Home
News

ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?

ஆதார் அட்டை இந்தியாவில் மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் அட்டை என்பது இந்த நாட்களில் கிட்டத்தட்ட இப்போது எல்லா இடங்களிலும் தேவைப்படும் மிக முக்கியமான அடையாள அட்டையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்த அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் மிக முக்கியமானது.

ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை எப்போதும் அப்டேட்டில் வைத்திருக்க வேண்டுமா?

ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை எப்போதும் அப்டேட்டில் வைத்திருக்க வேண்டுமா?

இந்த தகவல் எல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, ஆனால், இந்த ஆவணத்தில் உள்ள தகவல்களை நீங்கள் ஏன் எப்போதும் அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் ஆடையில் உள்ள ஆதார் எண் நிரந்தரமானது, அதில் உங்களால் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவோ அல்லது மாற்றம் செய்ய வலியுறுத்தவோ முடியாது. இது இறுதி வரை நிலையானது. ஆனால், சில ஆதார் அட்டை பயனர்களின் முகவரி, புகைப்படம், முக்கியமாக மொபைல் எண் போன்ற தகவலை மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆதாரில் முகவரி மாற்றம் மற்றும் மொபைல் எண் மாற்றம்

ஆதாரில் முகவரி மாற்றம் மற்றும் மொபைல் எண் மாற்றம்

குறிப்பாக வாடகை வீட்டில் வசிக்கும் ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டை மாற்றம் செய்யும் போது, அவர்களின் எதிர்கால தேவைக்காக அவர்களுடைய ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றம் செய்ய வேண்டியது உள்ளது. இது பெரும்பாலும் குறைந்தளவில் மட்டுமே நடக்கக்கூடிய நிகழ்வாக இருக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை பயனர்களின் மொபைல் எண்கள் தான் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆதார் பதிவு செய்யும் போது வழங்கப்பட்டப் பழைய மொபைல் எண்களை இப்போது பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.

ஆதார் மொபைல் எண்களை மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

ஆதார் மொபைல் எண்களை மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

இவர்களின் தேவையை அறிந்த ஆதார் ஆணையம், உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களை மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. இதை நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து மாற்றலாம். எளிமையாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக நீங்கள், உங்களுடைய மொபைல் எண் மாற்றத்திற்காக விண்ணப்பிக்க முடியாது என்பதை கருத்தில்கொள்ளுங்கள். சரி, இப்போது எப்படி உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள பழைய மொபைல் எண்ணை புதிய மொபைல் எண்ணிற்கு மாற்றம் செய்வது என்று பார்க்கலாம்.

வங்கி சேவைக்கு ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் எவ்வளவு முக்கியமானது?

வங்கி சேவைக்கு ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் எவ்வளவு முக்கியமானது?

உங்கள் மொபைல் எண், உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதார் அட்டை மேலாண்மை ஆணையமான இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) தரவுத்தளத்தில் உங்கள் மொபைல் எண் சரியாக தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. உதாரணமாக, நீங்கள் புதிய வங்கிக் கணக்கைத் தொடங்கினால் அல்லது கடனுக்கு விண்ணப்பித்தால், உங்கள் ஆதார் அட்டையை உங்கள் மொபைல் எண்ணுடன் வங்கி விபரங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

KYC அடிப்படையிலான ஆன்லைன் சேவைக்கு மொபைல் எண் சரியாக இருக்க வேண்டுமா?

KYC அடிப்படையிலான ஆன்லைன் சேவைக்கு மொபைல் எண் சரியாக இருக்க வேண்டுமா?

பல KYC அடிப்படையிலான ஆன்லைன் சேவைகளுக்கு, உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள் சேர்த்து இணைக்க வேண்டும் என்பதையும் கவனத்தில்கொள்ளுங்கள். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை சில காரணங்களால் நீங்கள் மாற்றியிருந்தால், அது உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் UIDAI மற்றும் உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் மூலம் விவரங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கிறது.

மொபைல் எண்ணை மாற்றத்திற்கான அனுமதி விண்ணப்பத்தை ஆன்லைனில் பெறலாமா?

மொபைல் எண்ணை மாற்றத்திற்கான அனுமதி விண்ணப்பத்தை ஆன்லைனில் பெறலாமா?

முன்பே சொன்னது போல, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்ய நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். ஆனால், இதற்கான அனுமதி விண்ணப்பத்தை நீங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம். அதாவது, நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் சென்று மொபைல் எண்ணை மாற்றம் செய்வதற்கான நேரடி அனுமதியை முன்கூட்டியே முன்பதிவு செய்து நேரில் சென்று, காத்திருக்காமல் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான செயல்முறைகள்

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான செயல்முறைகள்

  • முதலில் https://uidai.gov.in இல் உள்ள அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் சந்திப்பு போர்ட்டலுக்குச் செல்லவும்.
  • அல்லது URL பெட்டியில் https://appointments.uidai.gov.in/bookappointment.aspx என்ற URL ஐ உள்ளிடவும்.
  • உங்கள் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து, ஆதார் சேவா கேந்திராவில் 'அபாயின்ட்மென்ட்டை முன்பதிவு செய்' என்பதை கிளிக் செய்யவும்.
  • ஆதார் புதுப்பிப்பு / திருத்தம் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து விவரங்களை உள்ளிடவும்.
  • எப்போது உங்கள் மொபைல் எண் மாற்றம் செய்யப்படும்?

    எப்போது உங்கள் மொபைல் எண் மாற்றம் செய்யப்படும்?

    • சந்திப்பு நேரத்தில் உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் ஆதார் நிர்வாகியிடம் படிவத்தை வழங்கவும்.
    • ஆதார் அட்டை மொபைல் எண் மாற்றும் சேவைக்குப் பணம் செலுத்துங்கள்.
    • நிர்வாகத்திடம் இருந்து URN உடன் ஒப்புகை சீட்டைப் பெறுவீர்கள்.
    • மொபைல் எண் மாற்றக் கோரிக்கையின் நிலையைச் சரிபார்க்க URN ஐப் பயன்படுத்தவும்.
    • உங்கள் மொபைல் எண் 3 மாதங்களுக்குள் புதுப்பிக்கப்படும்.
    • ஆதார் புகைப்படத்தையும் மாற்றம் செய்ய முடியுமா?

      ஆதார் புகைப்படத்தையும் மாற்றம் செய்ய முடியுமா?

      நீங்கள் வங்கியில் இருந்து புதிதாக ஒரு வங்கி கணக்கைத் துவங்கப் போகிறீர்கள் என்றாலோ அல்லது வங்கியிடம் இருந்து கடன் வாங்க திட்டமிட்டிருந்தாலோ முதலில் உங்கள் KYC சரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால், முடிந்த வரை புது எண்ணை மாற்றம் செய்யத் திட்டமிருந்தால், அதை உடனே செய்திருங்கள். இதேபோல், ஆதார் அட்டை பயனர்கள் உங்களின் ஆதார் அட்டையில் மோசமாக உள்ள புகைப்படங்களையும் மாற்றம் செய்துகொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை எப்படி மாற்றம் செய்வது என்பது பற்றி அறிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Change Phone Number On Aadhaar Card : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X