Home
News

போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?

அதே சைக்கிள்.. அதே வாடகை.. என்பது போல ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது.. பேடிஎம்-க்கு விதிக்கப்பட்ட ஒரு முக்கிய தடையை கோடாக் மஹிந்திரா வங்கிக்கும் (Kotak Mahindra Bank) விதித்துள்ளது.

கோடாக் மஹிந்திரா வங்கிக்கு அப்படி என்ன தடை விதிக்கப்பட்டுள்ளது? இந்த திடீர் தடைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இதன்கீழ் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்? ஏற்கனவே கோடாக் மஹிந்திரா வங்கியில் அக்கவுண்ட் வைத்து இருக்கும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நிலைமை என்ன? இதோ விவரங்கள்:

Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra Bank-க்கு வேட்டு வைத்த RBI!

கோடாக் மஹிந்திரா வங்கிக்கு என்ன தடை விதிக்கப்பட்டுள்ளது? ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேனல்கள் (Online and Mobile Banking Channels) வழியாக புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதை (Onboarding New Customers) உடனே நிறுத்துமாறு கோடக் மஹிந்திரா வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆர்பிஐ-யின் இந்த திடீர் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் புதிய கிரெடிட் கார்டுகளை (New Credit Cards) வழங்கும் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த திடீர் தடைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐடி இன்வென்ட்டரி மேலாண்மை (IT inventory management), பேட்ச் மற்றும் சேன்ஜ் மேலாண்மை (Patch and change management), யூசர் அக்செஸ் மேலாண்மை (User access management) ஆகிய துறைகளில் கடுமையான குறைபாடுகள் மற்றும் இணக்கமின்மைகள் காணப்பட்டுள்ளன.

Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra Bank-க்கு வேட்டு வைத்த RBI!

மேலும் வெண்டார் ரிஸ்க் மேலாண்மை (Vendor risk management), டேட்டா செக்யூரிட்டி மற்றும் டேட்டா லீக் தடுப்பு உத்தி (Data security and data leak prevention strategy), வணிக தொடர்ச்சி மற்றும் பேரழிவு மீட்பு பயிற்சி (Disaster recovery drill) ஆகிய துறைகளிலும் கூட குறைபாடுகள் மற்றும் இணக்கமின்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த மதிப்பீடுகளின் போது, ​​2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த செயல் திட்டங்களுடன் (Corrective Action Plans), கோடாக் மஹிந்திரா வங்கி ஆனது குறிப்பிடத்தக்க அளவில் இணங்கவில்லை மற்றும் கோடாக் மஹிந்திரா வங்கி சமர்ப்பித்த இணக்கங்கள் () போதுமானதாக இல்லை மற்றும் தவறானவைகளாக உள்ளன. இதன் விளைவாகவே இந்த திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra Bank-க்கு வேட்டு வைத்த RBI!

அடிக்கடி செயலிழப்பு, பின்னடைவுகள் மற்றும் குறைபாடுகளும் உள்ளன! வலுவான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் இடர் மேலாண்மை கட்டமைப்பு இல்லாததால், வங்கியின் கோர் பேங்கிங் சிஸ்டமின் (Core Banking System - CBS) ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் சேனல்கள் ஆனது கடந்த 2 ஆண்டுகளில் அடிக்கடி மற்றும் குறிப்பிடத்தக்க செயலிழப்பை (Frequent and significant outages) சந்தித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக வாடிக்கையாளர் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். கோடாக் மஹிந்திரா வங்கி ஆனது அதன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை (IT systems and controls) உருவாக்க தவறியதன் காரணமாக, இன்னும் சில பின்னடைவுகள் மற்றும் குறைபாடுகளின் காரணமாகவே.. ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேனல்கள் வழியாக புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதை உடனே நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்பிஐ-யின் இந்த திடீர் தடை ஏற்கனவே கோடாக் மஹிந்திரா வங்கியில் அக்கவுண்ட் வைத்து இருக்கும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை பாதிக்குமா? நிச்சயமாக பாதிக்காது. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் (Credit Card Customers) உட்பட கோடக் மஹிந்திரா வங்கியின் கீழ் இருக்கும் தற்போதைய வாடிக்கையாளர்கள் (Existing customers) அனைவருமே அனைத்து வகையான சேவைகளையும் தொடர்ந்து பெறுவார்கள் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Why RBI Stops Kotak Mahindra Bank Adding New Customers Via Online What Will Happen to Old Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X