Home
News

முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!

முகேஷ் அம்பானி கொடுத்தா கூரையை பிச்சிக்கிட்டுதான் கொடுப்பாரு என்று அடித்து சொல்லும்படி மாதத்துக்கு வெறும் ரூ.112 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஜியோசினிமா சந்தா போன்ற சலுகைகளை ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. இதேபோல 2 திட்டங்கள் இருக்கின்றன.

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் எவ்வளவு ஆஃபர்களை கொடுத்தாலும், ஜியோவுக்கு நிகராக வாடிக்கையாளர்களை கவர முடியவில்லை. ஆகவே, நாளுக்கு நாள் ஜியோவுக்கு மாறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 5ஜி சேவையை நோக்கி டெலிகாம் மார்கெட் மாறி வருகிறது.

முடிச்சிட்டாரு அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் சலுகைகள்!

இதனால், 4ஜி சேவையை ஒட்டுமொத்தமாக ஜியோ நிறுவனமே எடுத்துக்கொள்ளும் போல என்று சொல்லும் அளவுக்கு 2 திட்டங்களை களமிறக்கி இருக்கிறது. மாதத்துக்கு வெறும் ரூ.112 செலவில் ஆண்டு முழுவதும் சேவைகள் கிடைப்பதால், இந்த திட்டங்கள் எப்படி பார்த்தாலும் மற்ற நிறுவனங்களைவிட அதிக சலுகைகளையே கொண்டுள்ளன.

இந்த திட்டங்கள் ஜியோபாரத் போன், ஜியோ போன் ப்ரைமா மற்றும் ஜியோபோன்களுக்கு வழங்கப்படுகின்றன. சொல்லப்போனால், இவற்றில் ஜியோபோன்களுக்கு மிகவும் கம்மியான விலைக்கு வருடாந்திர திட்டம் வருகிறது. அதாவது, மாதத்துக்கு வெறும் ரூ 81 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ 1234 திட்ட விவரங்கள் (Jio Rs 1234 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ஜியோபாரத் போன்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

முடிச்சிட்டாரு அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் சலுகைகள்!

அதாவது, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) இந்த திட்டத்தில் செய்து கொள்ள முடியும். அதேபோல 28 நாட்கள் வீதம் 11 மாதங்களுக்கு 300 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக தினசரி 500 எம்பி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

ஆகவே, 168 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த 500 எம்பி டேட்டாவுக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசியின் அடிப்படையில் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ சாவன் (JioSaavn) சந்தா கிடைக்கிறது.

இதுபோல ஜியோசினிமா (JioCinema) ஓடிடி தளத்தின் சந்தாவையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஜியோசினிமா சந்தாவானது, பிரீமியம் கிடையாது. இந்த ஜியோபாரத் போன் திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. கிட்டத்தட்ட வருடம் முழுவதும் சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு மாதம் வெறும் ரூ.112 மட்டுமே தேவைப்படுகிறது. இதைவிட கம்மியான விலைக்கு ஜியோ போன் ப்ரைமா மற்றும் ஜியோபோன்களுக்கு திட்டம் வழங்கப்படுகின்றன. அதாவது, வெறும் ரூ 895 விலையில் 11 மாதங்களுக்கு டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): இந்த ஜியோபாரத் போன் (JioBharat Phone) திட்டத்திலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல 28 நாட்களுக்கு 50 எஸ்எம்எஸ்கள் வீதம் 11 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் டேட்டா சலுகையை பார்க்கையில், 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுவதால், 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 24 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே, ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 64 கேபிபிஎஸ் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கும் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதுபோக ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான மாத செலவை கணக்கிட்டால், ரூ 81 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, 5ஜி சேவை வருகைக்கு பிறகு ஜியோபேன்களில் 4ஜி சேவை அதிகமாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Do you know Jio Offers 336 Days Validity, Jiocinema Subscription, Unlimited Voice Calls For Rs 1234
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X