Home
News

NASA வுக்கு சரியான கூட்டாளி ISRO தான்.. ISS செல்லும் முதல் இந்திய வீரர் யார்? ISRO போட்ட மாஸ்டர் பிளான் என்ன?

சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station) விண்வெளியில் நிறுவுவதை நாசா (NASA) ஒரு கனவு திட்டமாக வைத்திருந்து. பல முயற்சிகளுக்கு பின் அது நிஜமானது. இப்போது, இந்தியா அதற்கு சொந்தமான இஸ்ரோ சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISRO) விரைவில் நிறுவப்போகிறது.

இந்தியா தனக்கு சொந்தமான விண்வெளி நிலையத்தை (India Space Station) அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டங்களை 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் செய்து முடிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்தியா அமைக்கவுள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கு, இந்திய விண்வெளி வீரர்களை (Indian Astronauts) அனுபவும் திட்டம் தீட்டி வருகிறது. இதற்கு முன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

NASAவுக்கு சரியான கூட்டாளி ISRO தான்.. ISS செல்லும் முதல் இந்திய வீரர்

விண்வெளி வீரர்களுக்கு தலைசிறந்த பயிற்சி வழங்க வேண்டும் என்றால், விண்வெளி ஆராய்ச்சியில் அதிக அனுபவம் கொண்ட நாடான அமெரிக்கவின் (America) உதவி கட்டாயம் இந்தியாவிற்கு தேவைப்படும். ஆம், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தொடர்பான பயிற்சிகளை இந்திய வீரர்களுக்கு நாசா (NASA) வழங்கவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக நாசாவும் இஸ்ரோவும் கைகோர்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய விண்வெளி நிலையம் (Indian Space Station):

இஸ்ரோவின் திட்டப்படி, வரும் 2035 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையத்தை அமைக்கவும், அதனை தொடர்ந்து 2040 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்திய வீரர்கள் அல்லது ஒரு இந்தியரையாவது நிலவுக்கு (Moon) அனுப்பவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் இப்போதிலிருந்தே துவங்கிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.

நாசாவின் நிர்வாக அதிகாரி பில் நெல்சன் (Bill Nelson) இதுகுறித்து கூறுகையில், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க நாசாவும் அமெரிக்காவும் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல், இஸ்ரோ திட்டமிட்டுள்ளபடி, அடுத்த ஆண்டு இறுதிக்குள், ஒரு இந்திய விண்வெளி வீரரை நாசா அதன் சொந்த ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

NASAவுக்கு சரியான கூட்டாளி ISRO தான்.. ISS செல்லும் முதல் இந்திய வீரர்

இந்த திட்டத்துடன் இணைந்து, இஸ்ரோ உருவாக்கவிருக்கும் அதன் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கவும் நாசா உதவி செய்யும் என்று அவர் கூறியுள்ளார். அதேபோல், எதிர்காலத்தில் இஸ்ரோவுடன் இணைந்து நாசா இன்னும் பல முக்கிய திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது என்றும் நாசா விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NISAR, வரும் 2024 முதல் காலாண்டில் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.

நாசா ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் (First Indian to fly to International Space Station by NASA rocket):

இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோ நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியாவிற்கு பெரும் சவால், அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்ப ஒரு தகுதியான விண்வெளி வீரரை இஸ்ரோ கண்டுபிடிக்க வேண்டும். இந்தியாவின் முதல் விண்வெளி வீரரை தேர்ந்தெடுக்கும் பணியிலும் நாசா பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் முதல் விண்வெளி வீரரை தேர்வு செய்யும் முயற்சியில் இஸ்ரோ இப்போது களமிறங்கியுள்ளது. இஸ்ரோ தனது பணிகளை மிகவும் வேகமாக நகர்த்தி வருகிறது. அதேபோல், இஸ்ரோவின் ககன்யான் (Gaganyaan mission) திட்டதின் முக்கியமான சேஃப்டி மாட்யூல் (safety module) சோதனையிலும் நாசா உதவவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பேட்டியலியளித்த பில் நெல்சன் நாசாவுக்கு 'இந்தியா தான் சிறந்த கூட்டாளி' என்று கூறியுள்ளார்.

இஸ்ரோவின் ககன்யான் திட்டம் பற்றி தெரியாதவர்களுக்கு, இந்த திட்டம் மூன்று நாள் விண்வெளி பயணத்தை அடக்கியது. விண்வெளியில் 400 கிமீ சுற்றுப்பாதையில், சுமார் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அனுப்பி, மனித விண்வெளிப் பயணத் திறனை நிரூபிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு சென்ற வீரர்களை இந்திய கடல் நீரில் தரையிறங்குவதன் மூலம் இந்த திட்டம் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO is the right partner for NASA says Bill Nelson and Who will be the first Indian to go to ISS details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X