உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

|

முன்பெல்லாம் தெருவிற்குத் தெரு ஒரு டெலிபோன் தான் என்ற வழக்கம் இருந்தது, இந்த வழக்கம் காலப்போக்கில் மாறி, இப்போது ஒரு வீட்டிற்குள் ஐந்தாறு ஸ்மார்ட்போன்கள் இருக்கும் அளவிற்குத் தொழில்நுட்பமும், நாமும் வேகமாக வளர்ந்துவிட்டோம். ஸ்மார்ட்போன் (Smartphone) என்ற சாதனத்தின் பயன்கள் இன்று ஏராளம் தான் என்றாலும் கூட, இதை அளவிற்கு அதிகமாக நாம் பயன்படுத்தும் போது, மறைமுகமாக நாம் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறோம் என்பதை நம்மில் பலரும் இன்னும் அறிந்திருக்கவில்லை.

ஸ்மார்ட்போன் வசியத்தால் சீரழியும் மக்கள் ஆரோக்கியம்

ஸ்மார்ட்போன் வசியத்தால் சீரழியும் மக்கள் ஆரோக்கியம்

சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் தனது வசியத்தால் கட்டிப்போட்டுவிட்ட இந்த சிறிய எலெக்ட்ரானிக் கேட்ஜெட், இப்போது மனிதனை ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மனிதனின் மூன்றாவது கரமாக மாறிவிட்டது. இன்னும் சிலர் தூங்கும் பொழுது கூட அவர்களுடைய ஸ்மார்ட்போனை அணைத்துக்கொண்டு தான் உறங்குகின்றனர்.

இந்த மோசமான பழக்கத்தின் மூலம் என்னென்ன விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும்?

இந்த மோசமான பழக்கத்தின் மூலம் என்னென்ன விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும்?

இது ஒரு வேடிக்கை பழக்கமாக தெரியலாம். ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகளையும் பேராபத்துகளையும் பற்றி மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதே உண்மை. உறங்கும் போது கூட, உங்கள் ஸ்மார்ட்போனை உங்களுக்கு அருகில் அல்லது உங்கள் தலையணைக்குப் பக்கமாக வைத்துக்கொள்ளும் பழக்கம் உங்களுக்கும் உள்ளதா? அப்படியானால், இந்த மோசமான பழக்கத்தின் மூலம் என்னென்ன விளைவுகளை எல்லாம் நீங்கள் சந்திக்க நேரிடும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

சிறிய தவறினால், உங்கள் உடலில் ஏற்படக்கூடிய மோசமான ஆபத்துகள் என்ன தெரியுமா?

சிறிய தவறினால், உங்கள் உடலில் ஏற்படக்கூடிய மோசமான ஆபத்துகள் என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்துவது அல்லது உறங்கும் போது அருகிலேயே வைத்துக்கொள்வது போன்ற சிறிய தவறினால், உங்கள் உடலில் ஏற்படக்கூடிய மோசமான ஆபத்துகளை அறிந்துகொண்டு, ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் முறையைப் புத்திசாலித்தனமாக மாற்றிக்கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்கள் RF என்ற ரேடியோ கதிர்கள் மூலம் இயங்குகின்றன.

இது தான் காரணமா? இனி கொஞ்சம் கவனமாக இருக்கனும் போலயே?

இது தான் காரணமா? இனி கொஞ்சம் கவனமாக இருக்கனும் போலயே?

இவை நம் உடம்பில் படும்போது, நம்முடைய உடலில் இருக்கும் ஆரோக்கியமான செல்களை அழிக்க வல்லவை கொண்டதாகச் செயல்படுகிறது. இது நம்மில் பலருக்கும் நன்றாகவே தெரியும். இந்த காரணத்தினால் தான், உங்கள் ஸ்மார்ட்போனை எப்போதும் உங்களுடைய உடலில் இருந்து தள்ளி வைத்து தூரமாக பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?

ஆண்மை கோளாறு மற்றும் மன அழுத்தத்தை உருவாக்குமா?

ஆண்மை கோளாறு மற்றும் மன அழுத்தத்தை உருவாக்குமா?

