சிட்டா பறக்குது ஆர்டர்.. Samsung Galaxy A05s மீது வகையான தள்ளுபடி.. எல்லோருக்கும் ஒன்னு உடனே ஆர்டர் போடுங்க..
சாம்சங் (Samsung) நிறுவனம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி A05s (Samsung Galaxy A05s) ஸ்மார்ட்போன் மீது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அட்டகாசமான அம்சங்களை கொண்ட இந்த மொபைல் போன் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனம் 6 மாதங்களுக்கு முன்பு, கடந்த அக்டோபர் 15, 2024 ஆம் தேதி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகம் செய்தது. இதுவொரு பட்ஜெட் விருப்பமாக (Budget segment) இந்தியாவில் ரூ.15,999 என்ற அசல் விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தின் மீது இப்போது அமேசான் (Amazon) ஒரு சுவாரசியமான தள்ளுபடியை அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி A05s (Samsung Galaxy A05s):
இந்த சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் சாதனம் FHD+ டிஸ்பிளே, 50MP கொண்ட ட்ரிபிள் கேமரா, 4GB ரேம் முதல் 12GB ரேம் வரை, 5000mAh பேட்டரி போன்ற அட்டகாச அம்சங்களை ஒரே போனில் பேக் செய்து, இந்த போனை மிகவும் குறைந்த விலையில் ஒரு அசாதாரணமான பவர்புல் பட்ஜெட் போனாக சாம்சங் இதை உருவாக்கியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் ஆனது 6.7" இன்ச் அளவு கொண்ட FHD+ PLS LCD டிஸ்பிளேவை (display) வழங்குகிறது. இந்த டிஸ்பிளே 1080 x 2400 பிக்சல் (Pixels) குவாலிட்டி உடன், 391 PPI மற்றும் 16 மில்லியன் கலர்களை ஆதரிக்கும் சிறந்த டிஸ்பிளேவாக வருகிறது. இந்த டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate) உடன் இயங்குகிறது என்பதனால், வீடியோ அனுபவம் மிகவும் ஸ்மூத்தாக அமைகிறது.
இந்த பட்ஜெட் கில்லர் சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் (Qualcomm Snapdragon 680 Processor) உடன் இயங்குகிறது. இது 4GB ரேம் உடன் 128GB ஸ்டோரேஜ் விருப்பமாக ஒரு மாடலாகவும், 6GB ரேம் (RAM) + 128GB ஸ்டோரேஜ் உடன் மற்றொரு விருப்பத்துடன் இந்திய சந்தையில் களமிறங்கி விற்பனையாகி வருகிறது. இந்த போன் ரேம் பிளஸ் (RAM Plus) அம்சத்தையும் ஆதரிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி A05s அமேசான் சலுகை விலை (Samsung Galaxy A05s Amazon Offer Price):
இதனால், 4ஜிபி மாடலை தேர்வு செய்யும் பொழுது உங்களுக்கு 8ஜிபி ரேம் பயன்படுத்த கிடைக்கிறது. அதேபோல், 6ஜிபி ரேம் மாடலை நீங்கள் தேர்வு செய்யும் பொழுது 12ஜிபி வரையிலான ரேம் உங்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. உண்மையில், இது ஒரு அட்டகாசமான அம்சமாகும். ரேம் அதிகமாக இருக்கிறது என்றால், ஸ்மார்ட்போனின் பெர்பார்மென்ஸ் எந்தவித லேக்கும் (Lag) இல்லாமல் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போனின் கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இந்த சாதனம் ட்ரிபிள் கேமரா அமைப்புடன் (Triple camera setup) வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமராவில் சாம்சங் நிறுவனம் 50MP + 2MP + 2MP சென்சார் கேமராவை வழங்குகிறது. அதேபோல், முன்பக்கத்தில் இந்த சாதனம் 13MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த பட்ஜெட் விலையில் 50MP கேமரா கிடைப்பது சிறப்பான விஷயமாகும்.
பேட்டரி பற்றி பேசுகையில், சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் சாதனம் 5000mAh கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது. இந்த சாதனம் 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்டை வழங்குகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி A05s சாதனம் இப்போது அமேசான் தளத்தில் வெறும் ரூ.11,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. சில கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications