உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

|

டிஜிட்டல் மயமாக மாறி வரும் இந்த ஸ்மார்ட் காலத்தில், போன் ஹேக்கிங் என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், இதனால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தொந்தரவுகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. செல்போன் ஹேக்கிங் புள்ளிவிவரங்களின்படி, 60 சதவீதத்திற்கும் அதிகமான மோசடி வழக்குகள் மொபைல் சாதனங்களின் (Smartphone) மூலமாக தான் நிகழ்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்களின் முக்கிய குறியே உங்க ஸ்மார்ட்போன் தானா?

மோசடிக்காரர்களின் முக்கிய குறியே உங்க ஸ்மார்ட்போன் தானா?

உலகம் எப்படி வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகிறதோ, அதுபோலவே மோசடிக்காரர்களும் அவர்களுடைய நாச வேலையை டிஜிட்டல் தளம் மூலமாகச் செய்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களின் முக்கிய குறியே ஸ்மார்ட்போன் பயனர்கள் தான், ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்து, அதன் மூலம் தகவல் திருட்டு, பிளாக்மெயில் என்று பல மோசடிகளை செய்கின்றனர். இதைச் செய்வதற்கு மோசடிக்காரர்கள் முதலில் ஸ்மார்ட்போனை ஹேக் செய்ய வேண்டும்.

ஹேக்கர்கள் தகவலைத் திருடி என்ன செய்வார்கள்?

ஹேக்கர்கள் தகவலைத் திருடி என்ன செய்வார்கள்?

அப்படி ஹேக் செய்தால் மட்டுமே, அந்த பயனரின் தகவலைத் திருடி, அவர்கள் நினைக்கும் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். சரி, இப்போது ஒரு ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் எப்படி அறிந்துகொள்வது? பெரும்பாலான நேரங்களில் நமக்குத் தெரியாமல் தான் இந்த ஹேக்கிங் வேலைகள் நடக்கிறது என்பதனால், ஹேக் செய்யப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை நாம் எப்படி அடையாளம் காண்பது என்று முதலில் தெரிந்துகொள்ளலாம்.

ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயசாகிவிடுமா? உண்மையை உடைத்த ஆராய்ச்சி!ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயசாகிவிடுமா? உண்மையை உடைத்த ஆராய்ச்சி!

உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியுமா?

உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியுமா?

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் சில அறிகுறிகளை வைத்துக் கண்டறியலாம். அப்படி, உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம். சரி, இப்போது உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டதா இல்லையா என்பதைக் கண்டறிய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளைப் படி கண்டறியலாம்.

மொபைல் ஸ்கிரீனில் விசித்திரமான மற்றும் பொருத்தமற்ற பாப்-அப்கள்

மொபைல் ஸ்கிரீனில் விசித்திரமான மற்றும் பொருத்தமற்ற பாப்-அப்கள்

ஹேக் செய்யப்பட்ட போனின் ஒரு உறுதியான அறிகுறி என்றால் உங்கள் போனில் தேவையற்ற நேரங்களில் நிலையான பாப்-அப் மெசேஜ்கள் ஓபன் ஆகும். பிரகாசமான விளம்பரங்கள் அல்லது X தரம் மதிப்பீடு செய்யப்பட்ட உள்ளடக்கம் காண்பிக்கப்பட்டால், உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

நீங்கள் செய்யாத மெசேஜ் அல்லது வாய்ஸ் கால்ஸ் நம்பர் காணப்படுகிறதா?

நீங்கள் செய்யாத மெசேஜ் அல்லது வாய்ஸ் கால்ஸ் நம்பர் காணப்படுகிறதா?

நாள் முழுவதும் உங்கள் போனை எத்தனை முறை பயன்படுத்தினீர்கள் என்பது உங்களுக்குக் கட்டாயமாக நினைவிருக்கும். எனவே, நீங்கள் செய்யாத வாய்ஸ் கால்ஸ் நம்பர் அல்லது மெசேஜ்கள் உங்கள் போனில் காணப்பட்டால், உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகிறது.

