செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

|

செவ்வாய் (Mars) கிரகத்தை, சூரிய குடும்பத்தின் "சர்ச்சைக்குரிய கிரகம்" என்றே கூறலாம்.

ஏனென்றால், சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற எந்தவொரு "விண்வெளி பொருளை"க்காட்டிலும், செவ்வாய் தொடர்பான எந்தவொரு தகவலுமே, எந்தவொரு கண்டுபிடிப்புமே - மிகப்பெரிய பேசுபொருளாகி விடுகின்றன!

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்!

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்!

சமீபத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் பெர்சவரென்ஸ் ரோவர் (Perseverance rover) ஆனது செவ்வாய் கிரக பாறை ஒன்றில் ஓட்டை போட்டதும்..

..அதற்குள் ஆர்கானிக்-ரிச் மெட்டீரியல் (அதாவது செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான ஒரு ஆதாரம்) கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பேசுபொருளானது!

அதை தொடர்ந்து, தற்போது "செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்" அறிவியல் ஆர்வலர்கள் மத்தியில் சலசலப்பை கிளப்பி உள்ளது!

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

அதென்ன சத்தம்?

அதென்ன சத்தம்?

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தத்தை பற்றி அறிந்துகொள்ளும் முன், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் (NASA) இன்சைட் லேண்டரை (InSight lander) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால், செவ்வாய் கிரகத்தில் கேட்ட "அந்த சத்தத்தை" பதிவு செய்ததே நாசாவின் இன்சைட் லேண்டர் தான்!

இன்சைட் லேண்டரும்.. அதன் வேலையும்!

இன்சைட் லேண்டரும்.. அதன் வேலையும்!

Insight என்பது Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport சுருக்கம் ஆகும்!

அனைவருக்கும் புரியும்படி எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த 'ரெட் பிளானட்' (அதாவது செவ்வாய் கிரகம்) உருவானது தொடங்கி தற்போது வரையிலான, என்னென்ன விவரங்களை சேகரிக்க முடியுமோ அது தொடர்பான முழுமையான சோதனைகளை நிகழ்த்துவதே இன்சைட் லேண்டரின் முக்கிய வேலை ஆகும்!

சீனாவின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனிமேல் தான் உண்மையான ஆட்டமே இருக்கு!சீனாவின் அடுத்த மாஸ்டர் பிளான்! இனிமேல் தான் உண்மையான ஆட்டமே இருக்கு!

நான்கு முறை கேட்ட சத்தம்!

நான்கு முறை கேட்ட சத்தம்!

கடந்த மே, 2018 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு.. அதே ஆண்டு நவம்பர் மாத வாக்கில், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கிய இன்சைட் லேண்டர் ஆனது, அதன் ஆய்வு காலத்தின் ஒரு பகுதியாகவே "இந்த 4 சத்தங்களை" பதிவு செய்துள்ளது.

அந்த நான்குமே செவ்வாய் கிரகத்தின் மீது மோதிய விண்கற்களின் தாக்கத்தால் ஏற்பட்ட சத்தங்கள் ஆகும். அந்த நான்கு விண்வெளி பாறைகளுமே 2020 மற்றும் 2021-க்கு இடையில் விழுந்துள்ளன!

வேற்றுகிரகத்தில் இருந்து.. இதுவே முதல் முறை!

வேற்றுகிரகத்தில் இருந்து.. இதுவே முதல் முறை!

செவ்வாய் என்கிற "தரிசு உலகில்" அதன் இறுதி நாட்களை எதிர்பார்த்து கொண்டிருக்கும் இன்சைட் லேண்டர் ஆனது இப்படியொரு முக்கியமான தரவுகளை சேகரித்து இருப்பது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஏனென்றால், ஒரு வேற்றுகிரக உலகில் இருந்து இதுபோன்ற சத்தங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!

மாங்கு மாங்குனு

மாங்கு மாங்குனு "குத்து வாங்கும்" மார்ஸ்!

பூமியுடன் ஒப்பிடும் போது, செவ்வாய் கிரகமானது Asteroid belt-க்கு சற்றே நெருக்கமாக உள்ளது மற்றும் சற்றே மெல்லிய வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது.

இதன் காரணமாக - சில நேரங்களில் - சில விண்கற்கள் முழு வேகத்துடன் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை தாக்கும்.

இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறோம் - செவ்வாய் கிரகத்தின் கரடுமுரடான பள்ளம் நிறைந்த தோற்றத்திற்கு என்ன காரணம் என்று!

விழுந்த 4 விண்கற்களுமே?

விழுந்த 4 விண்கற்களுமே?

செவ்வாய் கிரகத்தின் மீது மோதிய நான்கு விண்கற்களுமே சிறிய அளவிலான நிலநடுக்கங்களையும் உருவாக்கி உள்ளன.

அந்த நான்கு விண்கற்களில் முதலாவது செப்டம்பர் 5, 2021 அன்று செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் நுழைந்துள்ளது; குறைந்தது மூன்று துண்டுகளாக வெடித்துள்ளது மற்றும் அவைகள் அனைத்துமே செவ்வாய் கிரகத்தில் பள்ளத்தையும் ஏற்படுத்தி உள்ளது!

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

ஓட்டை போட்டது போக... பச்சை நிறத்தினாலான மண்ணும் கண்டுபிடிக்கப்பட்டது!

ஓட்டை போட்டது போக... பச்சை நிறத்தினாலான மண்ணும் கண்டுபிடிக்கப்பட்டது!

மார்ஸ் பாறை ஒன்றில் ஓட்டை போட்டது போக.. நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பச்சை நிறத்தினாலான மண்ணையும் கண்டுபிடித்தது.

அது 'ஆலிவின்' துகள்கள் (Grains of Olivine) ஆகும். இது பூமியில் கிடைக்கும் ஜேம்ஸ்டோன் பெரிடோட்டின் (Gemstone peridot) ஒரு "வகை" ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
NASA InSight Lander Record The Sounds Of Space Rocks Which Crashed Into Mars

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X