Home
Mobile

வா தலைவா வா.. 512ஜிபி மெமரி.. டெலிபோட்டே லென்ஸ்.. மே.17 களமிறங்கும் Sony ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

நீண்ட நாட்களுக்கு பிறகு சோனி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது சோனி எக்ஸ்பிரீயா நிகழ்ச்சி வரும் மே 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சோனி நிறுவனத்தின் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சோனி எக்ஸ்பிரீயா 1 VI பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனும் (Sony Xperia 1 VI flagship) இந்த சோனி நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான சோனி எக்ஸ்பிரீயா 1 ஏஐ பிளாக்ஷிப் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

வா தலைவா வா.. மே.17 களமிறங்கும் Sony ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

சோனி எக்ஸ்பிரீயா 1 VI அம்சங்கள் (Sony Xperia 1 VI specifications): குவாட் எச்டி பிளஸ் (Quad HD+) டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான சோனி எக்ஸ்பிரீயா 1 ஏஐ போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 3200 x 1440 பிக்சல்ஸ், 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சோனி எக்ஸ்பிரீயா 1 VI போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

48எம்பி Exmor T sensor + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டே லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சோனி எக்ஸ்பிரீயா 1 VI போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்று இந்த போன் 16எம்பி அல்லது 32எம்பி கேமரா உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களிர் இந்த சோனி எக்ஸ்பிரீயா 1 VI போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புத்தம் புதிய சோனி எக்ஸ்பிரீயா 1 VI ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

வா தலைவா வா.. மே.17 களமிறங்கும் Sony ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

அதேபோல் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளன. மேலும் இன்-டிஸ்பிளே கைேரைகை ஸ்கேனர், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த புதிய சோனி ஸ்மார்ட்போனில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏஐ (AI) அம்சங்களுடன் இந்த புதிய சோனி எக்ஸ்பிரீயா 1 VI போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக சோனி எக்ஸ்பிரீயா 1 VI ஸ்மார்ட்போன் மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் இருக்கும். குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய சோனி ஸ்மார்ட்போன்.

Photo courtesy: @ONLEAKS x @ANDROIDHEADLINE, sony

Best Mobiles in India

English summary
Sony Xperia 1 VI will be launched on May 17: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X