உலகின் மிக நீளமான 10 பாலங்கள்.! மனுஷனாயா நீங்கலாம் என்று வியக்க வைக்கும் கட்டுமானங்கள்.!
பயணங்களை சுலபமாக்குவதில் பாலங்களுக்கு (Bridges) பங்கு அதிகம். எந்தவிதமான இடையூறும் இல்லாமல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பாலங்கள் மிகவும் உதவிக்கரமாக இருக்கும். குறிப்பாக பள்ளத்தாக்குகள், கடல், ஆறு போன்ற கடக்க முடியாத பகுதிகளை தாண்டி செல்ல பாலங்கள் உதவி செய்துள்ளன.
சாதாரண கட்டிடங்கள் போல பாலங்களை கட்டுவது சுலபமான காரியம் இல்லை. ஒரு தரை தளத்தில் பாலம் கட்டும் பொழுது பல காரணிகளை மனதில் கொண்டு வடிவமைக்க வேண்டும். கடல் அல்லது பள்ளத்தாக்குகளைக் கடக்கும் பாலங்களை உருவாக்குவது அதைவிடக் கடினம்.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிக நீளமான பாலங்கள்.!
அந்தப் பாலத்தில் ஒரே சமயம் செல்லும் நூற்றுக்கணக்கான வாகனம் மற்றும் அதனுள் பயணிப்பவர்களின் எடை என்று அனைத்தையும் தாங்கும் வகையில் பாலம் அமைய வேண்டும். வாகனம் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும் வகையில் பாலம் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க வேண்டும். இதைத் தொழில்நுட்பத்தின் உதவி உடன் சிறந்த வடிவமைப்பை மனிதர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
ஆனால் இந்த சிரமங்களையும் தாண்டி, உலகில் மிக நீளமான பாலங்கள் (World's longest bridges) கடல் களைத் தாண்டியும், பரபரப்பான சாலைகளுக்கு இடையிலும், அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. இப்படி மனிதர்களால், வியக்கத்தகு வகையில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பாலங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த பாலங்கள் எந்த நாட்டில், எவ்வளவு தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம் வாங்க.
1. மேன்சாக் ஸ்வாம்ப் பிரிட்ஜ் (Manchac Swamp Bridge)
இந்த பாலம் அமெரிக்காவின் லூயிசியானா (Louisiana) நகரத்தில், மௌரேபஸ் (Maurepas) ஏரிக்கு இடையே 36km நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
2. வூஹான் மெட்ரோ ப்ரிட்ஜ் (Wuhan Metro Bridge)
கொரோனாவிற்கு பெயர்போன சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஹுவாங்பு மற்றும் சாங்குவான் (Huangpu and Zongguan) நிலையத்தில் ப்ரிட்ஜ் அமைந்துள்ளது. வூஹானின் முதல் எலிவேட்டட் மெட்ரோ லைனான (Elevated Metro Line) இந்த பாலம் 37km நீளம் கொண்டது.

3. லேக் பான்ட்சார்ட்ரெய்ன் காஸ்வே (Lake Pontchartrain Causeway)
தி காஸ்வே (The Causeway) என்று கூறப்படும் லேக் பான்ட்சார்ட்ரெய்ன் காஸ்வே பாலம், அமெரிக்காவின் லூசியானா நகரத்தில் 1956 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இது 38 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பாலத்தில் பயணிக்கும் பொழுது கண்ணுக்கு எட்டும் தூரம் வரை வெறும் தண்ணீர் மட்டுமே தெரியுமாம்.
4. பெய்ஜிங் க்ராண்ட் ப்ரிட்ஜ் (Beijing Grand Bridge)
சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் அமைந்துள்ள பெய்ஜிங் க்ராண்ட் ப்ரிட்ஜ், இது சுமார் 48km நீளம் கொண்ட ஒரு ரயில்வே பாலம் ஆகும். பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரத்தை அதிவேக ரயில் கொண்டு இணைத்த முதல் பாலம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
5. பாங்க் நா எக்ஸ்ப்ரஸ்வே (Bang Na Expressway)
தாய்லாந்து நாட்டின் பாங்காக் (Bangkok) நகரத்தில் பேங்க் நா (Bang Na) மற்றும் சோன் பூரி (Chon Buri) இன்டர்சேஞ்ச் (Interchange) இரண்டையும் இணைக்கும் விதத்தில் 54km நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு வரை உலகின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை இந்த பாலம் பெற்றிருந்தது.
6. வைனன் வேஹ் க்ராண்ட் ப்ரிட்ஜ் (Weinan Weihe Grand Bridge)
சீனாவின் வைனனில் ஜெங்சூ (Zhengzhou) மற்றும் சியான் (Xi'an) நகரத்தை இணைக்கும் வகையில் வே (Wei) ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுளந்து இந்த பாலம். இது 79km நீளம் கொண்டது. இந்த பாலம் 2010ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.

7. டியான்ஜின் க்ராண்ட் ப்ரிட்ஜ் (Tianjin Grand Bridge)
சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் 113km நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு மிக நீளமான பாலம் தான் இந்த டியான்ஜின் க்ராண்ட் ப்ரிட்ஜ். இந்தப் பாலத்தில் உள்ள 33 பகுதிகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டு பிறகு ஒன்றாக இணைக்கப்பட்டது. பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் பாலங்களில் இந்தப் பாலமும் ஒன்று.
8. கேங்டே க்ராண்ட் ப்ரிட்ஜ் (Cangde Grand Bridge)
பெய்ஜிங்-ஷாங்காய் நகரங்களை இணைக்கும் மூன்றாவது அதிக நீளம் கொண்ட பாலம் இந்த கேங்டே க்ராண்ட் ப்ரிட்ஜ். 116km நீளம் உள்ள இந்த பாலத்தை சுமார் 3092 தூண்கள் தாங்கிக்கொண்டு நிற்கின்றன. நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பாலம் உறுதியான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
9. சாங்குவா-கௌஷங் வயடக்ட் (Changhua-Kaohsiung Viaduct)
தாய்வானின் அதிவேக ரயில் சேவையின் ஒரு பகுதி இந்த சாங்குவா-கௌஷங் வயடக்ட். வயடக்ட் என்பது எண்ணற்ற தூண்கள் அல்லது ஆர்ச்களால் (Arch) தாங்கி நிறுத்தப்பட்டுள்ள பாலங்களை குறிக்கும். 157km நீளமுள்ள இந்த பாலமும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
10. தி டான்யாங்-குன்ஷான் கிராண்ட் ப்ரிட்ஜ் (The Danyang-Kunshan Grand Bridge)
உலகின் அதிநீள பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த 164km நீளமுள்ள தி டான்யாங்-குன்ஷான் கிராண்ட் ப்ரிட்ஜ். சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த பாலம் ஷாங்காய் மற்றும் நாஞ்சிங் (Nanjing) நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இது தான் மிகவும் நீளமான பாலமாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications