Home
News

கொம்புடன் சீறிப்பாயும் ராட்சச வால்நட்சத்திரம்.. வெறும் கண்ணால் கூட பார்க்கலாம்.. எப்போது தெரியும்?

விண்வெளி ஆராய்ச்சி நம்மை தினம்-தினம் திகைப்படைய செய்கிறது. விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகளை பல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பல விசித்திரமான மற்றும் வியப்படையும் நிகழ்வுகளை நாம் பார்த்து வருகிறோம்.

அப்படி, நாம் அடுத்ததாக காணவிருக்கும் ஒரு அரிய நிகழ்வு தான், கொம்புடன் சீறி பாய்ந்து பூமி நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு அரிய வகை ராட்சச வால் நட்சத்திரத்தின் காட்சியாகும். இது ஒரு பெரிய எரிமலை வால்நட்சத்திரம் (Giant cryovolcanic comet). இது ஒரு நகரத்தை போல பெரியது. இது நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக சூரியனை நோக்கி வேகமாக வெடித்தது என்பது கவனிக்கத்தக்கது.

கொம்புடன் சீறிப்பாயும் ராட்சச வால்நட்சத்திரம்.. எப்போது பார்க்கலாம்?

இதற்கு முன் வெடித்த பொழுது, இது இது வாயு மற்றும் பனி மேகம் போன்ற தூசியை வெளியேற்றியது. இது அந்த வால் நட்சத்திரத்திற்கு பெரிய ஜோடி கொம்புகள் போன்ற அமைப்பை வழங்கியது. இது 12P/Pons-Brooks என்று அழைக்கப்படும் வால்நட்சத்திரம் ஆகும். இது ஒரு கிரையோவோல்கானிக் அல்லது குளிர் எரிமலை வால்மீன் நட்சத்திரம் ஆகும். இந்த வால்மீன் நட்சத்திரம் 18.6 மைல்கள் (30 கிலோமீட்டர்) விட்டம் கொண்ட திடமான கருவைக் கொண்டுள்ளது.

இதில் கிரையோமாக்மா எனப்படும் தூசி, வாயு மற்றும் பனி ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளது.
இந்த வால்மீனின் உட்புறத்தில் இருந்து வெளியேறும் கோமா எனப்படும் வாயுவின் ஒரு தெளிவற்ற மேகத்தால் கருவைச் சூழ்ந்துள்ளது. வால் நட்சத்திரத்தின் உட்புறங்கள் சூரியக் கதிர்வீச்சினால் சூடுபடுத்தப்படும் போது, ​​அழுத்தம் அதிகரித்து, இந்த வால்மீன் அதும் நகரும் நேரத்திலேயே கடுமையாக வெடித்து சிதறியது.

அக்டோபர் 5 ஆம் தேதி, இந்த வால்மீனை உன்னிப்பாக கவனித்து வரும் பிரிட்டிஷ் வானியல் சங்கம் (BAA) வெளியிட்ட தகவல் படி, அதன் விரிவாக்கப்பட்ட கோமாவிலிருந்து கூடுதல் ஒளி பிரதிபலிப்பதால், வால் நட்சத்திரம் ஒரு டஜன் மடங்கு பிரகாசமாக மாறிய பிறகு, 12P இலிருந்து ஒரு பெரிய வெடிப்பு வானியலாளர்களால் கண்டறியப்பட்டது.

கொம்புடன் சீறிப்பாயும் ராட்சச வால்நட்சத்திரம்.. எப்போது பார்க்கலாம்?

அடுத்த சில நாட்களில், வால் நட்சத்திரத்தின் கோமா மேலும் விரிவடைந்து அதன் "விசித்திரமான கொம்புகள்" வளர்ந்தது என்று Spaceweather.com தெரிவித்துள்ளது. கோமாவின் ஒழுங்கற்ற வடிவம் ஸ்டார் வார்ஸின் மில்லினியம் பால்கன் போன்ற அறிவியல் புனைகதை விண்கலம் போல தோற்றமளிக்கிறது என்று சில நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த வால் நட்சத்திரம் இப்போது பூமி நோக்கி வருகிறது. இதற்கு பிறகு இது வரும் 2095 இல் தான் பூமிக்குத் திரும்பும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கோமாவின் அசாதாரண வடிவம் 12P இன் கருவின் வடிவத்தில் ஒரு ஒழுங்கின்மை காரணமாக இருக்கலாம் என்று BAA வானியலாளர் ரிச்சர்ட் மைல்ஸ் கூறியுள்ளார். தற்சமயம், 12P சூரிய மண்டலத்தின் உள் பக்கத்தை நோக்கி நகர்கிறது.

அங்கு அது சூரியனின் அதிக நீள்வட்ட 71 ஆண்டு சுற்றுப்பாதையில் ஸ்லிங்ஷாட் செய்யும். இதேபோன்ற ஒரு நிகழ்வை, பச்சை வால்மீன் நிஷிமுரா கடந்த செப்டம்பர் 17 அன்று நடத்தியது என்பது குறிப்புடத்தக்கது. ஏப்ரல் 21, 2024 அன்று, 12P பூமிக்கு மிக அருகில் வரும். வெளிப்புற சூரிய குடும்பத்தை நோக்கி திரும்புவதற்கு முன் அது பூமியில் உள்ள மக்களால் வெறும் கண்களில் பார்க்க கிடைக்கும்.

மீண்டும் இந்த வால் நட்சத்திரம் 2095 வரை பூமி பக்கம் திரும்பி வர வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இந்த முறை இந்த கொம்புகளுடன் எரிமலை போல நெருப்பாய் சீறி பாயும் வால்நட்சத்திரத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள். இப்போதே உங்கள் கேலண்டரில் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Giant cryovolcanic comet with horns is racing towards Earth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X