தம்பி கடைய சாத்திட்டு கிளம்பு.. Meesho கதைய முடிச்சு விட்ட Amazon.. இனிமே Bazaar தான்!
மீஷோ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அஜியோ உட்பட.. இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் தளங்களுக்கு எதிராக, அமேசான் இந்தியா நிறுவனமானது ஒரு பெரிய வேலையை பார்த்துள்ளது. இந்நிறுவனம் தனது ஆப்பில் 'பஜார்' என்கிற புதிய ஸ்டோரை அறிமுகம் செய்துள்ளது.
அமேசான் பஜார் (Amazon Bazaar) என்றால் என்ன? இது அமேசான் இந்தியா ஆப்பின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்டோர் ஆகும். இதன்கீழ் அமேசான் இந்தியா வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையான பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அன்பிராண்டட் தயாரிப்புகளை (Unbranded products) வாங்க முடியும்!

அதாவது மிகவும் பிரபலம் அடையாத ஆனால் தரமான தயாரிப்புகளை விற்கும் விற்பனையாளர்களிடம் இருந்து கிடைக்கும் ஆடைகள், அணிகலன்கள், நகைகள், கைப்பைகள், காலணிகள், பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகள், சமையலறை பொருட்கள், படுக்கைகள், கைத்தறி மற்றும் அலங்கார பொருட்கள் போன்றவைகளை வாங்கலாம்.
அமேசான் இந்தியா நிறுவனம் ஆனது வழக்கமாக இரண்டு நாள் டெலிவரி என்கிற டைம்லைனை கொண்டிருக்கும் போது, அமேசான் பஜார் ஸ்டோரில் பட்டியலிடப்பட்ட தயாரிப்புகள் நான்கு முதல் ஐந்து நாட்கள் என்கிற மிக நீண்ட நாட்கள் டெலிவரி டைம்லைன்-ஐ கொண்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக மிகக்குறைந்த விலையில் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களால் பட்டியலிடப்பட்டுள்ள ஃபேஷன் மற்றும் வீட்டுப் பொருட்களை கண்டறிந்து ஷாப்பிங் செய்யலாம். அமேசான் நிறுவனத்தின் பஜார் ஆனது மீஷோ ஆப் (Meesho App) உடன் நேரடியாக போட்டியிடுகிறது. மீஷோவிடம் மட்டுமல்ல பிளிப்கார்ட்டின் ஷாப்ஸி ஆப் (Flipkart Shopsy App) மற்றும் அஜியோவின் கீழ் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்ட் ஃபேஷன் தளமான அஜியோ ஸ்ட்ரீட் (Ajio Street) ஆகியவைகள் உடனும் போட்டியிடும்.
பஜார் ஸ்டோரின் அறிமுகமானது, இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களை பெற அமேசானுக்கு ஒரு சாத்தியமான வழியாக இருக்கலாம். ஏற்கனவே இது நகர்ப்புற பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் வேகமான டெலிவரிகள் மற்றும் பிரீமியம் சலுகைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ப்ரைம் சந்தா தான்!
பெர்ன்ஸ்டீனின் ஜனவரி மாத அறிக்கையின்படி (Bernstein January report), கடந்த டிசம்பர் 2023 இல் அமேசான் இந்தியா ஆனது 13% பயனர் வளர்ச்சியை பெற்றுள்ளது. இதற்கு - அதன் சகாக்களை விட (அதாவது போட்டியாளர்களை விட) அதிக பிரீமியம் சலுகைகளை வாங்கியதே காரணமாகும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்த இ-காமர்ஸ் நிறுவனமானது, மற்ற ஆன்லைன் சந்தைகளை (Online marketplaces) போலவே, நுகர்வோர் ஈடுபாட்டை கொண்டு வர, இந்தியாவில் நேரடி வணிகங்களை (Live commerce) செய்வதற்கான சோதனையையும் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








