Home
News

பூமி To மார்ஸ்.. செவ்வாய்க்கு ஹெலிகாப்டர் அனுப்பும் ISRO.. NASA-வை மிஞ்சுமா இந்தியாவின் சாதனை முயற்சி..

சந்திராயன்-4 (Chandrayaan-4) தொடர்பான சுவாரசியமான தகவல்கள் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, இஸ்ரோவின் மற்றொரு கனவு திட்டமான மங்கள்யான்-2 (Mangalyaan-2) என்ற செவ்வாய் கிரக திட்டம் (Mars Planet Mission) பற்றிய விபரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.

ISRO Update: இந்தியாவின் அடுத்த செவ்வாய் கிரக பயணத்தின் போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) இந்த முறை ஒரு புதிய ஹெலிகாப்டர் பெலோட் சாதனத்தை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, நாசா (NASA) விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் நோக்கிய அனுப்பிய இன்கேன்னுகிட்டி (Ingenuity) ட்ரோன் போன்ற சாதனத்தை இஸ்ரோ அனுப்பவுள்ளது.

பூமி To மார்ஸ்.. செவ்வாய்க்கு ஹெலிகாப்டர் அனுப்பும் ISRO..

இஸ்ரோவின் செவ்வாய் திட்டம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தற்போது ககன்யான் திட்டம் மற்றும் சந்திரயான்-4 திட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த வரிசையில் இஸ்ரோ செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கும் இந்தியாவின் 2வது திட்டத்தை 2030 ஆண்டில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை இஸ்ரோ இப்போதிலிருந்தே திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மங்கள்யான் (Mangalyaan): ரெட் பிளானட் அல்லது சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் மார்ஸ் (Mars) கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டம் "மங்கள்யான்" (Mangalyaan) என்ற பெயருடன் இஸ்ரோவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (MOM), நவம்பர் 2013 இல் விண்வெளி நோக்கி ஏவப்பட்டது. இது செப்டம்பர் 2014 இல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.

ஹெலிகாப்டர் டிரோன்: இந்த விண்கலம் எட்டு ஆண்டுகளுக்கு சிவப்பு கிரகத்தைச் சுற்றி சுற்றுப்பாதையில் சுற்றி வந்து, அந்த கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. இறுதியில் கடந்த 2022 இல் இந்த திட்டத்துடன் இருந்த தொடர்பை இஸ்ரோ இழந்தது. இந்த திட்டம் வெற்றியடைந்தது என்று கூறப்பட்டது. இதற்கு அடுத்தபடியான எதிர்கால செவ்வாய் கிரக திட்டத்தில் இஸ்ரோ ஒரு ஹெலிகாப்டர் டிரோனை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை எப்படி ஆராய்ந்து பார்க்கும்?

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் விண்வெளி இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி ஜெயதேவ் பிரதீப், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கத் திட்டமிடப்பட்ட ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தின் வான்வழி ஆய்வுக்கான பேலோடுகளின் தொகுப்பை எடுத்துச் செல்லும் என்று சமீபத்திய கலந்தாய்வில் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெலிகாப்டர் ட்ரோனுக்கான திட்டமிடப்பட்ட அறிவியல் பேலோடுகளில் வெப்பநிலை சென்சார், ஈரப்பதம் சென்சார், பிரஷர் சென்சார் போன்றவை இடம்பெறும்.

பூமி To மார்ஸ்.. செவ்வாய்க்கு ஹெலிகாப்டர் அனுப்பும் ISRO..

நாசா உருவாக்கிய ஹெலிகாப்டர் செவ்வாயில் என்ன செய்தது? அதேபோல், செவ்வாய் கிரகத்தின் காற்றின் வேக சென்சார், எலக்ட்ரிக் ஃபீல்ட் சென்சார் மற்றும் டஸ்ட் ஏரோசோல்களின் அளவை அளவிடும் சென்சார் போன்றவை இதில் இருக்கும். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை விவரிப்பதற்காக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 328 அடி (100 மீட்டர்) உயரம் வரை பறக்கும் திறன் கொண்டதாக வான்வழி வாகனமாக ஹெலிகாப்டர் டிரோன் திகழும்.

பெர்ஸெவேரன்ஸ் (Perseverance) ரோவர்: இதற்கு முன்பு, இங்கேன்னுகிட்டி அதன் மொத்த விமான நேரத்தின் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக 79 அடி (24 மீ) உயரத்தை எட்டியது மற்றும் 10.5 மைல் (17 கிலோமீட்டர்) கிடைமட்ட தூரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தின் ஜெஸெரோ பள்ளத்தில் நாசாவின் பெர்ஸெவேரன்ஸ் (Perseverance) ரோவருடன் இங்கேன்னுகிட்டி தரை இறங்கியது.

விரைவில் செவ்வாயில் இந்தியாவின் ஹெலிகாப்டர்: இது மெல்லிய செவ்வாய் வளிமண்டலத்தில் விமானப் பயணம் சாத்தியம் என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல், எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டியது. Ingenuity இன் பிரைம் மிஷன் ஐந்து தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் விமானங்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் 4-பவுண்டு (1.8 கிலோகிராம்) ஹெலிகாப்டர் 2024 ஜனவரியில் ரோட்டர்-பிளேடு சேதத்தால் நிரந்தரமாக தரையிறக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக இந்திய செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் டிரோனை பறக்கவிடவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO Update About Mangalyaan 2 The Mars Mission To Include Helicopter Drone To Visit Red Planet In 2030
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X