Home
News

NASA-க்கு நெத்தியடி.. 2024 ஆரம்பமே அதிரடி.. பிரபஞ்ச மர்மங்களை கட்டவிழ்க்கும் ISRO சாட்டிலைட்.. ஜன.1 பாய்ச்சல்!

இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது, 2024 புத்தாண்டை ஒரு சாதனை உடன் தொடங்குகிறது. ஜனவரி 1 ஆம் தேதி அன்று பிரபஞ்சத்தின் மர்மங்களை கட்டவிழ்க்ககும் ஒரு முக்கியமான செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது!

இதை முக்கியமான செயற்கைகோள் என்று அழைப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அது என்னவென்றால் ஜன.1 அன்று பாய்ச்சலை காணப்போகும் இஸ்ரோ செயற்கைகோள் ஆனது இந்தியாவின் முதல் எக்ஸ்-ரே பொலரிமீட்டர் சாட்டிலைட் (X-Ray Polarimeter Satellite) ஆகும். இது சுருக்கமாக எக்ஸ்போசாட் (XPoSat) என்றும் அழைக்கப்படுகிறது.

பிரபஞ்ச மர்மங்களை கட்டவிழ்க்கும் ISRO சாட்டிலைட்!

இந்தியாவின் இந்த முதல் எக்ஸ்போசாட் ஆனது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கு போட்டி என்று "வெளிப்படையாக" கூறிவிட முடியாது. இருப்பினும் கடந்த 2021 ஆம் ஆண்டில் தான் நாசா அதன் இமேஜிங் எக்ஸ்ரே பொலரிமெட்ரி எக்ஸ்ப்ளோரரை ( Imaging X-ray Polarimetry Explorer - IXPE) விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா-எல்1 மிஷன்களின் வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோ தனது முதல் எக்ஸ்போசாட்-ஐ விண்ணில் செலுத்துகிறது. இஸ்ரோவின் இந்த புதிய செயற்கைகோள் சரியாக எப்போது விண்ணில் ஏவப்படும்? இது என்னென்ன பேலோடுகளை கொண்டு செல்லும்? பிரபஞ்சத்தின் மர்மங்கள் தொடர்பான என்னென்ன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்? இதோ விவரங்கள்:

பிரபஞ்ச மர்மங்களை கட்டவிழ்க்கும் ISRO சாட்டிலைட்!

எப்போது விண்ணில் ஏவப்படும்? ஒட்டுமொத்த உலகமும் 2024 ஆம் ஆண்டின் விடியலை வரவேற்கும் நேரத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகள் சரியாக காலை 9:10 மணிக்கு, தங்களது முதல் எக்ஸபோசாட்-ஐ விண்ணில் செலுத்த உள்ளனர். இது சாட்டிலைட் இந்தியாவின் நம்பகமான போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (Polar Satellite Launch Vehicle - PSLV C58) மூலம் விண்ணில் செலுத்தப்படும்.

என்னென்ன பேலோடுகளை கொண்டு செல்லும்? இஸ்ரோவின் எக்ஸ்போசாட் ஆனது பிரபஞ்ச நிகழ்வுகளின் மர்மங்களை கட்டவிழ்ப்பதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன அறிவியல் பேலோடுகளை சுமந்து செல்லும். இந்த சாட்டிலைட்டின் முதன்மை பேலோட் - போலிக்ஸ் (POLIX - Polarimeter Instrument in X-rays). இரண்டாவது பேலோட் - எக்ஸ்பெக்ட் (XSPECT - X-Ray Spectroscopy and Timing).

பிரபஞ்ச மர்மங்களை கட்டவிழ்க்கும் ISRO சாட்டிலைட்!

என்னென்ன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்? எக்ஸ்போசாட்டின் ஆய்வுகளானது நமது பிரபஞ்சத்தின் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஒன்றான பிளாக் ஹோல்கள் (Black holes), அதாவது கருந்துளைகளில் இருந்து வெளிப்படும் சிக்கலான உமிழ்வு வழிமுறைகளை (Complex emission mechanisms) புரிந்துகொள்ள உதவும்.

பிளாக் ஹோல்கள் மட்டுமின்றி இஸ்ரோவின் இந்த செயற்கைகோள், நியூட்ரான் நட்சத்திரங்கள் (Neutron stars), செயலில் உள்ள விண்மீன் கருக்கள் (Active galactic nuclei) மற்றும் பல்சர் விண்ட் நெபுலாக்கள் (Pulsar wind nebulae) போன்ற வானியல் மூலங்களின் சிக்கலான உமிழ்வு வழிமுறைகளையும் புரிந்துகொள்ள உதவும்.

காலம் காலமான இந்த உமிழ்வுகளின் சரியான தன்மையை புரிந்துகொள்வதில் சவால்கள் நீடிக்கின்றன. இஸ்ரோவின் எக்ஸ்போசாட் ஆனது துருவமுனை அளவீடுகளை அறிமுகப்படுத்தி, துருவமுனைப்பின் அளவு மற்றும் கோணத்தின் வடிவத்தில் கூடுதல் பரிமாணங்களை வழங்குவதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த செயற்கைகோளின் வழியாக பல்வேறு கண்காணிப்பகங்களில் இருந்து ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் மற்றும் டைமிங் (Spectroscopic and Timing) டேட்டா போன்ற மதிப்புமிக்க நுண்ணறிவுகளும் இந்தியாவிற்கு கிடைக்கும். ஒட்டுமொத்தமாக பிளாக் ஹோல்கள் மற்றும் எக்ஸ்-கதிர்களை வெளியிடும் பிற வானியல் மூலங்கள் தொடர்பான அடுத்தகட்ட ஆராய்ச்சியை இஸ்ரோ முன்னெடுக்கும்.

ஏற்கனவே விண்வெளியில் உள்ள நாசாவின் எக்ஸ்போசாட் பிளாக் ஹோல்கள், நியூட்ரான் நட்சத்திரங்கள், பல்சர்கள், சூப்பர்நோவா எச்சங்கள் (Supernova Remnants,), குவாசர்கள் (Quasars) மற்றும் செயலில் உள்ள விண்மீன் கருக்கள் ஆகியவற்றின் காந்தப்புலங்களின் வரைபடத்தை (Mapping of the magnetic fields) உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO To Launch First X Ray Polarimeter Satellite XPoSat Using PSLV C58 on Jan 1 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X