Home
News

Jio குடும்ப திட்டம்.. ஒரே பிளான் 3 சிம்.. 100GB டேட்டா.. Netflix.. Amazon Prime சந்தா இலவசம்.. எந்த திட்டம்?

ஜியோ (Jio) நிறுவனம் இப்போது ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் அதன் திட்ட நன்மைகளை வழங்கிவந்ததை தாண்டி, ஒரு வாடிக்கையாளரின் ஒட்டுமொத்த குடும்ப நபர்களுக்கும் அந்த திட்டத்தின் நன்மைகளை ஜியோ பேமிலி பிளான் (Jio Family Plan) மூலம் கிடைக்கும் படி செய்துள்ளது.

ஆம் மக்களே, சரியாக தான் படித்தீர்கள். ஜியோ நிறுவனம் இப்போது ஒரு அளவான குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை ஒரே திட்டத்தின் மூலம் வழங்கி அசத்தியுள்ளது. வெறும் ரூ. 699 விலையில் மொத்தமாக 4 சிம் கார்டுகளை (SIM card) இந்த திட்டத்துடன் வாடிக்கையாளர்கள் இணைக்க ஜியோ இப்போது அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

Jio குடும்ப திட்டம்.. ஒரே பிளான் 3 சிம்.. 100GB டேட்டா..

ஜியோ ரூ. 699 பேமிலி பிளான் (Jio Rs 699 Family Plan):

ஜியோ நிறுவனம் இந்த ரூ. 699 திட்டத்தை ஒரு போஸ்ட்பைட் திட்டமாக (Jio Postpaid Plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிறுவனம் இப்போது 100ஜிபி டேட்டா நன்மையை (Jio 100GB data benefits) வழங்குகிறது. ஜியோ இந்த திட்டத்துடன் இலவசமாக நெட்ஃபிலிக்ஸ் (Netflix) மற்றும் அமேசான் பிரைம் (Amazon Prime) போன்ற ஓடிடி (OTT) சேனல்களின் சந்தாவையும் இந்த திட்டம் வழங்குகிறது.

இது தவிர இந்த ஜியோ ரூ. 699 பேமிலி பிளான் திட்டம் உங்களுக்கு 3 சிம் இணைப்புகளை (Jio SIM connections) வழங்குகிறது. இந்த 3 சிம் கார்டுகளையும் நீங்கள் இந்த ஒரே திட்டத்தின் கீழ் வெறும் ரூ.99 செலவில் இயக்கிக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தேவையான நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது.

என்ன நன்மைகள் என்று பார்க்கையில், எல்லா இணைப்புகளுக்கு எஸ்எம்எஸ் (SMS) நன்மை, வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை மற்றும் 5ஜி டேட்டா நன்மை (5G data benefits) போன்றவற்றை எல்லா கூடுதல் சிம் இணைப்புகளுக்கு ஜியோ இந்த திட்டத்துடன் சேர்த்து இலவசமாக வழங்குகிறது. ஜியோவின் ரூ.699 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு வசதி கிடைக்கிறது.

இன்னும் என்னென்ன இலவச நன்மைகள் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது?

இத்துடன், 100ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா (high-speed data) நன்மை வழங்கப்படுகிறது. இது தவிர 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. இதனுடன், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் சந்தாவும் திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ரூ 699 திட்டம் ஒரு மாத இலவச சோதனையுடன் வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குடும்பத்தின் மூன்று உறுப்பினர் சிம்களை சேர்க்கலாம்.

ஒவ்வொரு சிம்மைச் சேர்ப்பதற்கும் ரூ.99 கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஜியோ கூறியுள்ளது. இத்துடன் ஜியோ வழங்கும் கூடுதல் இலவச சேவைகளும் பயன்படுத்த கிடைக்கிறது. ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகியவற்றின் இலவச சந்தாவும் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

மற்ற நன்மைகளை பற்றி பேசுகையில், இந்த ஜியோ ரூ. 699 போஸ்ட்பைட் திட்டத்தில் நீங்கள் 100 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள், அது தீர்ந்துவிட்டால், ஒரு ஜிபிக்கு ரூ. 10 வீதம் வசூலிக்கப்படும் என்று ஜியோ அறிவித்துள்ளது. ஒரே திட்டத்தின் கீழ் வெறும் 99 ரூபாய் செலவில் 3 இணைப்புகளை அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் பெறுவது மிகவும் சிறந்த நன்மையாக பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 699 Family Plan With 100GB Data Unlimited Voice SMS Free Netflix Amazon Prime OTT Subscription 3 Additional SIM card
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X