விக்ரம் லெண்டருடன் தொடர்பு ஏற்படுத்திய NASA ஆர்பிட்டர்.. என்ன நடந்தது? மீண்டும் கண்விழித்ததா விக்ரம் லேண்டர்?
பல மாத இடைவெளிக்கு பிறகு, மீண்டும் விக்ரம் லேண்டர் (Vickram Lander) குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டருடன் நாசா (NASA) விண்கலம் தொடர்பு ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சந்திரனின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தனது, கனவு திட்டமான சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இதில் இருந்த விக்ரம் லேண்டர் பத்திரமாகவும், வெற்றிகரமாகவும், நிலவின் தென் துருவத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் 23ம் தேதி தரையிறக்கியது.

நிலவில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் தொடர்ச்சியான முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டது. நிலவில் 14 நாட்கள் நடந்த தீவிரமான ஆராய்ச்சிக்கு பிறகு, நிலவில் தீவிரமான குளிர் காலம் துவங்கியதால், விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தூக்க நிலைக்கு அனுப்பப்பட்டது.
தூக்க நிலையில் இருந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டும் கண் விழிக்கப்படும் என்று நம்பப்பட்டது. இஸ்ரோ பலமுறை தொடர்பு செய்தும், லேண்டர் மற்றும் ரோவர் கண்விழிக்கவில்லை. இஸ்ரோ என்ன பணிக்காக நிலவுக்கு அனுப்பப்பட்டதோ அந்த ஆராய்ச்சிகளை முடிந்துவிட்டது. இந்த பயணம் வெற்றி பெற்றது என்று இஸ்ரோ தெரிவித்தது.
இந்த சாதனையின் அடையாள சின்னமாக இனி விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவில் ஓய்வு பெரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனலும், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியை இஸ்ரோ கைவிடாமல் இருந்தது. இப்போது நாசா வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவின் விக்ரம் லேண்டரை நாசா விண்கலம் தொடர்புகொண்டதாக கூறப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டருடன் லேசர் கற்றை மூலம் தொடர்பை ஏற்படுத்தியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரும் நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர் மூலம் (LRO) விக்ரம் லேண்டருடன் தொடர்பு மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளது. லேசர் சிக்னல் LRO-வில் இருந்து விக்ரம் லேண்டர் நோக்கிய அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சக்தி வாய்ந்த லேசர் சிக்னல் விக்ரம் லேண்டர் மேல் தெளிவாக பிரதிபலிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டரில் உள்ள லேசர் அல்டிமீட்டர் கருவி மூலம் இந்த லேசர் சிக்னல் உருவாக்கப்பட்டு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது 62 மைல் தொலைவு அல்லது 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து அனுப்பப்பட்டது என்று நாசா கூறியுள்ளது.
இந்த லேசர் சிக்னல் ஒளி விக்ரம் லேண்டரின் மீது பதிந்து, மீண்டும் அந்த ஒளி LRO ஆர்பிட்டர் நோக்கி பாய்ந்து, விக்ரம் லேண்டர் உடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர்பு மூலம், விக்ரம் லேண்டரில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டுமே உறக்கநிலையில் தான் இன்னும் உள்ளதென்பது கவனிக்கத்தக்கது.
இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம், இனி நிலவின் மேற்பரப்பில் உள்ள விஷயங்களை நம்மால் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








