அம்மாடி யோவ்.. 65% டிஸ்கவுண்ட்-ஆ! அப்போ பெட்ரூமுக்கு ஒன்னு.. ஹாலுக்கு ஒரு Smart TV வாங்கிடலாம் போலயே!
வீட்டிற்கு புதிய ஸ்மார்ட் டிவி ஒன்றை வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால்.. அதிலும் சாம்சங், சோனி, ரெட்மி போன்ற நிறுவனங்களிடம் இருந்து ஏதேனும் ஒரு மாடலைத்தான் வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் என்றால்.. இதுதான் சரியான நேரம்!
ஏனென்றால் அமேசான் இந்தியா வலைத்தளமானது ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடக்கும் ஒரு சிறப்பு விற்பனையின் கீழ், தேர்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளின் மீது 65% வரையிலான தள்ளுபடியை வழங்குகிறது. கிராண்ட் ஃபெஸ்டிவ் சேல் 2024 என்கிற பெயரின்கீழ் நடக்கும் இந்த விற்பனையில் என்னென்ன டிவி மாடல்கள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

சோனி பிராவியா 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony Bravia 55-inch 4K Ultra HD Smart LED Google TV) ஆனது, அமேசான் கிராண்ட் ஃபெஸ்டிவ் விற்பனையின் கீழ் ரூ.47,990 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடல் மீது 12 மற்றும் 18 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மற்றும் ரூ.8000 பேங்க் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் 43-இன்ச் கிரிஸ்டல் விஷன் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 43-inch Crystal Vision 4K Ultra HD Smart LED TV) மாடல் ஆனது அமேசான் கிராண்ட் ஃபெஸ்டிவ் விற்பனையின் போது ரூ.29,990 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த டிவி மீது 12 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மற்றும் ரூ.2000 பேங்க் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாவ்மீ 43-இன்ச் எக்ஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Xiaomi 43-inch X Series 4K Ultra HD Smart Google TV) ஆனது ரூ.25,249 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல எல்ஜி 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 55-inch 4K Ultra HD Smart LED TV) ஆனது ரூ.43,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (Redmi 43-inch 4K Ultra HD Smart) மாடல் ஆனது ரூ.22,749 க்கும், வு 55-இன்ச் 4கே ஸ்மார்ட் எல்இடி ஸ்மார்ட் டிவி (Vu 55 inch 4K Smart LED TV) ஆனது ரூ.36,249 க்கும், ஷாவ்மீ 65-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (Xiaomi 65-inch 4K Ultra HD Smart TV) மாடல் ஆனது ரூ.59,990 க்கும் வாங்க கிடைக்கிறது.
ஏசர் 40-இன்ச் புல் எச்டி ஸ்மார்ட் டிவி (Acer 40-inch Full HD Smart TV) மாடல் ரூ.15,749 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் மீது 12 மற்றும் 18 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மற்றும் ரூ.2250 பேங்க் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎல் 40-இன்ச் புல் எச்டி ஸ்மார்ட் டிவி (TCL 40-inch Full HD Smart TV) மாடல் ரூ.15,990 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடல் மீது 6 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மற்றும் ரூ.1000 பேங்க் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஒன்பிளஸ் 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (OnePlus 43-inch 4K Ultra HD Smart TV) ஆனது ரூ.21,249 க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதன்மீது ரூ.1,750 பேங்க் ஆபர் கிடைக்கிறது. கடைசியாக ஹைசென்ஸ் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (Hisense 55-inch 4K Ultra HD Smart TV) மாடல் ஆனது ரூ.30,249 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீது 6 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மற்றும் ரூ.2250 பேங்க் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமேசானின் இந்த சிறப்பு விற்பனையின் கீழ்.. எச்டிஎப்சி (HDFC) மற்றும் எஸ்பிஐ (SBI) கார்டுகள் வழியாக வாங்கினால் ரூ.5,000 வரையிலான உடனடி தள்ளுபடி, 18 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்கள், ரூ. 6,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் 4 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் உள்ளிட்ட கூடுதல் சலுகைகள் மற்றும் பலன்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications