Home
News

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.. ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் மறு உருவமா இந்த 9 வயது குழந்தை.! அலறவிடும் உண்மைகள்.!

திறமை எங்கு புதைந்து கிடைக்கிறது என்பதை நம்மால் கணிக்க முடியாது. திறமை என்பதை ஒரு குறிப்பிட்ட வகையான வேலைக்கு மட்டும் தான் என்று குறுகிய வட்டத்திற்குள் நம்மால் சுருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் மக்களை அசர வைக்கும் திறமை இருக்கலாம்.

சில குழந்தைகளுக்கு வயதிற்கு மீறிய திறமை கூட இருக்கலாம். அப்படி ஒரு அதிசய குழந்தை தான் மெக்சிகோ நகரத்தை சேர்ந்த, அதாரா பெரஸ் சாஞ்செஸ் என்ற குழந்தை. 9 வயதே ஆகும் இந்த குழந்தைக்கு ஆட்டிசம் (Autism) அறிகுறிகள் உள்ளதாம். ஆட்டிசத்தில் பல வகைகள் உண்டு, பெரஸிற்கு இருக்கும் ஆட்டிசம் குறைபாடு மக்களுடன் இணங்க கடினமாக இருப்பது. சாதாரண மனிதர்களைப் போல மற்றவர்களுடன் பெரஸால் சகஜமாகப் பழக முடியாது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் மறு உருவமா இந்த 9 வயது குழந்தை

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் IQ-வை மிஞ்சிய 9 வயது குழந்தை.!

இதன் காரணமாக தனது பள்ளியில் கிண்டல் மற்றும் கேளிக்கு ஆளான பெரஸ், இப்போது இந்த உலகத்தையே தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார். படிப்பில் படுசுட்டியாக இருக்கும் பெரஸ் IQ தேர்வில் 162 மதிப்பெண் பெற்றுள்ளார். அமெரிக்காவின் புகழ் பெற்ற பீப்பிள் (PEOPLE) பத்திரிக்கை இந்தக் குழந்தையின் IQ-வானது புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்-இன் IQ-வை விட அதிகமாக உள்ளதாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வயதில் ஒரு டிஜிட்டாக (Digit) இருக்கும் இந்த குழந்தையின் IQ மூன்று டிஜிட்டாக உள்ளது என்று பீப்பிள் பத்திரிக்கை இந்த குழந்தைக்குப் புகழாரம் சூட்டியுள்ளது. அனைத்து மாணவர்களும் பயிலும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, பெரஸ் மற்ற மாணவர்களால் அதிக கேளிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார். மேலும், பெரஸ் வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை என்றும், அடிக்கடி பாடம் நடத்தும் பொழுது தூங்குகிறார் என்றும் ஆசிரியர்கள் அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் புத்திசாலித்தனமாக செயல்படும் பெரஸிற்கு அவர் பின்பற்றும் கல்விமுறை தான் பிரச்சனை என்று கண்டறிந்த அவரது பெற்றோர், ஆட்டிசம் குழந்தைகளைக் கவனமாக கையாளும் பிரத்தியேக கல்வி முறைக்கு அவரை மாற்றியுள்ளனர். அதன் பிறகு தான், பெரஸிற்கு இருக்கும் திறமை அவரது பெற்றோருக்கே தெரிய வந்துள்ளது. கல்வியில் அதிக ஆர்வம் கொண்ட பெரஸ் பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் மறு உருவமா இந்த 9 வயது குழந்தை

9 வயதிற்குள் பள்ளி முடித்து.. பல்கலைக்கழகம் சென்ற அதிசய குழந்தை.!

பெரஸ் மற்ற குழந்தைகளைப் போல் இல்லாமல் தன்னுடைய 5 வயதில் தொடக்கப்பள்ளியையும், 6 வயதில் மிடில் ஸ்கூலையும் (Middle School), 8 வயதில் ஹை ஸ்கூலையும் (High School) முடித்துள்ளார். இப்போது பெரஸ் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் (Systems Engineering) மற்றும் கணிதத்தில் (Mathematics) பட்டப்படிப்பு படித்து வருகிறாராம். இது மட்டுமின்றி பெரஸ் தனது அனுபவத்தை "டூ நாட் கிவ் அப்" (Do Not Give Up) என்ற பெயரில் ஒரு புத்தகமாகவும் எழுதி வருகிறார்.

ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கை வெளியிட்ட தகவலின் படி, மெக்சிகோவின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் என்ற பட்டியலில் இடம்பெற்ற பெரஸிற்கு, நாசாவின் (NASA) கீழ் விண்வெளி வீராங்கனை (Astronaut) ஆக பணியாற்றி, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல வேண்டும் என்பது தான் லட்சியமாம்.

பெரஸின் வாழ்க்கை வரலாற்றையும், ஆஸ்ட்ரானட் (Astronaut) ஆக வேண்டும் என்ற அவரது கனவையும் தெரிந்து கொண்ட அரிசோனா பல்கலைக்கழகத்தின் (University of Arizona) தலைவர் ராபர்ட் ராபின்ஸ் (Robert Robbins) தனது பல்கலைக்கழகத்தில் பெரஸ் விண்வெளி சார்ந்த படிப்புகளைப் படிக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பெரஸ் இப்போது ஆங்கிலம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் மறு உருவமா இந்த 9 வயது குழந்தை

9 வயது குழந்தை உருவாக்கிய ஸ்பெஷல் சாதனம் என்ன தெரியுமா?

இது மட்டுமின்றி, தன்னை போன்ற ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் பயனடையும் வகையில் ஸ்மார்ட் பிரேஸ்லெட் (Smart Bracelet) ஒன்றை பெரஸ் உருவாக்கி வருகிறார். இந்த பிரேஸ்லெட் அதை அணிந்திருக்கும் குழந்தைகளின் உணர்ச்சிகளைக் கண்டறிந்து சொல்லும் என்று பெரஸ் கூறியுள்ளார். இந்த பிரேஸ்லெட்டில் இருந்து வரும் சிக்னலை பெற்றோர்கள் தங்களது போன், டேப்லெட் அல்லது கம்ப்யூட்டர் என்று எதில் வேண்டுமானாலும் இணைத்து, தங்களது குழந்தைகளின் உணர்ச்சிகளைத் தெரிந்து கொள்ளலாம்.

இது ஆட்டுசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், அவர்களை கையாள சிரமப்படும் பெற்றோர்களுக்கும் மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என்றும் பெரஸ் கூறியுள்ளார். அல்பெர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போல இவரும் தனக்கான ஒரு சிறப்புமிக்க இடத்தை இவர் உருவாக்குவார் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
9-Year-Old Girl With Autism Has IQ Higher Than Albert Einstein and Stephen Hawking
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X