இன்று பூமியைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் புவி காந்தப் புயல்.. புவி காந்தப்புயல் என்றால் என்ன தெரியுமா

|

மிதமான புவி காந்த புயலால் கிரகம் தாக்கப்பட்ட பூமி ஒரு வாரத்திற்குப் பிறகு, சூரியன் மீண்டும் புதிய சூரிய வெடிப்புகளை பூமியை நோக்கி வெளியேற்றியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், இதன் பாதிப்பு அபாயகரமானதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த தாக்கம் மிகவும் அபாயகரமானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், மிதமான புவி காந்த புயலால் ஏற்படக்கூடிய சிறியளவு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது," என விண்வெளி அறிவியலின் சிறப்பு மையம் இந்தியா ட்வீட் செய்துள்ளது.

சூரியன் மீண்டும் புதிய சூரிய வெடிப்புகளைப் பூமியை நோக்கி வெளியேற்றியுள்ளதா?

சூரியன் மீண்டும் புதிய சூரிய வெடிப்புகளைப் பூமியை நோக்கி வெளியேற்றியுள்ளதா?

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் உள்ள விண்வெளி அறிவியல் மையம் (CESS) சமீபத்தில் இந்த புதிய புவி காந்த புயல் தொடர்பான தகவலை ட்வீட் செய்துள்ளது. CESS வெளியிட்ட அறிக்கையின் படி பிப்ரவரி 6 அன்று வட்டு மையத்திற்கு தெற்கே சூரியனில் ஒரு இழை வெடிப்பு காணப்பட்டது. இந்த வெடிப்பு சோலார் மற்றும் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் (SOHO) மிஷன் பெரிய கோணம் மற்றும் ஸ்பெக்ட்ரோமெட்ரிக் கரோனாகிராஃப் (LASCO) தகவல் தெரிவிக்கிறது.

எவ்வளவு நேரத்தில் இந்த புயல் பூமியை தாக்கும்?

எவ்வளவு நேரத்தில் இந்த புயல் பூமியை தாக்கும்?

சூரியனை ஆய்வு செய்வதற்காக 1995 இல் தொடங்கப்பட்ட நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கூட்டுப் பணியான SOHO இருக்கிறது. சூரியனில் இருந்து வெளிவரும் வழக்கமாக கொரோனல் மாஸ் எஜெக்ஷன்களை (CMEs) இது அடையாளம் காட்டுகிறது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் ஒரு பகுதியான விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம், பூமிக்கு வரும் CMEகள் போதுமான வேகத்தில் இருந்தால் வெறும் 15 முதல் 18 மணி நேரத்தில் பூமியை அடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை தாக்கிய சூரிய புயல்: இப்படி செய்யும் நினைக்கவே இல்ல? ரேடியோ சேவைகள் நாக் அவுட்.. எங்கே தெரியுமா?பூமியை தாக்கிய சூரிய புயல்: இப்படி செய்யும் நினைக்கவே இல்ல? ரேடியோ சேவைகள் நாக் அவுட்.. எங்கே தெரியுமா?

CMEகள் என்றால் என்ன?

CMEகள் என்றால் என்ன?

CMEகள் சூரியனின் கரோனாவில் இருந்து உருவாகும் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களின் பெரிய வெளியேற்றங்கள் ஆகும். அவை சூரியனில் இருந்து வெளியில் பயணிக்கும்போது பில்லியன் கணக்கான டன் கரோனல் பொருட்களை வெளியேற்றும் திறன் கொண்டவை. இவை பயணிக்கும் வேகம் வினாடிக்கு 250 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் இருந்து கிட்டத்தட்ட 3000 கிமீ/வி வரை இருக்கும். பூமியை இயக்கும் வேகமான CMEகள் 15 முதல் 18 மணி நேரத்தில் பூமியை அடையும். மெதுவான CMEகள் வருவதற்குப் பல நாட்கள் கூட ஆகலாம்.

புவி காந்த புயல்கள் என்றால் என்ன?

புவி காந்த புயல்கள் என்றால் என்ன?

சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியாகும் கரோனல் மாஸ் எஜெக்ஷன் (சிஎம்இ) பூமியுடன் மோதும்போது, ​​அது புவி காந்தப் புயலை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புவி காந்த புயல்கள் பூமியின் காந்த மண்டலத்தின் முக்கிய இடையூறுகள். சூரியக் காற்றிலிருந்து பூமியைச் சுற்றியுள்ள விண்வெளிச் சூழலுக்கு மிகப்பெரிய ஆற்றல் பரிமாற்றத்தால் இது ஏற்படுகிறது. சோலார் ஃப்ளேர் எனப்படும் கதிர்வீச்சின் சக்திவாய்ந்த வெடிப்புகளால் தூண்டப்படுகிறது.

ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?

புவி காந்த புயல் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

புவி காந்த புயல் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

இது உயர் அதிர்வெண் ரேடியோ ஒளிபரப்பு மற்றும் குறைந்த அதிர்வெண் வழிசெலுத்தலைச் சீர்குலைக்கும். அவை பூமியின் காந்த மண்டலத்தில் நீரோட்டங்கள், பிளாஸ்மா மற்றும் புலங்களில் பெரிய மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்த வகுப்பின் புவி காந்த புயல் செயற்கைக்கோள் செயல்பாடுகளைச் சிறிய அளவில் பாதிக்கும். இது பவர் கிரிட்களில் சிறிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம். மேலும், இது அரோராக்கள் உயர் அட்சரேகைகளில் தெரியும்படி செய்யவும் வாய்ப்புள்ளது.

எப்போது இந்த புவி காந்த புயல் பூமியை இன்று தாக்கும்?

எப்போது இந்த புவி காந்த புயல் பூமியை இன்று தாக்கும்?

புவி காந்த புயல்களை உருவாக்குவதற்குப் பயனுள்ளதாக இருக்கும் சூரியக் காற்று நிலைகள் அதிவேக சூரியக் காற்றின் நீடித்த காலங்களாகும். தற்போதைய விண்வெளி சூழல் சாதாரணமாக இருந்தாலும், வரும் நாட்களில் M/X வகுப்பின் எரிப்புகளை CESS கணித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் நொடிக்கு 451 - 615 கிலோமீட்டர் வேகத்தில் மிதமான புவி காந்தப் புயலால் பூமி பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ்.. ஏர்டெல் வழங்கும் சிறந்த 1 ஆண்டு திட்டம்..ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ்.. ஏர்டெல் வழங்கும் சிறந்த 1 ஆண்டு திட்டம்..

புவி காந்தப் புயல் பூமியை தாக்கும் நேரம் இது தானா?

புவி காந்தப் புயல் பூமியை தாக்கும் நேரம் இது தானா?

புவி காந்தப் புயலுக்கான தற்காலிக நேரங்களையும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் படி, பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 11.18 மணி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி மாலை 3.23 மணி வரை இந்த புயல் நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னாள் ஏற்பட்ட புவி காந்த புயல் பூமி மற்றும் விண்வெளியில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதத்தில் முன்னர் பூமியைத் தாக்கிய புவி காந்த புயல் ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக ரேடியோ பிளாக் அவுட் விளைவை ஏற்படுத்தியுள்ளது.

40 செயற்கைக்கோள் புவி காந்த புயலால் சேதமடைந்தது

40 செயற்கைக்கோள் புவி காந்த புயலால் சேதமடைந்தது

அதுபோல், சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் சுமார் 40 செயற்கைக்கோள் புவி காந்த புயலால் சேதமடைந்துள்ளது என்று நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டார்லிங்க் சமீபத்தில் அதன் இன்டர்நெட் சேவையை உலகளவில் மலிவு விலையில் வழங்குவதற்காகவும், இருக்கும் இன்டர்நெட் சேவையை மேம்படுத்துவதற்காகவும் 49 புதிய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், சமீபத்தில் அனுப்பப்பட்ட 49 செயற்கைக்கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் புவி காந்த புயலால் சேதமடைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
What Is Geomagnetic Storm That Is Expected To Hit Earth Today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X