Airtel கஸ்டமர்களுக்கு ஜாக்பாட்.. "இதை" பண்ணா போதும்.. பிராட்பேண்ட் பில்லில் ரூ.600 டிஸ்கவுண்ட் கன்ஃபார்ம்!
பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் பிராட்பேண்ட் கஸ்டமர்களை குஷிப்படுத்தும் படியான.. ஒரு வித்தியாசமான சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன் கீழ் பிராட்பேண்ட் பில்லில் ரூ.200 முதல் ரூ.600 வரையிலான டிஸ்கவுண்ட்டை பெற முடியும். அதெப்படி? இச்சலுகை குறித்த முழு விவரங்கள் இதோ:
ஏர்டெல் (Airtel) நிறுவனம் தனது ப்ரீபெய்ட் (Prepaid) சேவையின் கீழ் உள்ள வாடிக்கையாளர்கள் போஸ்ட்பெய்ட் (Postpaid) சேவைக்கு மாறுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தின் கீழ்.. ப்ரீபெய்ட்டில் இருந்து போஸ்ட்பெயிட்டிற்கு அப்கிரேட் ஆகும் கஸ்டமர்களுக்கு ரூ.200 - ரூ.600 வரையிலான டிஸ்கவுண்ட் ஆஃபரை அறிவித்துள்ளது.

இதை வித்தியாசமான ஒரு சிறப்பு சலுகை என்று கூற என்ன காரணம்? ஏர்டெல்லின் இந்த டிஸ்கவுண்ட் சலுகையை பெற விரும்பும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணில் ஆக்டிவ் ஆக உள்ள ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து இருக்க வேண்டும். நீங்கள் ரீசார்ஜ் செய்துள்ள திட்டத்தில் மீதமுள்ள வேலிடிட்டி ஆனது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அது ஒருவகையான "இழப்பீடு" ஆக.. டிஸ்கவுண்ட் வடிவில் உங்களிடமே வந்து சேரும்.
அதாவது 1 முதல் 28 நாட்களுக்குள் என்கிற அளவிலான வேலிடிட்டி உங்களிடம் மீதம் இருந்தால்.. 2 மாத காலத்திற்கு, ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் பில்லில் ரூ.100 தள்ளுபடி (மொத்தம் ரூ.200) கிடைக்கும். அதுவே 29 முதல் 56 நாட்களுக்குள் என்கிற அளவிலான வேலிடிட்டி உங்களிடம் மீதம் இருந்தால்.. 4 மாத காலத்திற்கு, ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் பில்லில் ரூ.100 தள்ளுபடி (மொத்தம் ரூ.400) கிடைக்கும்.

கடைசியாக 57 நாட்களுக்கு மேல் மீதமுள்ள வேலிடிட்டி உங்களிடம் இருந்தால், 6 மாத காலத்திற்கு, ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் பில்லில் ரூ.100 தள்ளுபடி (மொத்தம் ரூ.600) கிடைக்கும். குறிப்பிட்டுள்ளபடி, இந்த தள்ளுபடி மாதந்தோறும் ரூ.100 என்கிற மதிப்பில் மட்டுமே வழங்கப்படும்; அதிகபட்சம் 6 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் இந்த சலுகை ஏர்டெல் போரட்டலில் மட்டுமே கிடைக்கும்.
சமீபத்தில் வெளியான டிராய் அறிக்கையானது.. பார்தி ஏர்டெல் நிறுவனமானது கடந்த பிப்ரவரியில் 1.5 மில்லியன் வயர்லெஸ் பயனர்களையும், கடந்த ஜனவரியில் 0.75 மில்லியன் வயர்லெஸ் பயனர்களையும் சேர்த்துள்ளது. இதன் மூலம் 2024-ல் இதுவரையிலாக மொத்தம் 2.25 மில்லியன் சந்தாதாரர்களை ஏர்டெல் சேர்த்துள்ளது. இந்த தரவு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மாதாந்திர செயல்திறன் குறிகாட்டி அறிக்கையில் (Monthly performance indicator report) இருந்து பெறப்பட்ட தரவுகளாகும்.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர் ஆன.. முகேஷ் அம்பானி தலைமையிலான.. ஜியோ நிறுவனம் ஆனது கடந்த 2024 பிப்ரவரியில் 3.5 மில்லியன் வயர்லெஸ் பயனர்களையும், கடந்த ஜனவரியில் 4.1 மில்லியன் பயனர்களையும் சேர்த்துள்ளது. அதாவது மொத்தம் 7.6 மில்லியன் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது.
எப்போது விலை உயர்வு? 2024 மார்ச் மாத தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டல், ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வு குறித்து பகீர் தகவலொன்றை பகிர்ந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின் ஏஆர்பியூ (ARPU), அதாவது ஆவரேஜ் ரெவின்யூ பெர் யூசர் (Average Revenue Per User) ஆனது இப்போது ரூ.200 ஆக உள்ளது. அதை ரூ.300 க்கு செல்ல வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறி இருந்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலின்படி பார்தி ஏர்டெல் நிறுவனமானது தற்போது நல்ல வளர்ச்சியில் இருப்பதால்.. 2024 ஜூலை - அக்டோபர் மாத வாக்கில்.. மக்களவை தேர்தல் முடிந்த பிறகு.. சுமார் 15 - 17% கட்டண உயர்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், கடைசியாக கடந்த 2021-ல் 20% விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications








