6 போன்கள் மீதும் ஆபர்.. ரூ.6000 க்கும் இருக்கு.. ரூ.10,000 க்கும் இருக்கு.. Amazon-ல் களைகட்டும் ஹோலி சேல்!
2024 ஹோலி பண்டிகையை முன்னிட்டு அமேசான் இந்தியா வலைத்தளமானது டெக்னோ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஒரு சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இதன்கீழ் வெவ்வேறு சீரிஸின் கீழ் அறிமுகமான 6 முக்கியமான டெக்னோ ஸ்மார்ட்போன்கள் மீதும் மிகப்பெரிய தள்ளுபடி மற்றும் பேங்க் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன டெக்னோ மாடல்கள் மீது ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது?
01. டெக்னோ ஸ்பார்க் 20
02. டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி
03. டெக்னோ ஸ்பார்க் 20சி
04. டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி
05. டெக்னோ பாப் 8
06. டெக்னோ ஸ்பார்க் கோ 2024

01. டெக்னோ ஸ்பார்க் 20 (Tecno Spark 20): 16ஜிபி வரையிலான ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 32எம்பி அல்ட்ரா கிளியர் செல்பீ, 50எம்பி ரியர் கேமரா போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது. வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இறுதி விலையை ரூ.9,249 ஆக குறைக்கலாம்.
02. டெக்னோ கேமன் 20 ப்ரோ 5ஜி (Tecno Camon 20 pro 5G): 64எம்பி ஆர்ஜிபிடபுள்யூ (ஜி+பி) ஓஐஎஸ் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடக்கிறது. வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இறுதி விலையை ரூ.17,249 ஆக குறைக்கலாம்.

03. டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C): 16ஜிபி வரையிலான ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 8எம்பி செல்பீ, 50எம்பி டூயல் ரியர் கேமரா போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இறுதி விலையை ரூ.6,999 ஆக குறைக்கலாம்.
04. டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro 5G): பேக் லைட்டிங் உடனான 3டி மெக்கா டிஸைன், 68W சார்ஜர் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இறுதி விலையை ரூ.9,999 ஆக குறைக்கலாம்.

05. டெக்னோ பாப் 8 (Tecno Pop 8): 8ஜிபி ரேம், டைனமிக் போர்ட் உடனான 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, டூயல் டிடிஎஸ் ஸ்பீக்கர் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,799 க்கு பதிலாக ரூ.6,599 க்கு வாங்க கிடைக்கிறது. வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இறுதி விலையை ரூ.6,104 ஆக குறைக்கலாம்.
06. டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024): டைனமிக் போர்ட், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டாட் டிஸ்பிளே, டைப்-சி சார்ஜர் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,999 க்கு பதிலாக ரூ.7,199 க்கு வாங்க கிடைக்கிறது. வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் இறுதி விலையை ரூ.6,284 ஆக குறைக்கலாம்
மேற்கண்ட டெக்னோ ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12ஆர், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட், ஐக்யூ இஸட்9 5ஜி, ஐபோன் 13, ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி, ரெட்மி 13சி 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி, போக்கோ எம்6 ப்ரோ 5ஜி, ஹானர் 9எக்ஸ்பி, ஐக்யூ இஸட்6 லைட், ரியல்மி நார்சோ 60 5ஜி உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் மீதும் சலுகைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








