வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!

|

"அடடா.. இது முதல்லயே தெரிஞ்சு இருந்தா.. இந்நேரம் 2, 3 ஸ்மார்ட் வாட்ச் வாங்கி.. வாரத்துக்கு ஒன்னுனு விதவிதமா போட்டு இருப்பேனே!" என்று 'கமெண்ட்' அடிக்க நீங்கள் தயாரா?

ஆம் என்றால்.. வாருங்கள்! சுற்றி வளைத்து கதை பேசாமல் நேரடியாக மேட்டருக்குள் செல்வோம். அதாவது வெறும் ரூ.1,000 க்குள் வாங்க கிடைக்கும் 8 பெஸ்ட் Smart Watch-களின் பட்டியலுக்குள் செல்வோம்!

(முன் குறிப்பு: நாம் கீழே காணும் எல்லா ஸ்மார்ட் வாட்ச்களுமே பிரபல இ-காமார்ஸ் தளங்களான Amazon மற்றும் Flipkart வழியாக வாங்க கிடைக்கிறது)

01. M1 ஸ்மார்ட் வாட்ச்

01. M1 ஸ்மார்ட் வாட்ச்

ரூ.1,000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு நல்ல ஸ்மார்ட் வாட்சை தேடும் போது, ​M1 Smart Watch ஆனது நிச்சயமாக சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும்.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- TFT-LCD 1.33 இன்ச் டிஸ்பிளே
- ஸ்லீப், ஸ்போர்ட்ஸ், மாதவிடாய் சுழற்சி மற்றும் பலவற்றை மானிட்டர் செய்யும்.
- அலாரங்களை செட் செய்யலாம்
- ஹார்ட் ரேட், ப்ளட் பிரெஷரை கண்காணிக்கலாம்
- ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு-க்கு இணக்கமானது.
- FitPro ஆப் வழியாக ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யலாம்
- IP68 "நீர்ப்புகா" தொழில்நுட்பம் உள்ளது; ஆக நீச்சலடிக்கும் போதும் பயன்படுத்தலாம்
- விலை ரூ.599

02. COOLMOBIX ID116 Plus ஸ்மார்ட் வாட்ச்

02. COOLMOBIX ID116 Plus ஸ்மார்ட் வாட்ச்

புதுமையான மற்றும் யூசர் பிரெண்டலி ஆன ஒரு ஸ்மார்ட் வாட்சை தேடுகிறீர்கள் என்றால் COOLMOBIX ID116 Plus ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கானது தான்.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- ஸ்லீப், ஸ்போர்ட்ஸ் செயல்பாடுகளை மானிட்டர் செய்யும்.
- ப்ளூடூத் கனெக்டிவிட்டி (ம்யூசிக்கை கண்ட்ரோல் செய்யலாம்)
- அதிக திறன் கொண்ட பேட்டரி
- ஃபுல் டச் எல்சிடி டிஸ்பிளே
- வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நோட்டிபிஃகேஷன்களை காட்டும்
- விலை ரூ.459

03. PepKoala T55 series 8 ஸ்மார்ட் வாட்ச்

03. PepKoala T55 series 8 ஸ்மார்ட் வாட்ச்

போன் கால்களை 'அட்டென்ட்' செய்யவும்.. உங்கள் வொர்க் லைஃப்-ஐ ஈஸியாக்கவும்.. சரியான தேர்வு என்றால் - அது PepKoala T55 series 8 ஸ்மார்ட் வாட்ச் தான்.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- வாட்ச் வழியாகவே போன் கால் பேசலாம்.
- பல வகையான ஸ்போர்ட்ஸ் மோட்கள்; அது தொடர்பான மானிட்டர்
- ம்யூசிக் கன்ட்ரோல்
- வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நோட்டிபிஃகேஷன்களை காட்டும்
- விலை ரூ.999

04. REEPUD DZ09 ஸ்மார்ட் வாட்ச்

04. REEPUD DZ09 ஸ்மார்ட் வாட்ச்

நீடித்த மற்றும் நம்பகமான செயல்திறன்.. ஸ்டைலான மற்றும் நவநாகரீக டிசைன் தான் உங்களின் முன்னுரிமை என்றால்.. REEPUD DZ09 ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கானது தான்!

