9 கிரகங்களும் எப்படி பெயரிடப்பட்டது? பூமிக்கும் கடவுள் பெயர் சூட்டப்பட்டதா? எந்த கிரகத்திற்கு கடவுள் பெயர்?
நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு எப்படி பெயர் வழங்கப்பட்டதென்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு கிரகத்தின் பெயருக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா? சூரிய குடும்பத்தில் உள்ள கிரங்களுக்கு கடவுள்களின் பெயர் தான் சூட்டப்பட்டுள்ளதா? பூமிக்கு எந்த கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
சூரிய குடும்பத்தில் மொத்தம் 9 கிரகங்கள் (9 planets) உள்ளது. இந்த கிரகங்களுக்கு ரோமானிய (Roman) பெயர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரகத்திற்கும் எந்த கடவுளுடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். ரோமானிய கடவுள்களுக்கும் கிரகங்களுக்கும் (Roman god names and planets names) என்ன தொடர்பு என்பதைக் கண்டறிய தொடர்ந்து படியுங்கள்.

1. மெர்குரி (Mercury):
மெர்குரி என்று அழைக்கப்படும் புதன் கிரகம், சூரிய குடும்பத்தில் (solar system) உள்ள அனைத்து கிரகங்களையும் விட வேகமாக நகரும் என்பதால் ரோமானிய தூதர் கடவுளின் பெயரான (Roman messenger god) மெர்குரி என்ற பெயர் இந்த கிரகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இது தமிழில் புதன் என்று பெயரிடப்பட்டது.
2. வீனஸ் (Venus):
காதல் மற்றும் அழகுக்கான (Roman goddess of love and beauty) ரோமானிய தெய்வத்தின் நினைவாக இந்த கிரகம் வீனஸ் என்று பெயரிடப்பட்டது. சுவாரஸ்யமாக, காதல் கடவுளை வைத்து இந்த கிரகம் பெயரிடப்பட்டுள்ளது. இது தமிழில் வெள்ளி கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
3. செவ்வாய் அல்லது மார்ஸ் (Mars):
ரோமானியப் போரின் கடவுளின் (Roman god of war) நினைவாக இந்த கிரகம் மார்ஸ் என்று பெயரிடப்பட்டது. இது தமிழில் செவ்வாய் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தின் சிவப்பு நிறத்தால் போருடன் தொடர்புபடுத்தி இதன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
4. ஜூபிட்டர் (Jupiter):
ரோமானிய கடவுள்களின் அரசன் (King of the Roman gods) என்று அழைக்கப்படும் தெய்வத்தின் பெயரான ஜூபிட்டர் என்ற பெயர் இந்த கிரகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இது தமிழில் வியாழன் என்று அழைக்கப்படுகிறது. இது மிகப் பெரிய கிரகம் என்பதால் மன்னரின் பெயரால் இதற்குப் பெயரிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
5. சனி (Saturn):
தமிழில் இந்த கிரகம் சனி என்று அழைக்கப்படுகிறது. சனி கிரகம், சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற அனைத்து கிரகங்களையும் விட மெதுவாக நகர்வதால், இதற்கு ரோமானிய கடவுளான விவசாயம் மற்றும் நேரத்தின் கடவுளின் (Roman god of agriculture and time) பெயர் சூட்டப்பட்டுள்ளது.
6. யுரேனஸ் (Uranus):
கிரேக்க கடவுளின் பெயரால் (Greek god) அழைக்கப்படும் மற்றொரு கிரகம் யுரேனஸ் ஆகும். புராணங்களின்படி, யுரேனஸ் வானத்தின் உருவம் (personification of the sky) என்று நம்பப்படுகிறது. இந்த பெயர் அது அசல் தேவாலயத்தில் இருந்து வந்தது என்று குறிப்பிடப்படுகிறது.
7. நெப்டியூன் (Neptune):
கடலின் ரோமானிய கடவுள் (Roman god of the sea) என்று அழைக்கப்படும் தெய்வத்தின் பெயர் தான் இந்த கிரகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. நெப்டியூன் கிரகத்தை பற்றிய ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இந்த கிரகம் கண்ணுக்குத் தெரிவதற்கு முன்பே, கணிதத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரகம் என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
8. புளூட்டோ (Pluto):
கிரேக்க புராணங்களின் படி, 9வது கிரகமாக பார்க்கப்படும் புளூட்டோ கிரகத்திற்கு பாதாள உலகத்தின் கடவுள் (god of the underworld) பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆம், இந்த கிரகம் சூரியனில் இருந்து மிக தொலைவில் வெளிச்சம் இல்லாத கிரகமாக பார்க்கப்படுவதனால், பாதாள உலகத்தின் கடவுள் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
9. பூமி அல்லது எர்த் (Earth):
பூமிக்கு எந்த கடவுளின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் என்று தான் இப்போது உங்கள் எண்ணங்கள் அலை மோதிக்கொண்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், பூமிக்கு எந்த கடவுளின் பெயரும் சூட்டப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. நமது கிரகத்தின் பெயர் ஆங்கிலம் அல்லது ஜெர்மன் தோற்றம் கொண்டது, அதாவது இதை 'தி கிரௌண்ட்' என்று அழைக்கிறார்கள். பண்டைய காலங்களில் பூமி ஒரு கோளாக பார்க்கப்படாததால், கடவுளின் பெயரால் பெயரிடப்படாத ஒரே கிரகமாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








