70 ஆண்டுக்கு 1 முறை தான் "இது" வானத்தில் தெரியும்! எப்படியாவது பார்த்துடுங்க!

|

உங்களில் பலர்.. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெறும் 48 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தரும் காஞ்சிபுரம் அத்தி வரதரை, கடந்த 2019 ஆம் ஆண்டில் பார்த்து இருக்கலாம்.

மீதமுள்ளவர்கள் கேள்விப்பட்டு இருக்கலாம் அல்லது அடுத்த முறை அத்தி வரதர் "வெளிவரும்" போது, எப்படியாவது தரிசித்து விடலாம் என்கிற ஆசையை கொண்டிருக்கலாம்!

அத்தி வரதர் மட்டுமே நம்மை காத்திருக்க வைப்பதில்லை!

அத்தி வரதர் மட்டுமே நம்மை காத்திருக்க வைப்பதில்லை!

பல ஆண்டுகளுக்கு நம்மை காத்திருக்க வைத்து, ஒரு முறை மட்டுமே காட்சி தருவது அத்தி வரதர் மட்டுமே அல்ல. இன்னும் சில நிகழ்வுகளும் கூட பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும்.

அப்படியாக, இந்த 2022 ஆம் ஆண்டில், அதுவும் வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று, 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் "ஒரு விஷயம்" நிகழ உள்ளது; அதுவும் வானத்தில்!

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

இதுவொரு.. லைஃப்டைம் செட்டில்மென்ட் ஆகும்!

இதுவொரு.. லைஃப்டைம் செட்டில்மென்ட் ஆகும்!

சாமானியர்களுக்கு வேண்டுமானால் "இது" சாதாரணமான விஷயமாக தெரியலாம்.

ஆனால் அறிவியல் ஆர்வலர்களுக்கு, விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு, முக்கியமாக ஆஸ்ட்ரோ போட்டோகிராபர்களுக்கு "இது" ஒரு லைஃப்டைம் செட்டில்மென்ட் ஆகும்!

வானத்தில்.. அப்படி என்ன தெரிய போகிறது?

வானத்தில்.. அப்படி என்ன தெரிய போகிறது?

வானத்தில் ஜூப்பிட்டர் (Jupiter) தெரிய போகிறது. அதாவது வியாழன் கிரகமானது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பூமிக்கு மிகவும் நெருக்கமாக வர உள்ளது!

சரியாக செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று இந்த "ராட்சத வாயு கிரகம்", இதுவரை (நம்மில் பலரும்) கண்டிராத அழகை காட்சிப்படுத்த உள்ளது!

ஜூப்பிட்டர் கிரகத்தின் இந்த "நெருக்கம்" மிகவும் அரிது. எனவே இம்முறை, ஜூப்பிட்டர் நமக்கு அளிக்கும் காட்சிகள் மிகவும் அசாதாரணமாக இருக்கும்" என்று நாசா கூறி உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

நெருக்கமாக வரும் என்றால்.. எவ்வளவு நெருக்கமாக?

நெருக்கமாக வரும் என்றால்.. எவ்வளவு நெருக்கமாக?

செப்டம்பர் 26 ஆம் தேதியன்று, வியாழன் கிரகமானது பூமியிலிருந்து தோராயமாக 365 மில்லியன் மைல்கள் (அதாவது தோராயமாக 58 கோடி கிமீ) தொலைவில் இருக்கும்.

அறியாதோர்களுக்கு, ஜூப்பிட்டர் கிரகமானது, பூமியில் இருந்து அதிகபட்சமாக 600 மில்லியன் மைல் தொலைவு வரை செல்லும்!

இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியுமா?

இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியுமா?

வாய்ப்பே இல்லை! ஜூப்பிட்டர் கிரகம், பூமிக்கு மிக அருகில் வந்தாலும் கூட, ​​நம் கண்களுக்கும் ஜூப்பிட்டர் கிரகத்திற்கும் இடையே உள்ள தூரம் மிக மிக பெரியது.

எனவே இந்நிகழ்வை வெறும் கண்களால் பார்ப்பது மிகவும் கடினம். ஆனால் இதை பார்க்க ஒரு வழி இருக்கிறது!

விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

அதென்ன வழி?

அதென்ன வழி?

உங்களிடம் ஒரு டெலஸ்க்கோப் இருந்தால், நெருங்கி வரும் ஜூப்பிட்டரின் அழகை உங்களால் ரசிக்க முடியும்!

வானியற்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, 4-இன்ச் அல்லது அதை விட பெரிய டெலஸ்க்கோப் மற்றும் க்ரீன் முதல் ப்ளூ ரேன்ஜிலான சில பில்டர்ஸ் இருந்தால்.. உங்களால் இந்த "லைஃப்டைம் வியூ"வை பார்க்க முடியும்!

முடிந்தால் அந்த 53 நிலவுகளில் ஒன்றையும் பார்க்கவும்!

முடிந்தால் அந்த 53 நிலவுகளில் ஒன்றையும் பார்க்கவும்!

என்னது 53 நிலவுகளா? என்று ஷாக் ஆக வேண்டும். ஏனெனில் வியாழனின் பெயரிடப்பட்ட நிலவுகளின் (Jupiter's Named Moons) எண்ணிக்கை தான் - 53, ஆனால் விஞ்ஞானிகள் மொத்தம் 79 நிலவுகள் இருப்பதாக நம்புகிறார்கள்.

அந்த நிலவுகளில் மிகவும் பெரியது - அயோ (Io), யூரோபா (Europa), கேனிமீட் (Ganymede) மற்றும் காலிஸ்டோ (Callisto) ஆகும். இவைகள் அனைத்துமே கலிலியன் சாட்டிலைட்ஸ் (Galilean satellites) என்றும் அழைக்கப்படுகின்றன.

விண்வெளியில் சிக்கிய விண்வெளியில் சிக்கிய "சிலந்தி" உருவம்! புகைப்படம் எடுத்த நாசா!

ஆறு ஆண்டுகளாக வியாழனை

ஆறு ஆண்டுகளாக வியாழனை "சுற்றும்" நாசா!

ஆம்! கடந்த ஆறு ஆண்டுகளாக ஜூனோ (Juno) என்கிற விண்கலம் வியாழனை சுற்றி வருகிறது. இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு சொந்தமான விண்கலம் ஆகும்.

இது ஜூப்பிட்டர் கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் அதன் நிலவுகளை ஆராய்ந்து வருகிறது.

வியாழனை ஆய்வு செய்வதன் வழியாக, சூரிய குடும்பத்தின் உருவாக்கம் பற்றிய நம்பமுடியாத உண்மைகளை கண்டுபிடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
Jupiter To Come Very Close To Earth in Past 70 Years on September 26 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X