ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ்.. ஏர்டெல் வழங்கும் சிறந்த 1 ஆண்டு திட்டம்..
வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதைப் போன்றே, பாரதி ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டங்களின் பலன்களும் கிட்டத்தட்ட ஒத்தவை தான். பல பயனர்கள் ஒரு வருடம் போன்ற நீண்ட கால செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்வதில் இருந்து தப்பிக்க முடியும். அப்படி, ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது, அதில் உள்ள சிறந்த திட்டத்தைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.

ஒரு வருட வேலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டங்கள்
இந்த திட்டங்கள் அனைத்தும் ஒரு வருட வேலிடிட்டியுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆண்டுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்துகொண்டால் போதுமானது, அடுத்து அந்த ஆண்டு முழுவதும் எந்த கவலையும் இன்றி நீங்கள் உங்கள் அழைப்பு மாற்று டேட்டா சேவையைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம். இது அனைத்தும் ஒரு பயனர் தனது திட்டத்தில் இருந்து விரும்பும் தரவுகளின் அளவைப் பொறுத்து அதன் விலையில் மாற்றம் அடையும். ஏர்டெல் வழங்கும் சிறந்த நீண்ட கால திட்டங்களைப் பார்ப்போம்.

எந்த ஏர்டெல் திட்டம் 1 வருடத்திற்குச் சிறந்தது?
சராசரி டேட்டா தேவைகளைக் கொண்ட சராசரி நுகர்வோருக்கு பாரதி ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் மிகவும் சிறந்த திட்டம் என்றால் அது ரூ. 2,999 திட்டமாகும். இது மிகவும் விலையுயர்ந்ததாகத் தோன்றினாலும், நீங்கள் வருடாந்திர செல்லுபடியை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், ஏர்டெல்லில் இருந்து பெறக்கூடிய சிறந்த தரவு மையத் திட்டமாக இந்த திட்டம் இருக்கிறது. இது உங்களுக்கு அதிகமான கட்டணமாகத் தோன்றினால், ஏர்டெல் நிறுவனம் ஒரு வருடத்திற்கு இதை விட மலிவான திட்டத்தையும் வழங்குகிறது.

மலிவான விலை கொண்ட ஒரு ஆண்டு திட்டம் எது?
ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மலிவான விலை கொண்ட ஏர்டெல் ஒரு ஆண்டு திட்டம் என்றால் அது உங்களுக்கு வெறும் ரூ. 1,799 என்ற விலையில் கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்தில் பயனர்களுக்குத் தினசரி டேட்டா கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் படி உங்களுக்கு மொத்தமாக 24 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு வருட திட்டத்தில் மொத்தமாக 24 ஜிபி மட்டும் கிடைப்பதால், பொதுவாக ஒரு மாதத்திற்கு 2 ஜிபி டேட்டா மட்டும் கிடைக்கிறது என்று நாம் கணக்கிடலாம். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு நன்மை கிடைக்கிறது.

ஏர்டெல் வழங்கும் ரூ. 2,999 திட்டத்தின் நன்மைகள்
ஏர்டெல் வழங்கும் சிறந்த ஒரு ஆண்டு திட்டமான இந்த ரூ. 2,999 திட்டத்தில், பயனர்களுக்குத் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது, இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா அளவு என்பது 730 ஜிபி ஆகும். மேலும், ரூ. 2,999 திட்டத்தில், பயனர்களுக்கு ஆண்டு முழுவதும் தினசரி 100 SMS நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் கிடைக்கிறது. ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் ஒரு மாதத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைலுக்கான இலவச சோதனை சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், விங்க் மியூசிக் மற்றும் பல சேவைகளுக்கான அணுக்களை உள்ளடக்கியுள்ளது.

ஏர்டெல் ரூ 3359 திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?
பாரதி ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ. 3,359 ப்ரீபெய்ட் திட்டம் நாம் முன்னர் பார்த்த ரூ. 2,999 திட்டத்தைப் போன்ற பலன்களுடன் வருகிறது. இதன் பொருள், ரூ. 3359 திட்டத்தில், பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 365 நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் பலன்களையும் வழங்குகிறது. ரூ.2999 திட்டம் மற்றும் ரூ.3359 திட்டத்திற்கு இடையில் உள்ள ஒரே ஒரு வேறுபாடு உங்களுக்குக் கிடைக்கும் ஒரே ஒரு கூடுதல் நன்மை மட்டும் தான். ரூ. 3, 359 திட்டம் உங்களுக்கு ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பின் தொகுக்கப்பட்ட சந்தாவை வழங்குகிறது.

ரூ.3, 359 திட்டத்தைத் தேர்வு செய்தால் பணம் மிச்சமா?
இந்த திட்டம் உங்களுக்கு ரூ. 499 மதிப்பில் கிடைக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் எடிஷன் திட்டத்தை வாங்க திட்டமிட்டால், மேலும் ஏர்டெல்லிலிருந்து ரூ. 2999 திட்டத்தை வாங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தால், இரண்டையும் ஒன்றாகக் கொண்டுவரும் ரூ.3, 359 திட்டத்திற்குச் செல்வதன் மூலம் சிறிது பணத்தை மிச்சப்படுத்துவீர்கள். இந்த திட்டங்களை நீங்கள் ஒருமுறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய விரும்பாத வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications