Amazon Great Indian Festival 2022: இந்த ட்ரிக் தெரிஞ்சா நீங்க கில்லாடி.! முழு சலுகையும் உங்களுக்கே.!

|

அமேசான் தனது சிறப்பு விற்பனையான Amazon Great Indian Festival 2022 விற்பனையை இந்த மாத இறுதிக்கு முன்பாக நடத்தவுள்ளது. இன்னும் சரியான தேதி எது என்பது வெளியிடப்படவில்லை. பெரும்பாலும் இந்த Amazon Great Indian Festival 2022 விற்பனை வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை நிறுவனம் பல தயாரிப்பு வகைகளின் மேல் மிகப்பெரிய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக சலுகையுடன் நீங்கள் வாங்க நினைக்கும் தயாரிப்புகளை எப்படி வாங்கலாம்?

அதிக சலுகையுடன் நீங்கள் வாங்க நினைக்கும் தயாரிப்புகளை எப்படி வாங்கலாம்?

குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மெது 40% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், வீட்டு மற்றும் சமையலறை தயாரிப்புகளின் மீது 70% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அமேசான் குறிப்பிட்டுள்ளது. வரவிருக்கும் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் சாமர்த்தியமாக அதிக சலுகையுடன் நீங்கள் வாங்க நினைக்கும் தயாரிப்புகளை எப்படி வாங்கலாம் என்பதற்கான டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப்போகிறோம். இறுதி வரை தொடர்ந்து படியுங்கள்.

இந்த ஷாப்பிங் ட்ரிக் தெரிஞ்சா நீங்கக் கில்லாடி

இந்த ஷாப்பிங் ட்ரிக் தெரிஞ்சா நீங்கக் கில்லாடி

Amazon Great Indian Festival 2022 என்ற சிறப்பு விற்பனையைத் தான் இந்திய மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பதனால், குறிப்பிட்ட சில தயாரிப்புகளின் மேல் அதிக டிமாண்ட் இருப்பது வழக்கமாகிவிட்டது. இதனால், சில நேரங்களில் நீங்கள் வாங்க நினைத்த பொருட்கள் ஸ்டாக்கில் இல்லாமல் போய்விடுகின்றன. ஆனால், நாங்கள் இங்குக் கூறும் ஷாப்பிங் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டால், இந்த சிக்கல் உங்களுக்கு இருக்காது.

உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

1. பிரைம் அக்கௌன்ட் உங்களிடம் உள்ளதா?

1. பிரைம் அக்கௌன்ட் உங்களிடம் உள்ளதா?

இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் சிறப்பாகச் செயல்பட விரும்பினால் உங்களிடம் ஒரு ​​பிரைம் கணக்கு இருப்பது அவசியம். பிரைம் உறுப்பினர்களுக்கான விற்பனை ஒரு நாள் முன்னதாக அணுகக் கிடைக்கிறது. நீங்கள் ஐபோன் அல்லது மற்ற ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கிறீர்கள் என்றால், பிரைம் மெம்பெர்ஷிப் இருப்பது பலனளிக்கும். பிரைம் இல்லாத நபர்களுக்கு இது பெரும்பாலும் ஸ்டாக்கில் இல்லாமல் விரைவில் விற்றுத் தீர்ந்துவிடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

2. பெஸ்ட் டீல் விலைகளை எப்படிக் கண்காணிப்பது?

2. பெஸ்ட் டீல் விலைகளை எப்படிக் கண்காணிப்பது?

Amazon மற்றும் Flipkart இல் தயாரிப்புகளின் விலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே இதில் சிறந்த சலுகை மற்றும் ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் சில எக்ஸ்டென்க்ஷன்களை கொண்டிருப்பது பயனளிக்கும். இருப்பினும், Amazon டெஸ்க்டாப் தளத்தில் பெரும்பாலான எக்ஸ்டென்சன்கள் வேலை செய்யாது என்பதனால், நீங்கள் சில வெப்சைட்களைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. குறிப்பாக, BuyHatke மற்றும் Keepa ஆகிய இந்த இரண்டு தளங்களை செக் செய்யுங்கள்.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

3. ஏன் இந்த இரண்டு தளங்கள் பெஸ்ட் தெரியுமா?

3. ஏன் இந்த இரண்டு தளங்கள் பெஸ்ட் தெரியுமா?

