Home
News

பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!

பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட இன்ஜெனியூட்டி மார்ஸ் ஹெலிகாப்டர் (Ingenuity Mars Helicopter) அசைவில்லாத நிலைக்கு சென்றுள்ளது. அதற்கு முன் பூமிக்கு கடைசி தகவலை அனுப்பி இருக்கிறது. 72 முறை பறந்த இந்த டிரோனுக்கு (Drone) என்ன நடந்ததது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமானது, (National Aeronautics and Space Administration - NASA) விண்வெளி ஆராய்ச்சில் அடுத்த கட்டத்தை எட்டிவிட்டது. வேற்று கிரகத்தில் கட்டுப்படுத்தக்கூடிய ஏர்கிராப்ட்டை தரையிறக்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த குட்பை.. அசைவின்றி போன..

இந்த ரோவருடன் டிரோன் அளவிலான இன்ஜெனியூட்டி மார்ஸ் ஹெலிகாப்டரும் அனுப்பி வைக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தின் (Mars) ஜெசெரோ க்ரேடர் (Jezero Crater) என்னும் பகுதியில் பறக்க தொடங்கிய இந்த ஹெலிகாப்டர் கிடைக்காத தகவல்களை சேகரித்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் 72 முறை பறந்து கிரக ஆராய்ச்சியை மேற்கொண்டது.

சொல்லப்போனால், ஜெசெரோ க்ரேடர் பகுதியில் இரவு நேரத்தில் மைனஸ் 130 டிகிரி பாரன்ஹீட் (மைனஸ் 90 டிகிரி செல்சியஸ்) வரையில் வெப்பநிலை குறைந்துவிடும். இவ்வளவு குளிரானது, இன்ஜெனியூட்டியின் பேட்டரிகளை சேதப்படுத்த கூடியது. 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி ரோவரில் இருந்து பிரிந்த முதல் நாளே இந்த குளிர் இரவில் இருந்து தப்பியது.

இப்படி காலையில் அதிகப்படியான வெப்பம், மாலைக்கு பிறகு அதிகப்படியான குளிர் போன்ற சவலான தட்பவெப்ப நிலையிலும் நாசா (NASA) ஆராய்ச்சியாளர்கள் நினைத்ததைவிட கூடுதலாக தாக்குப்பிடித்துள்ளது, இந்த இன்ஜெனியூட்டி மார்ஸ் ஹெலிகாப்டர். இதன் முதல் பயணம் சுமார் 423 அடிக்கு ஒருவழி பாதையில் இருந்தது.

பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த குட்பை.. அசைவின்றி போன..

பெர்சவரன்ஸ் ரோவர் செல்ல முடியாத பாதைகளை வான்வழியில் இருந்து கணிப்பது, வளிமண்டல உயரத்தில் இருந்து ஸ்டீரியோ இமேஜ்களை (Stereo Images) சேகரிப்பது, பூமியின் வளிமண்டலத்துக்கும் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்துக்கும் இருக்கும் வேறுபாடுகளை அறிவது உள்ளிட்ட பணிகள் இந்த இன்ஜெனியூட்டி மார்ஸ் ஹெலிகாப்டர் மூலம் செய்யப்பட்டது.

ஹெலிகாப்டரில் திடீர் சேதம்: ஜெசெரோ க்ரேடர் பகுதியின் எல்லைகளை வரையறை செய்து, எதிர்கால ஆராய்ச்சிக்கான தகவல்களை சேகரித்து வந்த இதன் பணி அடுத்த மைல் கல்லாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த ஜனவரியில் இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரின் ரோடார் பிளேட்களில் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சேதம் தரையிறங்கும்போது, ஏற்பட்டது அதன் பின் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அது தொடர்ந்து பறக்கும் திறனை இழந்தது. இதற்குள்ளாக 72 முறை பறந்து மிகப்பெரும் சாதனையை முடிந்துள்ளது. ஏனென்றால், இன்ஜெனியூட்டி மார்ஸ் ஹெலிகாப்டரானது, 30 நாட்களில் 5 முறை ஆய்வு பறத்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.

ஆனால், 3 ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் கிரத்தில் பறந்து விரிந்து ஆய்வுகளை செய்து முடித்திருக்கிறது. பூமியை தவிர மற்றொரு கிரகத்தில் கட்டுப்படுத்தக்கூடிய ஏர்கிராப்ட் என்ற பெருமையை இந்த இன்ஜெனியூட்டி மார்ஸ் ஹெலிகாப்டர் மட்டுமே பெற்றிருக்கிறது. இந்த ஹெலிகாப்டரில் பறக்கும் பயணம் ஜனவரி 25ஆம் தேதி அதிகாரப்பூர்வாக முடிவுக்கு வந்தது.

ஏப்ரல் 16ஆம் தேதி கடைசியாக சேமித்த தகவல்கள் அனைத்தும் அனுப்பிவிட்டு, பிரியாவிடை செய்தியையும் இன்ஜெனியூட்டி மார்ஸ் ஹெலிகாப்டர் குழுவினருக்கு தெரியப்படுத்தி இருக்கிறது. இருப்பினும், அதன் பயணம் முடியவில்லை. அது முற்றிலும் செயலிழக்கும் வரையில், செவ்வாய் கிரகத்தின் தரவுகளை சேகரித்துக்கொண்டே இருக்கும்.

ஆனால், அந்த தகவலை பூமிக்கு அனுப்ப முடியாது. இதனால், இன்ஜெனியூட்டி மார்ஸ் ஹெலிகாப்டர் குழுவினர் மட்டுமல்லாமல், நாசா ஆராய்ச்சியாளர்களும் அதற்கு லாங் குட்பை சொல்லி அதன் வெற்றிகரமாக பயணத்தை பாராட்டி மேற்கூறிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். மனித வரலாற்றில் முதல் வேற்று கிரக கட்டுப்படுத்தக்கூடிய ஹெலிகாப்டரின் பயணம் முடிவுக்கு வந்தது.

Image Credits: NASA

Best Mobiles in India

English summary
Ingenuity Mars Helicopter Sends Last Data With Farewell Message To NASA Mission Scientists From Mars
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X