அக்கட சூடு.. NASA-வை நக்கலாக ஓவர்-டேக் செய்த ISRO.. 1.5 மில்லியன் கிமீ உயரத்துல.. எப்போவோ செட் பண்ணியாச்சு!
ஏப்ரல் 8 ஆம் தேதியன்று நிகழும் அரியவகை முழு சூரிய கிரகணத்தை, பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்ய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தயார் நிலையில் உள்ளது. இதற்காக சூரிய கிரகணத்தின் போது 3 ராக்கெட்களை விண்ணில் ஏவவும் திட்டமிட்டுள்ளது.
ஏனெனில் இது மிகவும் அரியவகை விண்வெளி நிகழ்வாகும். இப்போது விட்டால்.. இப்படி ஒரு முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) அடுத்த 2044 ஆம் ஆண்டில் தான் நடக்கும். இந்நிகழ்வின் போது வட அமெரிக்காவின் சில பகுதிகள் இருளில் மூழ்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள நாசா (NASA) திட்டமிட்டுள்ளது.

நாசா மட்டுமல்ல, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (European Space Agency) உட்பட உலகின் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மையங்கள் ஆனது ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை ஆராய உள்ளன. நிலைமை இப்படி இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) எப்படி சும்மா இருக்கும்?
இஸ்ரோ என்ன செய்ய போகிறது? இனிமேல் எதுவும் செய்யப்போவதில்லை. ஏனென்றால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏற்கனவே எல்லாவற்றையும் 'செட்' செய்துவிட்டனர். அதுவும் பூமியில் இருந்தபடி அல்ல.. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் இருந்தபடி.. அதுதான் ஆதித்யா எல்1 விண்கலம் (Aditya L1 Spacecraft).

ஆம்! இந்தியாவின் சோலார் மிஷன் ஆன ஆதித்யா எல்1 விண்கலம் தான் ஏப்ரல் 8 ஆம் தேதி நடக்கும் சூரிய கிரகணத்தை கண்காணிக்க உள்ளது. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 (Lagrange Point 1 - L1) நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்திற்கு.. இந்த சூரிய கிரகணத்தை 'ட்ராக்' செய்வது அல்வா சாப்பிடுவது போல் இருக்கும்!
ஆதித்யா எல்1 விண்கலம் தன்வசம் கொண்டுள்ள 6 கருவிகளில் 2 கருவிகள் ஆனது கிரகணத்தை கண்காணிப்பதற்கான திறன்களை கொண்டுள்ளன. அந்த கருவிகள் - விஇஎல்சி (VELC) மற்றும் எஸ்யுஐடி (SUIT) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றன. விஇஎல்சி என்பதன் விரிவாக்கம் விசிபிள் எமிஷன் லைன் கோரோனோகிராஃப் (Visible Emission Line Coronagraph) என்பதாகும்.

இது சூரியனின் கரோனாவை அதன் வட்டில் அடைத்து ( Sun's corona by obstructing its disk) , விண்கலத்திலேயே ஒரு கிரகணமாக செயல்படும். எஸ்யுஐடி என்பதன் விரிவாக்கம் சோலார் அல்ட்ரா வயலெட் இமேஜிங் டெலெசிகோப் (Solar Ultraviolet Imaging Telescope) என்பதாகும். இது சூரிய ஒளிக்கோளம் (Solar Photosphere) மற்றும் புற ஊதா நிறமாலையின் (Near-ultraviolet spectrum.) அருகிலுள்ள குரோமோஸ்பியரின் (Chromosphere) புகைப்படங்களை கைப்பற்றும்.
நாசா என்ன செய்ய போகிறது? ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழும் முழு சூரிய கிரகணத்தின் போது வர்ஜீனியாவில் உள்ள அதன் வாலோப்ஸ் ஃபிளைட் ஃபெலிசிலிட்டியில் (Wallops Flight Facility) இருந்து மூன்று சவுண்டிங் ராக்கெட்டுகளை (Sounding Rockets) விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.

ஏபிஇபி (APEP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சவுண்டிங் ராக்கெட்களின் விரிவாக்கம் - அட்மாஸ்பியரிக் பெர்ட்ரப்ரேஷன்ஸ் அரவுண்ட் எக்லிப்ஸ் பாத் (Atmospheric Perturbations around Eclipse Path) என்பதாகும். பெயர் குறிப்பிடுவது போலவே இந்த ராக்கெட்டுகள் கிரகண பாதையை சுற்றியுள்ள வளிமண்டல இடையூறுகளை ஆராய்வதை நோக்கமாக கொண்டுள்ளன.
இந்த 3 ராக்கெட்டுகளும் ஏப்ரல் 8 ஆம் தேதி நடக்கும் முழு சூரிய கிரகணம் "உச்சம்" அடைவதற்கு (அதாவது சூரிய கிரகணம் முழுமையாக தெரியும்) 45 நிமிடங்களுக்கு முன்பும், முழுமையாக தெரியும் போதும் மற்றும் அதற்கு 45 நிமிடங்களுக்கு பிறகும்.. ஒவ்வொன்றாக விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதன் மூலம், குறிப்பிட்ட சூரிய கிரகணத்தின் போது சூரிய ஒளியின் திடீர் மங்கலானது (Sudden dimming of sunlight) எவ்வாறு அயனோஸ்பியரில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது (Impacts the ionosphere) மற்றும் தகவல்தொடர்புகளை சீர்குலைக்கும் இடையூறுகளை (Disrupt communications) தூண்டுகிறது என்பது பற்றிய தரவுகளை சேகரிக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி என்ன செய்ய உள்ளது? இஎஸ்ஏ (ESA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சோலார் ஆர்பிட்டர் (Solar Orbiter) ஆனது சமீபத்தில் தான் சூரியனுக்கு மிக நெருக்கமான அணுகுமுறையை நடத்தியது மற்றும் அதன் கருவிகளையும் ஆக்டிவேட் செய்திருந்தது. இதன் மூலம் நிகழும் சூரிய கிரகணத்தை ஒரு தனித்துவமான கோணத்தில் இருந்து அதனால் கண்காணிக்க. ஆராய முடியும்!


Click it and Unblock the Notifications