பூமியை தாக்கிய சூரிய புயல்: இப்படி செய்யும் நினைக்கவே இல்ல? ரேடியோ சேவைகள் நாக் அவுட்.. எங்கே தெரியுமா?
நமது சூரியன் இப்போது மிகவும் வன்முறையான ஒரு சூரிய சுழற்சியைக் கடந்து செல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் வெகு தொலைவில் அமைத்திருக்கும் பூமியிலும் உணரப்படுகின்றன. சூரியனின் வெளிப்புற அடுக்கு சமீபத்தில் கொதித்தது, கடந்த மாதம் ஜனவரி 29 ஆம் தேதி அன்று சூரியனின் வெளிப்புற அடுக்கின் மேற்பரப்பில் இருந்து கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) என்ற ஒரு மாபெரும் உமிழ்வு வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக அதிவேக சூரியக் காற்று சூரியனில் இருந்து வெளியிடப்பட்டது. இது பூமியின் வளிமண்டலத்தைத் தாக்கி புதிய புவி காந்தப் புயலை உருவாக்கியுள்ளது.

சூரியனில் இருந்து வெளிவந்த கரோனல் மாஸ் எஜெக்ஷன்
ஜனவரி 29 ஆம் தேதி சூரியனின் வெளிப்புற அடுக்கின் மேற்பரப்பில் இருந்து கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) ஆனது பிப்ரவரி 3 ஆம் தேதி தான் பூமிக்கு வந்தடைந்துள்ளது. இந்த சூரியப் புயல், பூமியின் வளிமண்டலத்தில் மோதியபோது, பூமியின் தரையில் உறுமியது என்று கூறப்பட்டுள்ளது. சூரியப் புயலின் தீவிரத்தைப் பொறுத்து அதன் அளவு கணிக்கப்படுகிறது. தீவிரமான சூரிய புயல்கள் பெரும்பாலும் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கக் கூடியதாகக் கருதப்படுகிறது.

தீவிரமான சூரியப் புயல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா?
அதேபோல், தீவிரமான சூரியப் புயல்கள் பூமியில் உள்ள மின் கட்டங்களை நாக் அவுட் செய்யக் கூடியது மற்றும் உலகளவில் இணையத்தைத் துண்டிக் கூடியதாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, இத்தகைய தீவிரமான சூரிய புயல்கள் தோன்றுவது மிகவும் அரிதானவை என்பதனால், பூமி வாசிகள் இப்போது இது போன்ற ஒரு தீவிரமான சூரியப் புயலைச் சந்திக்கவில்லை. இருப்பினும், இம்முறை ஏற்பட்ட சூரிய புயல் மிகவும் அழிவுகரமான விளைவை ஒரு சில பகுதியில் மட்டும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூரிய புயல் ரேடியோ இருட்டடிப்பு விளைவை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் ரேடியோ பிளாக் அவுட்
இதன் விளைவுகள் மிகக் கடுமையாக ரஷ்யாவில் காணப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து, ரஷ்யா நீண்ட காலமாக வானொலி இருட்டடிப்புக்கு உட்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யா பகுதியில் உள்ள ரேடியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பாட்டு மிகவும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த சூரியப் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட அழிவு சக்திக்குக் கூடுதலாக, சூரிய புயல்கள் வேறு பூமி வாசிகள் கண்டிடாதா அழகான அரோரா ஒலிகளைத் தீவிர துருவங்களில் ஏற்படுத்தியுள்ளன என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறியுள்ளது.

சரி, CME என்றால் என்ன?
எளிமையாகச் சொன்னால், கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CMEs) என்பது தீவிர சூரிய எரிப்பு காரணமாக அதிக அளவு சூரிய துகள்களின் வெடிப்பு என்று கருதலாம். கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் அதிக அளவு பிளாஸ்மா, வாயு மற்றும் காந்தப்புலங்களை விண்வெளியில் வெளியிடுகின்றது. பெரும்பாலும் சூரியனின் காந்தப்புலத்தில் உள்ள சூரிய புள்ளிகளிலிருந்து உருவாகிறது. கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் சூரியனை விட்டு வெளியேறும்போது, அவை வினாடிக்கு 250 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் வினாடிக்கு 3000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன.

கரோனல் மாஸ் எஜெக்ஷன் பூமியை அடைய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்?
கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் சுமார் 15 முதல் 18 மணி நேரத்தில் பூமியை அடைய முடியும். இது பூமியின் வானியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மிகக் குறைவான எச்சரிக்கையை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக, அனைத்து சூரிய புயல்களும் வேகமாகப் பயணிப்பதில்லை மற்றும் பொதுவாகப் பூமியை அடைய ஒரு நாள் எடுத்துக்கொள்கிறது. இந்த கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள், பூமியை அடையும் போது, பலவிதமான விளைவுகளுடன் வெவ்வேறு தீவிரம் கொண்ட சூரிய புயல்கள் உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கரோனல் மாஸ் எஜெக்ஷன் பூமியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
விண்வெளி வானிலை ஆய்வாளர் தமிதா ஸ்கோவ் தனது ஆடியோ போட்காஸ்டில் கூறியதாவது, "ஜனவரி 29 அன்று ஒரு எக்ஸ் ஃப்ளேர் பிளேயர், மண்டலம் 2936, ஒரு பெரிய எம் ஃப்ளேரைச் சுடுகிறது மற்றும் புவி வேலை நிறுத்த மண்டலத்தில் (SIC) சூரிய புயலை ஏவுகிறது." என்று கூறியுள்ளார். மேலும் அவரின் ட்வீட் மூலம் "கணக்கிடப்பட்ட சூரிய புயல் சரியான நேரத்தில் வரும், புதிய SpaceWeatherWoman முன்னறிவிப்பில் அடுத்த சில நாட்களில் என்ன வரப்போகிறது என்பதைப் பற்றிய விவரங்களை இப்போது கண்டறியவும்.

சூரியப் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வானொலி ஒலிபரப்பின் ஆடியோ கிளிப்
அரோரா எங்கே என்று பார்க்கவும், ஏன் அமெச்சூர் வானொலியை எதிர்பார்க்கவும். ஆபரேட்டர்கள் மற்றும் ஜிபிஎஸ் பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.!" என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது கருத்தை நிரூபிக்க, ஸ்கோவ் ஒரு உதாரணம் கொடுத்துள்ளார். "தற்போது ரஷ்யாவில் உள்ள விஎச்எஃப் ரேடியோவில் அரோரா என்ன செய்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். இதோ நடந்து கொண்டிருக்கும் சூரியப் புயலில் ஏற்பட்ட தாக்கத்தைக் கேளுங்கள் என்று, சூரியப் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வானொலி ஒலிபரப்பின் ஆடியோ கிளிப்பையும் அவர் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications