Home
News

Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் இந்தியாவில் ஆள்-இன்-ஒன் என்ற ஒரு புதிய மிரட்டல் திட்டத்தை (Airtel all-in-one plan) அறிமுகம் செய்துள்ளது. இது வைஃபை, டிவி சேனல், OTT சந்தா, இலவச ரௌட்டர், செட்-டாப்-பாக்ஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் இலவச நன்மையை வழங்குகிறது.

இந்த திட்டம் ரூ. 699 விலையில் இலவச ரௌட்டர் (Router) உடன் அன்லிமிடெட் வைஃபை (Wi-Fi), இலவச செட்-டாப்-பாக்ஸ் (Set-Top-Up) உடன் 300+ சேனல், 15+ OTT சேனலுக்கான 1 வருட சந்தா, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD வாய்ஸ் கால் அழைப்பு நன்மை என்று இன்னும் ஏராளமான இலவச நன்மைகளை ஒரே திட்டத்தில் முழு பண்டலாக ஏர்டெல் இப்போது வழங்க துவங்கியுள்ளது.

Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா..

ஏர்டெல் ரூ.699 திட்டம்.. இலவச ரௌட்டர், செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் நன்மைகள் (Airtel Rs 699 Plan.. Free Router, Set Top Box.. Unlimited Benefits):

உண்மையை சொல்ல போனால் உங்கள் வீட்டில் கட்டாயம் கேபிள் டிவி கனெக்ஷன் (Cable TV connection) இருக்கும். இதற்கென்று தனியாக ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை கட்டணமாக நீங்கள் செலவழித்து வருவீர்கள். எப்படியும் குறைந்தது ஒரு OTT சந்தாவையாவது நீங்கள் பணம் கொடுத்து வாங்கி இருப்பீர்கள். அல்லது நண்பர்களுடைய OTT சந்தாவை பயன்படுத்தி வருவீர்கள்.

இது போக, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தனியாக டாப்-அப் (Top up), ரீசார்ஜ் (Recharge), டேட்டா வவுச்சர் (Data Voucher) என்று தேவைக்கேற்ப எதாவது ஒரு திட்டத்தை மீண்டும்-மீண்டும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி வருவீர்கள். இத்தனை சேவைகளுக்கும் தனித்தனியாக நீங்கள் கட்டணம் செலுத்தும் பொழுது ஒரு பெரும் தொகையை செலவிட நேர்கிறது. ஆனால், ஏர்டெல் இதை மிகவும் சாமர்த்தியமாக கையாள அனுமதிக்கும் ஆள்-இன்-ஒன் திட்டத்தை இப்போது வழங்குகிறது.

இந்த ஏர்டெல் ஆள்-இன்-ஒன் திட்டத்தின் மூலம், உங்களுக்கு இலவச ரௌட்டர் உடன் அன்லிமிடெட் டேட்டாவை 40Mbps வேகத்தில் வழங்கும் வைஃபை இணைப்பு, இலவச செட்-டாப்-பாக்ஸ் உடன் 300+ டிவி சேனல் இணைப்பு, 15+ OTT சேனல்களுக்கான 1 வருட சந்தா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் இலவச நன்மை என்று பல நன்மைகளை ஏறிட்டேள் இப்போது வெறும் ரூ. 699 பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் வழங்குகிறது.

Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா..

ஒரே திட்டத்தில் உங்கள் தேவை எல்லாம் நிறைவேறும்.. ஏர்டெல் ஆள்-இன்-ஒன் பிளான்:

இந்த ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் (Airtel Broadband Plan) 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா (Xstream premium) உட்பட 10-திற்கும் மேற்பட்ட OTT சேனல் சந்தாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இலவச நன்மையாக Apollo 24×7 நன்மையையும் 1 வருட செல்லுபடியுடன் கிடைக்கிறது.

கூடுதல் இலவச நன்மையாக Wynk மியூசிக் சந்தாவும் கிடைக்கிறது. இதன் மூலம் அன்லிமிடெட் பாடல்களை நீங்கள் கேட்டு மகிழலாம். இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தை நீங்கள் இலவசமாக 30 நாட்களுக்கு ட்ரையல் (trial) பார்த்தபிறகு, உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் முழுமையாக கட்டணத்தை செலுத்தி உங்களுக்கான பிராட்பேண்ட் திட்டத்தை பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் சிறப்பம்சம் இந்த திட்டத்துடன் உங்களுக்கு இலவசமாக ரௌட்டர் கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கான கட்டணத்திற்கு மேல் 1 ரூபாய் கூட ஏர்டெல் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் வைஃபை ரௌட்டர் மற்றும் செட்-டாப்-பாக்ஸ் இலவசமாக கிடைக்கிறது. இந்த திட்டத்தை வாங்கினால், உங்களுக்கு தேவையான ஒட்டுமொத்த சேவையும் ரூ.699 விலையில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 699 Broadband Plan with Free Router Set Top Box Unlimited Data Voice Call 15+ OTT 300 Cable TV Channels
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X