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- இதிலுள்ள பெடோமீட்டர் உங்கள் ஒவ்வொரு அடியையும் மானிட்டர் செய்யும்
- ஸ்லீப் மானிட்டரும் உள்ளது
- ஸ்மார்ட்போனுடன் 'சிங்க்' செய்யலாம்
- வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நோட்டிபிஃகேஷன்களை காட்டும்
- இதன் இன்-பில்ட் மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது
- ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு-க்கு இணக்கமானது
- எல்சிடி டச் டிஸ்பிளே
- விலை ரூ.949

05. NEELTEX Y-68 plus ஸ்மார்ட் வாட்ச்

05. NEELTEX Y-68 plus ஸ்மார்ட் வாட்ச்

OLED டிஸ்ப்ளேவுடன் வரும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் வாட்சை தேடுகிறீர்கள் என்றால், NEELTEX Y-68 Plus ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- தினசரி நடவடிக்கைகளை மானிட்டர் செய்யும்
- போன் கால்கள் மற்றும் மெசேஜ்களுக்கான நோட்டிபிஃகேஷன்களை பெறலாம்
- Fitpro ஆப் வழியாக ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யலாம்
- ப்ளூடூத் ஆதரவும் உள்ளது
- ஹார்ட் ரேட் மற்றும் SPO2 அளவையும் கண்காணிக்கலாம்
- விலை ரூ.899

06. Elite T55 Series 5 ஸ்மார்ட்வாட்ச்

06. Elite T55 Series 5 ஸ்மார்ட்வாட்ச்

ரூ.1000 க்குள் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச்களில் Elite T55 சீரிஸ் 5 ஸ்மார்ட்வாட்ச் ஆனது மற்றொரு சிறந்த தேர்வாகும்.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- எல்லா செயல்பாடுகளையும் மானிட்டர் செய்யலாம்
- SPO2 மற்றும் ஹார்ட் ரேட்-ஐ கண்காணிக்கலாம்
- கால் அலெர்ட் மற்றும் மெசேஜ் நோட்டிபிஃகேஷன்களை காட்டும்
- நீண்ட நேர பேட்டரி லைஃப்
- விலை ரூ.999

07. VIMORK T55 ஸ்மார்ட் வாட்ச்

07. VIMORK T55 ஸ்மார்ட் வாட்ச்

ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்மார்ட் வாட்சை தேடுகிறீர்கள் என்றால் VIMORK T55 ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கானது தான்!

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- எல்லா செயல்பாடுகளையும் மானிட்டர் செய்யும்
- இலகுரக வடிவமைப்பை கொண்டுள்ளது
- ஹார்ட் ரேட் மானிட்டர்
- ப்ளட் ஆக்ஸிஜன் அளவையும் கண்காணிக்கும்
- ஸ்லீப் மானிட்டரும் உள்ளது
- விலை ரூ.955

08. Lastpoint Android ஸ்மார்ட் வாட்ச்

08. Lastpoint Android ஸ்மார்ட் வாட்ச்

பட்ஜெட் விலையில் ஒரு மல்டிஃபங்க்ஷன் ஸ்மார்ட்வாட்ச்சை தேடுகிறீர்கள் என்றால், Lastpoint android ஸ்மார்ட் வாட்ச் மாடல் தான் பெஸ்ட்!

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

- ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யலாம்
- இதில் ஸ்பீக்கர்போன் உள்ளது. எனவே போன் கால்களை மேற்கொள்ளலாம்; பேசலாம்.
- கூடவே உங்களுக்கு பிடித்த பிளேலிஸ்ட்டையும் கேட்கலாம்
- வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நோட்டிபிகேஷன்களை காட்டும்
- சவுண்ட் ரெக்கார்டர் உள்ளது
- அலாரமும் உள்ளது
- விலை ரூ.844.

Photo Courtesy: Amazon, Flipkart

Best Mobiles in India

English summary
Cheap But Best Budget Smart Watch Under Rs 1000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X