நீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி

|

ரிலையன்ஸ் ஜியோ டிசம்பர் 6 ஆம் தேதி முதல் கட்டணத் திட்டங்களில் மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றத்தில் திட்டத்தின் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்குமாறாக ரூ.49-க்கு வழங்கப்பட்டு வந்த திட்டத்தை ஜியோ நீக்கியுள்ளது. அதற்கு மாறாக அதே திட்டத்தை ரூ.75-க்கு ஜியோ வழங்குகிறது.

ரூ.49 திட்டத்தை நீக்கிய ஜியோ:

ரூ.49 திட்டத்தை நீக்கிய ஜியோ:

நாடு முழுவதும் ஏராளமான சந்தாதாரர்களை கொண்ட ஜியோ தற்போது தங்களது திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தற்போது ரூ.49 திட்டத்தை ஜியோ ரத்து செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஜியோ பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பையும் ,எந்த FUP வரம்பும் இல்லாமல் 1 ஜிபி டேட்டாவையும் 28 நாட்களுக்கு வழங்கியது. தற்போது இந்த திட்டம் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.

ரூ.75 அதே சலுகைகளை வழங்கும் ஜியோ:

ரூ.75 அதே சலுகைகளை வழங்கும் ஜியோ:

நிறுவனம் ஜியோபோன் திட்டங்களின் விலையை அதிகரிக்கவில்லை என்றாலும், அடிப்படை ரீசார்ஜ் பேக் இப்போது ரூ .75 இல் தொடங்குகிறது. ஜியோபோன் பயனர்களுக்கான ஆல் இன் ஒன் திட்டங்கள் ரூ .75, ரூ.125, ரூ .155 மற்றும் ரூ .185 போன்ற விலைகளுக்கு வழங்குகிறது.

விக்ரம் லேண்டர்: சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு.!விக்ரம் லேண்டர்: சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு.!

வரம்பற்ற கால் மற்றும் 28 நாட்கள் திட்டம்:

வரம்பற்ற கால் மற்றும் 28 நாட்கள் திட்டம்:

ரூ.75 திட்டத்தில் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ கால், 500 நிமிடங்கள் ஜியோ அல்லாத அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எம்பி டேட்டா மற்றும் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாட்களில் இருந்து 28 நாட்களுக்கு மொத்தம் 50 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதையடுத்து ரூ.49-க்கு ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக ரூ.75-க்கு ரீசார்ஜ் செய்து பலன்களை பெறலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.149 திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.149 திட்டம்:

ஏர்டெலில் ரூ.149-க்கு ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம். 28 நாட்களுக்கு முழுவதுமாக 2 ஜிபி டேட்டா வசதி மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. அதேபோல் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் சந்தாதாரர்கள் அனைத்து நெட்வொர்க்கும் வரம்பற்ற அழைப்பை அனுபவிக்கலாம். இந்த திட்டத்தின் பிற கூடுதல் நன்மைகள் விங்க் மியூசிக் பயன்பாடு மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டிற்கான அணுகல் ஆகியவை கிடைக்கும்.

வோடபோன் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்:

வோடபோன் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்:

வோடபோன் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் 28 நாட்களுக்கு முழுவதுமாக 2 ஜிபி டேட்டா வசதி மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. அதேபோல் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் சந்தாதாரர்கள் அனைத்து நெட்வொர்க்கும் வரம்பற்ற அழைப்பை அனுபவிக்கலாம். இது ஏர்டெல் நிறுவனத்தை போன்றே அதே நன்மைகளை வழங்குகிறது.

ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவுஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு

ஜியோ ரூ.129 திட்டம்:

ஜியோ ரூ.129 திட்டம்:

ஜியோ ரூ.129 திட்டத்தில் அதேசலுகைகளை வழங்குகிறது. ஏர்டெல், வோடபோன் நிறுவனத்தை விட 20 ரூபாய் குறைவாக இருந்தாலும் இதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. ரூ.129 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் 28 நாட்களுக்கு முழுவதுமாக 2 ஜிபி டேட்டா வசதி மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. ஆனால் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற கால் அழைப்பு மற்றும் பிற நெட்வொர்க்களுக்கு 1000 நிமிடங்கள் அழைப்பு வசதியை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance jio removes RS 49, Airtel and Vodafone Idea Still Hold an Advantages!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X