விக்ரம் லேண்டர்: சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு.!

|

விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு உதவிய சண்முக சுப்ரமணி அவர்களை நேரில் அழைத்து மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் பாராட்டியுள்ளார்.

 சந்திரயான்-2

சந்திரயான்-2

இந்திய விண்வெளி ஆய்வு மையம் 'இஸ்ரோ' சார்பில், ஜூலை 22ல், சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக தரையிறங்கப்பட வேண்டிய 'விக்ரம் லேண்டர்' கருவி, தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதன் தொடர்பை இழந்தது.

ஆர்பிட்டர்

ஆர்பிட்டர்

சந்திரயான் 2விண்கலத்தில் விக்ரம் லேண்டர், ஆர்பிட்டர், ரோவர் உள்ளிட்டவை இருந்தன. இஸ்ரோ திட்டமிட்டிருந்தபடி, சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து ஆர்பிட்டர் தனியாக பிரிந்து நிலவை சுற்றிவரத் தொடங்கியது. ஆனால், நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில் லேண்டர்‌ உடனான தொடர்பு கடந்த செப்ட்டம்பர் மாதம் 7ஆம் தேதி துண்டிக்கப்பட்டது.

13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.!13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.!

 நாசவும் உதவி புரிந்து வந்தது

நாசவும் உதவி புரிந்து வந்தது

அதன்பின்பு லேண்டரை கண்டுபிடிக்கு பணியில் இஸ்ரோ ஈடுபட்டது, இதற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசவும் உதவி புரிந்து வந்தது. இந்த ஆய்வின் ஒருபகுதியாக, விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தை நாசாவின் லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் செப்டம்பர் 26ஆம் தேதி நாசா வெளியிட்டது.

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள்

மேலும் அதனை கொண்டு ஆய்வு செய்ய தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியம், விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியபடுத்தினார். அதன் அடிப்படையில் தான் ஆய்வு செய்த நாசாவும் அதனை உறுதிபடுத்தியுள்ளது.

 நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்

நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்

இந்தநிலையில் நாசாவுக்கு உதவிய சண்முக சுப்ரமணியனை நேரில் அழைத்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

 மக்கள் நீதி மய்யத்தின் டிவிட்டர்

மக்கள் நீதி மய்யத்தின் டிவிட்டர்

மேலும் இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் டிவிட்டர் பக்கத்தில் சந்திராயன்-2 விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியனை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கமல் ஹாசன் தெரிவித்தார் என்று பதிவிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
kamal haasan greets shanmuga subramanian who helped to find vikram lander : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X