கடல் அடியில் மர்மமான நகரம் கண்டுபிடிப்பு.! இன்னும் என்னென்ன மர்மங்கள் ஆழ்கடலில் ஒளிந்துள்ளது?
பொதுவாகப் பிரபஞ்சத்தில் இருக்கும் நிகழ்வுகள் மர்மமாக (Mysterious events) இருப்பதாக பலமுறை நாம் விவாதித்ததுண்டு. ஆனால், நாம் வாழும் இந்த பூமியிலேயே (Earth) எண்ணற்ற மர்மங்களும், அதிசயங்களும் நிறைந்துள்ளது. இன்றும் மனித கால்தடமே படாத பல இடங்கள் பூமியில் மர்மமான பொக்கிஷமாக (Unbelievable mysteries of earth) மறைக்கப்பட்டுள்ளது.
அந்த இடங்களுக்கு மனிதன் சென்று ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான வழியே இல்லை என்று கூறலாம். நிலப்பரப்பில் இருக்கும் இடமாக இருந்தால் கூட, எப்படியாவது அதனைச் சென்று பார்த்து விடலாம், கடல்களுக்கு அடியில் (Under sea) இருக்கும் மர்மங்களை எப்படி கட்டவிழிப்பது? அப்படி தீர்க்க முடியாத பல மர்மங்களும், யூகங்களும் கடல்களுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன.

அப்படி நமக்குத் தெரிந்த ஒரே ஒரு மர்மம் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) தான். இந்த பெர்முடா முக்கோணம் போன்ற பல மர்மங்கள் கடல்களுக்கு அடியில் இருக்கலாம் என்று பண்டைக் காலத்திலிருந்தே வாழும் மக்கள் கணித்து வைத்துள்ளனர். அந்த மர்மங்களைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
1. அட்லாண்டிஸ் (Atlantis)
இந்த அட்லாண்டிஸ் என்பது, அந்த கால கிரேக்க மக்கள் கற்பனையாக உருவாக்கிய ஆழ்கடல் தீவு நகரமாகும். இந்த நகரம் உண்மையில் இருக்கிறதா? இல்லையா? என்பது இன்றும் விவாதமாகத் தான் உள்ளது. ஆனால், சமீபத்தில் ஆழ்கடலில் மூழ்கும் ஸ்கூபா டைவர்கள் (Scuba Divers) பசிபிக் கடல் பகுதியில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையைக் கண்டுபிடித்துள்ளனர். இது அந்த அட்லாண்டிஸ் தீவு நகரத்திற்குச் செல்லும் பாதையாக இருக்கலாம் என்று இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
2. தி ப்ளூப் (The Bloop)
இந்த ப்ளூப் என்பது கடலில் இருந்து வெளிவந்த ஒரு விதமான ஹை ஆம்லிட்யூட் ஒலியாகும் (High Amplitude Sound). 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் நேஷனல் ஓசோனிக் அண்ட் அட்மாஸ்பியர் அட்மினிஸ்ட்ரேஷன் (National Oceanic and Atmospheric Administration) முதன்முதலில் இந்த ஒலியை கண்டறிந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் இந்த ஒலி ஏதோ ஒரு நீர்வாழ் உயிரினத்தால் எழுப்பப்பட்டது என்று நம்பப்பட்டு வந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு இது கடலுக்கு அடியில் இருந்த அண்டார்டிக் பனிப்பாறையில் ஏற்பட்ட விரிசல் அல்லது பனிப்பாறைகள் உடைந்ததினால் ஏற்பட்ட ஒலி என்று பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.

3. பயோலுமினசன்ஸ் (Bioluminescence)
லூமினசன்ஸ் (Luminescence) என்பது, ஒளியை உள்வாங்கிக் கொண்டு, பின்னர் சிறிது நேரம் கழித்து அல்லது ஒளி இல்லாத போது அதனை வெளியிடும் தன்மையாகும். நுண்ணுயிரிகள் மற்றும் உயிரினங்கள் இந்த தன்மையை வெளிப்படுத்துவதால் இதனை பயோலுமினசன்ஸ் என்று கூறுவர். பைடோப்ளாண்க்டன் (Phytoplankton) மற்றும் ப்ளாண்க்டன் எனப்படும் பாசி வகையைச் சேர்ந்த நுண்ணுயிரிகளுக்கு இந்த தன்மை உள்ளது.
இவை கரையை ஒட்டி வரும்போது இரவு நேரத்தில் இந்த பயோலுமினசன்ஸ் தன்மையை வெளிப்படுத்தும். இதன் காரணமாக அந்த கடற்கரையே சீரியல் செட் போட்டது போல வெளிச்சமாக இருக்கும். இந்தியாவிலும் பயோலுமினசன்ஸ் நுண்ணுயிரிகள் இருக்கும் பீச்சுகள் சில உள்ளன. அவ்வளவு ஏன், நம் தலைநகர் சென்னையில் உள்ள திருவான்மியூர் பீச்சிலேயே கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த பயோலுமினசன்ஸ் நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளன.

4. பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle)
இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த பெர்முடா முக்கோணம் பகுதியைக் கடக்கும் அனைத்து விமானமும், கப்பலும் காணாமல் போவதைப் பற்றி நாம் பலமுறை கேள்விப்பட்டிருப்போம். இதற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது என்றே கூறலாம். அந்தப் பகுதியை யாராலும் கடக்க முடியாது என்பதனாலேயே இந்த மர்மத்தின் விளக்கத்தைக் கொடுக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை திணறி வருகின்றனர். இப்படி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்த பெர்முடா முக்கோணம் மியாமி (Miami) மற்றும் போர்ட்டோ ரிக்கோ (Puerto Rico) பகுதிக்கு இடையே சுமார் 5 லட்சம் சதுர மைல் கடல் பரப்பில் இருக்கிறது.
5. கருங்கடல் (Black Sea)
பொதுவாக நீர் நிலைகளில் அதில் இருக்கும் நீரின் ஈரப்பதம் காரணமாக, குளிர்ந்த காற்று நீரின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்டு கருமையான புகை போன்ற ஒன்றை உருவாக்கும். இது கடல்களிலும் நிகழும். இந்த நிகழ்வை வெளிப்படுத்தும் கடலை கருங்கடல் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு பெரிய, சிறிய என்று அனைத்து நீர் நிலைகளிலும் மிகவும் பொதுவான ஒன்று என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது போல இன்னும் பல மர்மங்கள் நமது பூமியின் கடல் பகுதிகளில் மறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மர்மங்களை கட்டவிழ்க்கத் தேவையான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளவுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications








