான 1.3 எம்பி ரியர் கேமரா போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!

02. ஐகால் கே555 (IKALL K555)

02. ஐகால் கே555 (IKALL K555)

IKALL நிறுவனம் ஆனது, மலிவு விலையில் தரமான போன்களை வழங்கும் பிராண்டுகளின் வரிசையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் பெஸ்ட் போன்களில் ஒன்று - K555 மாடல் ஆகும். இதன் விலை ரூ.1149 ஆகும்.

இது 2.8 இன்ச் அளவிலான டிஸ்பிளே, சிம்பியன் 9.1 ஓஎஸ், 64 எம்பி ரேம், 64 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் (16 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது), 3000mAh பேட்டரி, ஃப்ளாஷ் கொண்ட 1 எம்பி ரியர் கேமரா, ப்ளூடூத், எம்பி3 பிளேயர் மற்றும் வயர்லெஸ் எஃப்எம் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

01. கெச்சோடா ஏ8 ( Kechaoda A8)

01. கெச்சோடா ஏ8 ( Kechaoda A8)

பெரிய கீபோர்ட், நல்ல டிசைன், நம்பகமான பேட்டரி என ரூ.2000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் பட்ஜெட் மொபைல் ஆக Kechaoda K8 மாடலை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதன் விலை ரூ.1499 ஆகும்.

இது 3.5 இன்ச் டிஸ்பிளே, சிம்பியன் 9.1 ஓஎஸ், 16 எம்பி ரேம், 64 எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் (32 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது), 2500mAh பேட்டரி, ஃபிளாஷுடன் கூடிய 0.3 எம்பி ரியர் கேமரா,ப்ளூடூத், எம்பி3 பிளேயர் மற்றும் வயர்லெஸ் எஃப்எம் போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

Photo Courtesy: Amazon India

Best Mobiles in India

English summary
Top 10 Best Budget Mobile Phones Under Rs 2000 Which You Can Buy Now in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X