பழைய ஸ்மார்ட்போன் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்று பாருங்கள்...

By Meganathan
|

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளீர்களா, பழைய ஸ்மார்ட்போன் உங்களிடம் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி, ஆமாம் பழைய ஸ்மார்ட்போனை கொண்டு பல விஷயங்களை செய்யலாம்.

ஹானர் 8எக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்க 8 காரணங்கள்.!

பழைய ஸ்மார்ட்போனை கொண்டு என்னென்ன செய்ய முடியும் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

1

1

ஹாட்ஸ்பாட் வசதியை பயன்படுத்தி உங்களது பழைய ஸ்மார்ட்போனை ரவுட்டராகவும் பயன்படுத்தலாம்.

பழைய ஸ்மார்ட்போனில் 3ஜி சிம் கார்டை பொருத்தி உங்களது மற்ற கருவிகளுக்கு இணைய வசதி கொடுக்கலாம். ஆனால் பத்திரமாக பாஸ்வேர்டு தேர்வு செய்ய வேண்டும்.

2

2

உங்களது ஸ்மார்ட்போனில் டிவி அவுட் இருந்தால், அதை தொலைகாட்சியில் இனைத்து திரைப்படங்களை பார்க்கலாம்.

பழைய ஸ்மார்ட்போனை தொலைகாட்சியுடன் இனைக்க MHL அல்லது HDMI கேபிள் தேவைப்படும்.

3

3

செயளிகளின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. உங்களுக்கு தேவையான மற்றும் உபயோகமான செயளிகளை பழைய ஸ்மார்ட்போனில் பயன்படுத்திவிட்டு பின் உங்களுக்கு தேவைப்பட்டால் புதிய ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யலாம்.

4

4

உங்களது ஸ்மார்ட்போனை பாதுகப்பு கேமராவாக மாற்ற பல செயளிகள் கிடைக்கின்றது. ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு IP வெப் கேம் செயளியும், ஐஓஎஸ் பயன்படுத்துபவர்கள் iVigilo ஸ்மார்ட்கேம் செயளியை பயன்பபத்தலாம்.

5

5

மென்பொருள் சமநிலைப்படுத்தி உங்களது ஸ்மார்ட்போனில் பழைய வீடியோகேம்களை விளையாட முடியும்.

6

6

பழைய ஸ்மார்ட்போனில் MapmyIndia பயன்படுத்தி தெரியாத இடங்களை கண்டறிய முடியும். இதற்கென தனியாக ஜிபிஎஸ் கருவி ஏதும் பொருத்த தேவையில்லை.

7

7

உங்களது கணினியை தொலைகாட்சியுடன் இனைத்திருந்து அதை பயன்படுத்த அருகில் அமர்ந்திருக்கின்றீர்களா, அப்படியானால் உங்களது ஸ்மார்ட்போனை மவுஸ் மற்றும் கீபோர்டாக மாற்றும் Mobile Mouse Lite என்ற செயளியை www. mobilemouse.com தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுகங்கள்.

8

8

புகைப்படங்கள் எடுக்கும் போது மெமரி தீர்ந்துவிட்டால் புகைப்படங்களை பழைய ஸ்மார்ட்போனுக்கு மாற்றிவிடலாம்.

9

9

காரில் HUD பொருத்த உங்களது பழைய ஸ்மார்ட்போன் பயன்படும், இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Ulysse Speedometer எந்ற செயளியை பதிவிறக்கம் செய்து, நாண் ஸ்லிப் மேட்டில் போனை வைத்து செயளியை HUD மோடிற்கு மாற்றினால் வேலை முடிந்தது.

10

10

காரில் இருக்கும் சில கருவிகள், காரின் வேகம், எரிபொருள் இருப்பு நிலை ஆகியவற்றை மட்டும் தான் காண்பிக்கும், ஆனால் OBD II மூலம் காரின் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இதற்கு ஆன்டிராய்டு அல்லது ஐஓஎஸ் ஸ்மார்ட்போன் மற்றும் DashCommand, PLX Devices செயளி இருந்தால் போதுமானது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Things to do with your old smartphone. Bought a new smartphone, don't throw your old one away. You can do a lot more things with your old smartphone and here you will find what you can do with your old smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X