இந்த தளங்கள் வாரம் அல்லது மாதம் முழுவதும் கிடைக்கும் டீல்கள் பற்றிய விபரங்களை உங்களுக்குத் தொடர்ந்து வழங்கும் என்பதனால் இது சாதாரண நாட்களில் கூட உங்களுக்கு பெஸ்ட் டீல்களை வழங்குகிறது. சிறப்பு விற்பனையின் போது, இவை இன்னும் சிறப்பாகச் செயல்படுகின்றன. நீங்கள் விரும்பிய தயாரிப்பு அதன் குறைந்த விலையில் விற்பனை செய்வதாகத் தளம் காட்டினால், விற்பனை நிகழ்வு வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உடனே வாங்கிவிடுங்கள்.

4. உங்கள் கார்டு விபரங்களை சேவ் செய்ய வேண்டுமா?

4. உங்கள் கார்டு விபரங்களை சேவ் செய்ய வேண்டுமா?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் போன்ற இந்த விற்பனை நிகழ்வுகளில் ஐபோன்கள் போன்ற ஹாட் டீல்களை நீங்கள் பெற வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் மிகவும் வேகமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் எப்போதும் மிக வேகமாக விற்றுத் தீர்ந்துவிடும் என்பதனால், உங்கள் விஷ் லிஸ்டில் முன்பே இவற்றை ஆட் செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, உங்கள் கார்டு விவரங்கள் விரைவாகச் செக் அவுட் செய்யும் படி சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

உஷார் மக்களே.! Google Chrome எக்ஸ்டென்ஷன் மூலம் தகவல் திருட்டு.! உண்மை அம்பலமானது.!உஷார் மக்களே.! Google Chrome எக்ஸ்டென்ஷன் மூலம் தகவல் திருட்டு.! உண்மை அம்பலமானது.!

5. 'பிளாக்பஸ்டர்' டீல்களை எதிர்பார்த்து காத்திருக்க கூடாதா?

5. 'பிளாக்பஸ்டர்' டீல்களை எதிர்பார்த்து காத்திருக்க கூடாதா?

'8 PM டீல்கள்' மற்றும் 'ரூ.999 டீல்கள்' என்ற பிரத்தியேகப் பிரிவில் நீங்கள் விரும்பிய தயாரிப்புகளைக் கண்டால், அவை இன்னும் குறைந்த விலையில் இறுதி நாளில் பிளாக்பஸ்டர் தள்ளுபடியுடன் கிடைக்குமென்று வீணாக வாய்ப்பை நழுவவிடாதீர்கள். உங்கள் விருப்பம் ஒரு ஸ்மார்ட்போன் என்று வைத்துக்கொள்ளலாம், அவை உங்கள் பட்ஜெட்டில் ஏற்கனவே கிடைக்கிறது என்று நீங்கள் கண்டால், நேரத்தை வீணாக்காதீர்கள்.

6. உங்கள் அமேசான் ஆப்ஸ் அப்டேட் செய்யப்பட்டதா?

6. உங்கள் அமேசான் ஆப்ஸ் அப்டேட் செய்யப்பட்டதா?

இது மிகவும் முக்கியமான விஷயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சிறப்பு விற்பனையின் போது, நீங்கள் விரும்பிய தயாரிப்பை தடையின்றி வாங்குவதற்கு உங்கள் ஆப்ஸ் அப்டேட் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். காரணம், பழைய வெர்ஷனில் இயங்கும் ஆப்ஸ் தயாரிப்புகளை வாங்க மேற்கொள்ளப்படும் இறுதி நேரத்தில் கிராஷ் ஆக அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்களுக்கு கிடைத்த டீல்களை நீங்கள் தவற விட அதிக வாய்ப்புள்ளது என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

7. மறைக்கப்பட்ட விதிமுறைகளை அறிந்துகொள்வது அவசியமா?

7. மறைக்கப்பட்ட விதிமுறைகளை அறிந்துகொள்வது அவசியமா?

உங்கள் டெலிவரி அட்ரஸை கிராஸ் செக் செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, அமேசான் பல தயாரிப்புகள் மீது நோ-காஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் விருப்பங்களை வழங்குகிறது. ஆனால், இதில் சில மறைக்கப்பட்ட விதிமுறைகள் இருக்கும் என்பதனால், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் முன்பே படித்திருப்பதை உறுதிசெய்யவும். இது உங்களை சாமர்த்தியமாகவும் சிறப்பாகவும் செய்லபட உதவும். இந்த டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை யூஸ் செய்து சிறப்பான டீல்களை பெற்று மகிழுங்கள்.

Best Mobiles in India

English summary
Tips And Tricks To Shop Efficiently During Amazon Great Indian Festival 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X