திக் திக் நிமிடங்கள்! நடுநடுங்கி போன NASA.. 10 மீட்டர் கேப்பு.. ஆப்பு வைக்க பார்த்த ரஷ்யாவின் உளவு சாட்டிலைட்!
விண்வெளியை பொறுத்தவரை "எல்லாமே" ஆபத்து தான். ஸ்மால் ஸ்பேஸ் டெப்ரிஸ் (Small Space Debris) என்று அழைக்கப்படும் 1மிமீ அளவிலான அளவிலான மிகச்சிறிய விண்வெளி குப்பை கூட ஆபத்து தான். நிலைமை இப்படி இருக்கும் போது 2 செயற்கைகோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டால் என்னவாகும்?
அதுவும் உலகின் 2 முக்கியமான எதிரெதிர் நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 2 செயற்கைகோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டால் என்னவாகி இருக்கும்? கற்பனை செய்து பார்க்கும் போதே பயங்கரமாக இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு ஆபத்தான மோதல் - வெறும் 10 மீட்டர் இடைவெளியில் தவறியுள்ளது!

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியன்று, அதிகாலை 1.34 மணிக்கு விண்வெளியில் ஒரு மோசமான விபத்து நடந்திருக்க வேண்டியது. டைம்டு (Timed) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நாசாவின் விண்கலமும் (NASA Spacecraft), காஸ்மோஸ் 2221 (Cosmos 2221) என்கிற ரஷ்யாவின் உளவு செயற்கைக்கோளும் (Russian Spy Satellite) கிட்டத்தட்ட ஒன்றோடு ஒன்று மோதும் அளவிற்கு நெருக்கமாக வந்துள்ளது.
பின்னர், வெறும் 10 மீட்டர் என்கிற இடைவெளியில்.. நாசாவின் விண்கலமும், ரஷ்யாவின் செயற்கைகோளும் அதனதன் சுற்றுப்பாதையில் பாதுகாப்பாக கடந்து சென்றுள்ளன. நாசாவின் டைம்டு மற்றும் ரஷ்யாவின் காஸ்மோஸ் 2221 ஆகிய இரண்டுமே நான்-மெனுவுரபிள் சாட்டிலைட்கள் (Non-maneuverable Satellites) ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது "தரையில் இருந்தபடி கட்டுப்படுத்த முடியாத செயற்கைகோள்கள்" ஆகும்.

நான்-மெனுவுரபிள் சாட்டிலைட்களாக இருந்தாலும் கூட இவ்விரு செயற்கைக்கோள்களும் ஒன்றையொன்று நெருங்கும் அதே வேளையில், ஏற்கனவே கணிக்கப்பட்ட சுற்றுப்பாதை தெளிவாக இருந்ததாலும், இந்த பாதை படிப்படியாக உயரத்தில் நகரும் என்பதாலும்.. இந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாசாவானது இதை "மிகவும் நெருக்கமான" நகர்வு என்கிறது.
ஒருவேளை மோதி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இவ்விரு செயற்கைகோள்களுக்கான சுற்றுப்பாதை 10 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் இருப்பதை நாங்கள் சமீபத்தில் தான் கண்டறிந்தோம். ஒருவேளை இவ்விரு செயற்கைக்கோள்களும் மோதியிருந்தால்.. மணிக்கு 10,000 மைல் வேகத்தில் சிதறிய சாட்லைட் துண்டுகள் விண்வெளியில் வீசப்பட்டு இருக்கும், அது மற்றொரு விண்கலத்தில் துளையிட்டு மனித உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தி இருக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி, விண்வெளியில் அளவு என்பது ஒரு பொருட்டே அல்ல. ஒரு பென்சிலின் முனை அளவு உள்ள, மிகச்சிறிய பொருட்களால் கூட மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்த முடியும். நாசாவின் டைம்டு விண்கலம் நாசமாகி போயிருக்கும். நாசாவின் தெர்மோஸ்பியர் அயனோஸ்பியர் மெசோஸ்பியர் எனர்ஜிடிக்ஸ் அண்ட் டைனமிக்ஸ் மிஷன் (Thermosphere Ionosphere Mesosphere Energetics and Dynamics Mission) தான் டைம்டு என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
இது பூமியின் மீசோஸ்பியர் மற்றும் கீழ் தெர்மோஸ்பியர் / அயனோஸ்பியர் ஆகியவற்றில் சூரியனின் தாக்கம் மற்றும் மனித செயல்பாடுகளை ஆய்வு செய்வதை நோக்கமாக ஒரு நாசா மிஷனாகும். இப்பகுதி தான் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள ஒரு "நுழைவாயில்" ஆகும். இதுதான் சூரியனின் ஆற்றல் ஆனது பூமியின் சூழலை முதலில் சந்திக்கும் பகுதியாகும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏர் லீக்? நாசாவின் டைம்டு மற்றும் ரஷ்யாவின் காஸ்மோஸ் 2221 சாட்டிலைட்டின் மோதல் "இயற்கையாகவே" தடுக்கப்பட்டது ஒருபக்கம் இருக்க.. சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐஎஸ்எஸ்) ரஷ்ய பிரிவில் இருந்து தொடர்ந்து காற்று கசிவு ஏற்படுவதை ரஷ்ய விண்வெளி அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இருப்பினும், இது ரஷ்ய விண்வெளி வீரர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும், நிபுணர்கள் கசிவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கசிவு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் ராஸ்கோஸ்மோஸ் ஸ்டேட் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. அறியாதோர்க்ளுக்கு ராஸ்கோஸ்மோஸ் என்பது (இந்தியாவின் இஸ்ரோ, அமெரிக்காவின் நாசாவை போல) ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமாகும்.


Click it and Unblock the Notifications