வழக்கத்தை விட எக்ஸ்ட்ரா டேட்டா யூசேஜ் அதிகமாக இருக்கிறதா?

வழக்கத்தை விட எக்ஸ்ட்ரா டேட்டா யூசேஜ் அதிகமாக இருக்கிறதா?

உங்கள் போனில் திடீரென வழக்கத்தை விட அதிகமாக டேட்டா பயன்படுத்தப்படுகிறது என்றால், நீங்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். அதிக டேட்டா பயன்பாட்டிற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், உங்கள் போனை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தாத போதும், டேட்டாவின் அளவு அதிகமாக யூசேஜ் செய்யப்பட்டிருந்தால், உங்கள் போனை கட்டாயம் நீங்கள் சோதனை செய்ய வேண்டும்.

உஷார் மக்களே.! Google Chrome எக்ஸ்டென்ஷன் மூலம் தகவல் திருட்டு.! உண்மை அம்பலமானது.!உஷார் மக்களே.! Google Chrome எக்ஸ்டென்ஷன் மூலம் தகவல் திருட்டு.! உண்மை அம்பலமானது.!

உங்கள் போனில் அடையாளம் தெரியாதா ஆப்ஸ்கள் இருக்கிறதா?

உங்கள் போனில் அடையாளம் தெரியாதா ஆப்ஸ்கள் இருக்கிறதா?

உங்கள் போனில் எந்த ஆப்ஸை நீங்கள் டவுன்லோட் செய்தீர்கள் என்று நிச்சயமாக உங்களுக்கு நினைவிருக்கும் தானே. அப்படி, நீங்கள் டவுன்லோட் செய்த ஆப்ஸ்களுக்கு மத்தியில் ஏதேனும் அடையாளம் தெரியாத ஆப்ஸ் காணப்பட்டால், உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.

வேகமாக பேட்டரி ரெட் மார்க்கிற்கு செல்கிறதா?

வேகமாக பேட்டரி ரெட் மார்க்கிற்கு செல்கிறதா?

உங்கள் போனின் பேட்டரி ஆயுளை வைத்து, உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நாம் கண்டறியலாம். நீங்கள் பயன்படுத்தும் உங்கள் ஸ்மார்ட்போன் பழக்கம் மாறாமல் இருந்தும், உங்கள் போனின் பேட்டரி மட்டும் மிகவும் வேகமாகத் தீர்ந்து ரெட் மார்க்கை அடிக்கடி காட்டுகிறதா? அப்படியானால், உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஹேக் செய்யப்பட்டதிலிருந்து தப்பிக்க எதுவும் வழி இருக்கிறதா?

ஹேக் செய்யப்பட்டதிலிருந்து தப்பிக்க எதுவும் வழி இருக்கிறதா?

  • உங்கள் போனை ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர் மூலம் ஸ்கேன் செய்யலாம்.
  • உங்கள் போனை பேக்டரி ரீசெட் செய்யலாம்.
  • சந்தேகத்திற்கிடமான மொபைல் ஆப்ஸ்களை போனில் இருந்து நீக்கிவிடலாம்.
  • உங்கள் போனின் பாஸ்வோர்டை மாற்றி அமைக்கலாம்.
  • ஹேக்கில் இருந்து தப்பிக்க இது ஒன்று தான் இறுதி வழியா?

    ஹேக்கில் இருந்து தப்பிக்க இது ஒன்று தான் இறுதி வழியா?

    உங்கள் ஃபோன் ஹேக் செய்யப்பட்டதை நீங்கள் கவனித்தால், உடனடியாக சேவை மையத்திற்குச் சென்று அதைச் சரி பார்க்கவும். ஹேக் செய்யப்பட்ட போன் பாதுகாப்பு மீறல்களை ஏற்படுத்தலாம். இதனால், மோசக்காரர்களின் வலையில் சிக்கிப் பல சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எது எப்படியாக இருந்தாலும், உங்கள் போன் வழக்கத்திற்கு மாறாகச் செயல்படுகிறது என்றால் உடனே உஷார் ஆக்கிக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Know If Your Smartphone Is Hacked

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X