Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் தனது ஐடெல் எஸ்24 ஸ்மாரட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஐடெல் எஸ்24 போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமேசான் உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தான் ஐடெல் எஸ்24 போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய ஐடெல் போன் இந்தியாவுக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. வருகிறது itel போன்..

ஐடெல் எஸ்24 அம்சங்கள் (itel S24 Specifications): 6.6-இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான ஐடெல் எஸ்24 போன் அறிமுகமாகும். மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி91 12என்எம் (Octa Core MediaTek Helio G91 12nm) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஐடெல் எஸ்24 போன் அறிமுகமாகும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52 எம்சி 2 ஜிபுயு (Mali G52 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. வருகிறது itel போன்..

இதுதவிர ஐடெல் எஸ்24 போனில் ஹைபர் என்ஜின் (HyperEngine) டெக்னாலஜி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். ஐடெல் ஓஸ் 13 (itel OS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய மூன்று வேரியண்ட்களில் இந்த அசத்தலான ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

108 எம்பி சாம்சங் எச்எம்6 ஐசோசெல் (Samsung ISOCELL HM6) சென்சார் + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது இந்த ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன். மேலும் 3எக்ஸ் இன்-சென்சார் ஜூம் (3X In-sensor Zoom) சப்போர்ட், சூப்பர் நைட் மோட் (Super Night Mode), ஸ்ட்ரீட் போட்டோகிராபி பில்டர்கள் (Street Photography Fliters) போன்ற பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் போர்ட்ராய்டு மாஸ்டர் (Portrait Master),மூவி மாஸ்டர் (Movie Master), டூயல் வீயூ வீடியோ (Dual-view Video), வீடியோ பொக்கெ (Video Bokeh), சூப்பர் ஸ்டெடி வீடியோ ஸ்டெபிளைசேஷன் (Super Steady Video Stabilization)போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. வருகிறது itel போன்..

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கூட உள்ளது. யுஎஸ்பி சி போர்ட் (USB-C port), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), ஃபேஸ் அன்லாக், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

அதேபோல் ஸ்டார்ரி பிளாக் (Starry Black), டான் ஒயிட் (Dawn White) மற்றும் கோஸ்ட்லைன் ப்ளூ (Coastline Blue)ஆகிய நிறங்களில் ஐடெல் எஸ்24 போனை வாங்க முடியும். மேலும் ஐடெல் எஸ்24 போன் ஆனது இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
itel S24 confirmed to launch in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X