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் உருவாக்கப்பட்ட ப்ளூடூத் ஹெட் போன், ப்ளூடூத் ஸ்பீக்கர், ப்ளூடூத் இயர்பாட் போன்றவை உங்களைப் பாதுகாப்பாக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. குறிப்பாக ஸ்மார்ட்போனை சட்டை பை அல்லது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த பழக்கத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள். இந்த பழக்கம் உங்களுக்கு ஆண்மை கோளாறு மற்றும் மன அழுத்தத்தை உருவாக்கும் என்று கன்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கொஞ்சம் இனி சீரியஸாக கவனித்துக்கொள்ளுங்கள்.

இந்த பழக்கம் உடல் உறுப்புகளைப் பாதிக்குமா?

இந்த பழக்கம் உடல் உறுப்புகளைப் பாதிக்குமா?

இறுக்கமான பேண்ட் பாக்கெட் மற்றும் உள்ளாடைகளை இடையில் போனை வைக்கும்போது, அதிலிருந்து வெளியாகும் ரேடியோ அலைகள் நேரடியாக உங்கள் உடல் உறுப்புகளைப் பாதிப்பதோடு, போனில் இருந்து வெளியேறும் வெப்பம் உங்கள் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆண்கள் பேண்ட் பாக்கெட்களில் போனை வைப்பதனால் அந்த வெப்பம் அவர்களின் உயிரணுக்கள் போன்றவற்றை அழித்து, ஆண்மைக் குறைவிற்குக் கொண்டு செல்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Jio, Airtel, Vi பயனர்களே இலவசமாக Disney+ Hotstar வேண்டுமா? அப்போ இதத்தான் நீங்க செய்யணும்!Jio, Airtel, Vi பயனர்களே இலவசமாக Disney+ Hotstar வேண்டுமா? அப்போ இதத்தான் நீங்க செய்யணும்!

தூங்கும் போது ஸ்மார்ட்போன்களை அருகில் வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா?

தூங்கும் போது ஸ்மார்ட்போன்களை அருகில் வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா?

அதேபோல், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உருவாவதற்கும் இவை வழிவகுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த பழக்கத்தைப் போலவே, நம்மில் பலருக்கும் தூங்கும் போது ஸ்மார்ட்போன்களை அருகில் வைத்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. குறிப்பாக, நீங்கள் உறங்கும் மெத்தைகள் மற்றும் தலையணைக்கு அடியில் உங்கள் போனை வைக்கும் போது, அதிலிருந்து வெப்பம் வெளியேற முடியாமல் உங்கள் போன் ஓவர் ஹீட் ஆகிவிடும்.

தீப்பிடித்து வெடித்துச் சிதற வாய்ப்பு அதிகமா?

தீப்பிடித்து வெடித்துச் சிதற வாய்ப்பு அதிகமா?

இந்த ஓவர் ஹீட் காலப்போக்கில், இன்னும் அதிக சூடாகி, சிறிது நேரத்தில் தீ பற்றவும் வாய்ப்புள்ளது. இதனால், உங்கள் அருகிலேயே உங்களுடைய ஸ்மார்ட்போன் தீப்பிடித்து வெடித்துச் சிதறவும் வாய்ப்புள்ளது. இப்படியான அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாவிட்டாலும் கூட, இந்த பழக்கத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் அதிக கதிர்வீச்சு காரணமாக உங்களுடைய உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பழக்கத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் மட்டும் உங்கள் காதிற்கு அருகில் போனை வைக்காதீர்கள்

இந்த நேரத்தில் மட்டும் உங்கள் காதிற்கு அருகில் போனை வைக்காதீர்கள்

ஆனால், இன்னும் இது நிரூபிக்கப்படவில்லை. எந்தவொரு மின்னணு சாதனமாக இருந்தாலும், அதன் தன்மையைச் சரியாக உணர்ந்து, அதற்கு ஏற்றாற்போல் பயன்படுத்தினால் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்காதீர்கள். குறிப்பாக, உங்கள் போனில் சிக்னல் அல்லது பேட்டரியின் அளவு குறைவாக இருக்கும் போது, அவற்றை காதிற்கு அருகில் வைத்துப் பயன்படுத்தாதீர்கள். இந்த நேரத்தில் ஏற்படும் மோசமான விளைவுகள் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
what happens when you place your smartphone next to you while sleeping

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X