விண்வெளியில் "ஊசலாடும்" NASA-வின் ரூ.1000 கோடி! என்ன சோனமுத்தா போச்சா?

|

ஆரம்ப காலத்தில் இருந்தே, நாசாவிற்காக (NASA) அமெரிக்க அரசாங்கம் ஒதுக்கும் அளவிலான நிதி, இஸ்ரோவிற்கும் கிடைத்து இருந்தால்..

இஸ்ரோ (ISRO) - உலகளவில், விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியாக இருந்திருக்கும்; விண்வெளியின் பல எல்லைகளை தொட்டு பார்த்து இருக்கும்!

NASA-விற்கு மன உளைச்சல் கொடுத்த மங்கள்யான்!

NASA-விற்கு மன உளைச்சல் கொடுத்த மங்கள்யான்!

இஸ்ரோ இப்போதும் கூட ஒரு முன்னோடி தான் என்பதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு - மங்கள்யான் தான்!

ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுப்பதறகாக செலவு செய்யும் பட்ஜெட்டில் (ரூ.454 கோடி) செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் விண்கலத்தில் "ஏற்றிவிட்ட" பெருமை நம்ம இஸ்ரோவிடம் மட்டுமே உள்ளது!

மங்கள்யானின் மகத்தான வெற்றியை நினைத்து நாசா இன்னமும் கூட மன உளைச்சலில் இருக்கலாம்; ஏனெனில் நாசா, தன் மார்ஸ் மிஷன்களுக்காக பல ஆயிரம் கோடிகளை செலவழித்துள்ளது; செலவழிக்கிறது!

செவ்வாய் கிரகத்திற்காக மட்டுமல்ல..!

செவ்வாய் கிரகத்திற்காக மட்டுமல்ல..!

நாசா (NASA) என்று நன்கு அறியப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மட்டுமல்ல..

மனித இனத்தால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத எல்லைகளை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கும்.. பல வகையான விண்வெளி ஆராய்ச்சிகளுக்காகவும் பல நூறு கோடிகளை செலவழிக்கிறது!

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

அந்த பல கோடியில்..

அந்த பல கோடியில்.. "இந்த" ரூ.1000 கோடியும் அடக்கம்!

உங்களில் பலருக்கும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (James Webb Space Telescope) என்கிற பெயர் மிகவும் பரீட்சயமானதாக இருக்கும்.

ரூ.1000 கோடி செலவில் நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் & கனடிய விண்வெளி நிறுவனம் உருவாக்கிய இந்த விண்வெளி தொலைநோக்கி ஆனது, தற்போது பூமியிலிருந்து சுமார் 1,50,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது!

"ஊசலாடும்" ஜேம்ஸ் வெப்? என்ன சோனமுத்தா போச்சா?

மனித கண்களுக்கு புலப்படாத காட்சிகளை புகைப்படம் எடுத்து அனுப்பும் ஒரு "பொறியியல் அற்புதமாக" பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஆனது ஒரு தொழில்நுட்ப கோளாறில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!

"என்னது.. டெக்னீக்கல் ப்ராப்ளம்-ஆ? அப்போ.. அவ்ளோதானா? ரூ.1000 கோடி மதிப்புள்ள ஜேம்ஸ் வெப்பின் கதை முடிந்ததா?" என்று கேட்டால்.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!

70 ஆண்டுக்கு 1 முறை தான் 70 ஆண்டுக்கு 1 முறை தான் "இது" வானத்தில் தெரியும்! எப்படியாவது பார்த்துடுங்க!

தலைக்கு மேல்

தலைக்கு மேல் "நிரந்தரமாக" தொங்கும் ஒரு கத்தி!

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்க்கோப்பில் சிறிய அளவிலான தொழில்நுட்ப கோளாறே ஏற்பட்டுள்ளது. அது இந்த விண்வெளி தொலைநோக்கியின் மிட்-இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட்டில் (Mid-Infrared Instrument - MIRI) ஏற்பட்டுள்ளது!

இது விரைவில் சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் கூட, ஜேம்ஸ் வெப் டெலஸ்க்கோப் ஆனது மிகவும் கடுமையான, எப்போது என்ன நடக்கும் என்று கூறமுடியாத விண்வெளி சூழலில் இருப்பதால்.. அதன் தலைக்கு மேல் ஒரு கத்தி - நிரந்தரமாக -தொங்கிக்கொண்டே தான் இருக்கும்!

ரிப்பேர் ஆன மிட்-இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட்டின் வேலை என்ன?

ரிப்பேர் ஆன மிட்-இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட்டின் வேலை என்ன?

மிட்-இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட் என்பது 5 முதல் 28.3 மைக்ரான் வரையிலான மிட்-இன்ஃப்ராரெட் வேவ்லெங்த்-ஐ உள்ளடக்கிய ஒரு கருவிகளின் தொகுப்பாகும்.

புரியும்படி சொல்ல வேண்டும் என்றால்.. இதுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு இன்ஃப்ராரெட்-ஐ "பார்க்கும் திறனை" அளிக்கிறது.

இது வழியாகவே முன்னெப்போதும் இல்லாத 'ஷார்ப்னஸ்' மற்றும் 'சென்சிடிவ்' ஆன விண்வெளி புகைப்படங்கள் உருவாக்கப்படுகிறது!

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

இப்படி.. ரிப்பேர் ஆவது ஒன்றும் முதல் முறை அல்ல!

இப்படி.. ரிப்பேர் ஆவது ஒன்றும் முதல் முறை அல்ல!

ஆம்! ஜேம்ஸ் வெப் டெலஸ்க்கோப் ஆனது, இப்படி பழுதவடைவது ஒன்றும் முதல் முறையல்ல!

10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த விண்வெளி தொலைநோக்கி ஆனது - அதன் அறிவியல் செயல்பாடுகளை தொடங்கும் இறுதிக் கட்டத்தின் போது - மைக்ரோமீட்ராய்டு (micrometeoroid) மோதல் ஒன்றையும் சந்தித்து உள்ளது; அதாவது ஒரு மிகச்சிறிய விண்வெளி பாறையுடன் மோதியது!

அதற்கு பின் என்ன ஆனது?

அதற்கு பின் என்ன ஆனது?

நாசாவின் கூற்றுப்படி, அந்த "குட்டி" விண்வெளி பாறை ஆனது, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் ப்ரைமரி மிரர் செக்மென்ட்ஸ் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தவில்லை!

அப்படி ஏதேனும் நடந்து இருந்தால்.. ஒட்டுமொத்த உலகையே வியப்பில் ஆழ்த்தும் - ஜேம்ஸ் வெப்பின் - விண்வெளி புகைப்படங்களை நம்மால் பார்த்து இருக்கவே முடியாது!

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
NASA James Webb Space Telescope Facing Technical Problem

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X