Home
News

ச்சீ..ச்சீ.. இதையா செவ்வாயில் மனுஷங்க சாப்பிட போறாங்க.! இதுக்கு பெயர் சூப்பர் ஃபுட்-ஆ?

செவ்வாய் கிரகத்தில் (Mars) முதல் மனித காலனியை துவங்க, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகள் மிகவும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இதன் விளைவாக, முதல் மார்டியன் காலனியில் (Martian Colonies) மனிதர்கள் உணவாக உண்ணப்போகும் உணவு பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் சென்றால் பரோட்டா, கிரில் சிக்கன், பிரியாணி, ஷவர்மா, கபாப், பானிபூரி போன்று பல வெரைட்டி உணவுகளை மெனு கார்டில் இருந்து செலக்ட் செய்து, ஆர்டர் செய்துகொள்ளலாம் என்று நீங்கள் நினைத்திருந்தால், அது மிகவும் தவறானது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் சென்றவுடன் உணவாக உண்ணப்போவது ஒரு பாக்டீரியாவை (Bacteria) தான்.

ச்சீ..ச்சீ.. இதையா செவ்வாயில் மனுஷங்க சாப்பிட போறாங்க.!

எது.! செவ்வாய் கிரகம் சென்றால் மனிதர்கள் பாக்டீரியாவை சாப்பிடணுமா?

எது பாக்டீரியாவா சாப்பிடணுமா? என்று ஷாக் ஆக வேண்டாம். உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை டபுள் மடங்கில் வழங்கக்கூடிய ஒரு பாசி வகை தான், இந்த பாக்டீரியா. இதை விஞ்ஞானிகள் 'ஸ்பிருலினா (Spirulina)' என்று அழைக்கிறார்கள். செவ்வாய் கிரகத்தில், மனித காலனியை நீண்ட காலம் நிலைநிறுத்த இந்த ஸ்பிருலினா உதவப்போகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது தான் மனிதர்களுக்கான 'புது செவ்வாய் கிரக சூப்பர் ஃபுட் (New Mars Super Food)' என்றும் கூறியுள்ளனர்.

சைவ பிரியர்கள் இந்த தகவலைக் கேட்டவுடன் 'வாவ் (Wow)' என்று குஷியாகி இருப்பார்கள். இன்னும் சிலர், இப்போதே ஒரு பிளேட்டில் கொடுத்தால், அப்படியே சாப்பிடுவேன் என்று கூட குஷியாவார்கள். ஆனால், விஷயம் இன்னும் இருக்கிறது மக்களே.! அவசரப்படாதீர்கள்.. இந்த ஸ்பிருலினா இயற்கையான முறையில் உருவாக்கப்படுவதில்லையாம். இதை விஞ்ஞானிகள் லேப் (Lab) இல் கல்ச்சர் செய்து உருவாக்கி, உங்கள் டேபிளில் சர்வ் செய்யப் போகிறார்கள்.

ச்சீ..ச்சீ.. இதையா செவ்வாயில் மனுஷங்க சாப்பிட போறாங்க.!

செவ்வாய் கிரகத்தில் இது எப்படி உருவாக்கப் போகிறது? உண்மை தெரிந்தால் குமட்டலே வரும்.!

இதை நீங்கள் உணவாகச் சாப்பிட வேண்டும் என்ற கொடுமையை விட, இதை எப்படி தயார் செய்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தால், இதை நீங்கள் சாப்பிடத் தயங்குவீர்கள் என்பதே உண்மையாகும். சிலருக்கு தலைசுற்றி, குமட்டல் எடுக்கவும் வாய்ப்புள்ளது. உண்மையில், ஸ்பைருலினா அதிக புரதம் கொண்ட 'சூப்பர்ஃபுட்' ஆக தான் திகழ்கிறது. இது சிவப்பு கிரகத்தில் (Red Planet), மனிதர்களின் நீண்ட கால வாழ்க்கையை நிலைநிறுத்தத் தேவையான அணைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.

செவ்வாய் கிரகத்தில் 'தண்ணீர் (Water)' ஒரு அரிய பொருளாக இருப்பதால், எதிர்கால செவ்வாய் சூழலில், அதிக தண்ணீர் இல்லாமல் செழிக்கக் கூடிய, மற்றும் ஊட்டச்சத்துக்களை அடர்த்தியாக பேக் செய்த ஒரு உணவு கட்டாயம் தேவைப்படும். இந்த ஒட்டுமொத்த தேவைகளையும் ஸ்பிருலினா பூர்த்தி செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித உடலுக்குத் தேவையான சத்து குணங்களைக் கொண்ட ஒரு 'சயனோபாக்டீரியா (cyanobacteria)' தான் இந்த ஸ்பிருலினா.

ச்சீ..ச்சீ.. இதையா செவ்வாயில் மனுஷங்க சாப்பிட போறாங்க.!

என்னப்பா சொல்றீங்க? மனித 'வேஸ்ட்' இல் இருந்து 'டேஸ்ட்' உணவா?

ஸ்பிருலினாவை விஞ்ஞானிகள் எப்படி உருவாக்குகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் முன்பே சொன்னது போல, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இல்லை. ஆனால், ஒரு தாவரத்தைச் செழிக்க வைக்க வேண்டுமென்றால் தண்ணீர் கட்டாயம் தேவை தானே.! இங்கே தான் விஞ்ஞானிகள், செவ்வாய் செல்லும் மனிதர்களின் சிறுநீரை 'வேஸ்ட்' ஆகாமல் 'டேஸ்ட்' உணவாக பயன்படுத்தப் போகிறார்கள்.

சிறுநீருடன் (Urine) நீரேற்றம் செய்வதன் மூலம், மார்டியன் ரெகோலித் மண்ணில் சில கூறுகளை மாற்றுவதன் மூலம், ஏதேனும் உணவை செழிக்க வைக்க முடியுமா? என்று நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் தான் இந்த ஸ்பிருலினாவை விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர். இதன் மூலம், ஸ்பைருலினாவை தான் செவ்வாய் கிரகத்தின் காலனி வாசிகள் எதிர்காலத்தில் உணவாக உண்ணப்போகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.

ச்சீ..ச்சீ.. இதையா செவ்வாயில் மனுஷங்க சாப்பிட போறாங்க.!

இந்த சூப்பர் ஃபுட்-ஐ நீங்கள் சாப்பிடுவீர்களா? இல்லை வேறு யாருக்கும் டெடிகேட் செய்வீர்களா?

செவ்வாய் கிரகத்தின் சிறந்த உணவு ஆதாரத்திற்கான சிறந்த வேட்பாளர் என்று, இந்த சூப்பர் ஃபுட் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள துத்தநாகம் (zinc) மற்றும் இரும்பின் (Iron) கூறுகள், மனித சிறுநீரில் உள்ள நைட்ரஜன் (Nitrogen) மற்றும் பாஸ்பரஸின் (phosphorus) அதிக செறிவுடன் இணைந்து தான் இது வளர்க்கப்படுகிறதாம். இதுவே ஸ்பிருலினா பின்னணியில் உள்ள உண்மையாகும்.

ஒருவேளை, செவ்வாய் கிரகத்திற்கு நீங்கள் செல்ல நேரிட்டால், இந்த உணவை நீங்கள் சாப்பிடத் தயாரா? அல்லது இந்த உணவை, உங்கள் நண்பருக்கோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நபருக்கோ, இதை நீங்கள் டெடிகேட் செய்ய விரும்புகிறீர்களா என்று கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Spirulina Is The New Mars Super Food For Martian Colony Humans Says Scientists
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X