Home
Mobile

இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் அறிமுகம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 20 Pro specifications): பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன். மேலும் மினி எல்இடி ஆதரவு கொண்ட சைபர் மெக்கா (Cyber Mecha) டிசைனுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போனை விட சற்று வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன்.

இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. எந்த மாடல்?

அதேபோல் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் இருமையாக இருக்;கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் (MediaTek Dimensity 8200 Ultimate) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அறிமுகம் செய்யப்படும். மேலும் 12ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதி இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதவிர நீங்கள் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

XOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஜேபிஎல் சவுண்ட் ( JBL sound) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக அண்டர் டிஸ்பிளே கைரேகை ரீடர் ஆதரவைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ மாடல். ப்ளூ (blue), சில்வர் (silver), கிரே (grey) நிறங்களில் இந்த புதிய போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. எந்த மாடல்?

108எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் ஆனது ரூ.22,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo courtesy: 91mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 20 Pro specifications, price design leaked ahead of launch in India: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X