உண்மையாவா? இந்தியாவின் முதல் 35 நாள் வேலிடிட்டி பிளான்.. அம்பானி செய்யாததை Airtel செய்துவிட்டது.. என்ன நன்மை?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 35 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (Validity) உடைய புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid plan) விலை திருத்தத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனம் டெலிகாம் துறையில் சிறந்த விளங்க பல புதிய திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அம்பானி நிறுவனமான ஜியோவே (Jio) வழங்க முடியாத ஒரு நன்மையை இப்போது ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக 35 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (35 days validity prepaid recharge plan) வழங்கி உள்ளது.

இந்தியாவில் உள்ள எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் இத்தகைய வேலிடிட்டியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் (Airtel) நிறுவனம் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ. 329 என்ற விலையில் வழங்குகிறது. இதற்கு முன்பு இந்த திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் ரூ. 289 விலையில் வழங்கி (Airtel Rs 289 Prepaid Plan) வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலையில் வழங்கி வந்த திட்டத்தை நிறுவனம் இப்போது விலை மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
புதிய விலை மாற்றத்துடன் ஏர்டெல்லின் இந்த ரூ. 289 திட்டம் இப்போது ரூ. 329 என்ற புதிய விலையுடன் வருகிறது. ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்திலன் விலையை ரூ.40 அதிகரித்துள்ளது. விலை அதிகரிக்கப்பட்டால் நன்மை அதிகரிக்கப்பட வேண்டும் தானே, ஆனால், ஏர்டெல் நிறுவனம் அத்தகைய செயலை எதுவும் செய்யவில்லை என்று தெரிகிறது. காரணம், இந்த திட்டத்தின் பழைய நன்மைகள் அப்படியே உள்ளது.
இந்த புதிய ரூ. 329 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 329 Prepaid Recharge Plan) டேட்டா (data) நன்மை, வாய்ஸ் கால்ஸ் (voice calls) நன்மை, எஸ்எம்எஸ் (SMS) மற்றும் இலவச நன்மைகளை (free benefits) இந்த திட்டம் வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் பிளான் 4ஜிபி டேட்டா (4GB data) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் பயனர்களுக்கு 35 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையும் கிடைக்கிறது.

இந்த ரூ. 329 திட்டத்துடன் மொத்தம் 300 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இலவச நன்மைகளாக இந்த ஏர்டெல் ரூ. 329 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 329 Prepaid Recharge Plan) 24/7 அப்பல்லோ சர்க்கிள் (24/7 Apollo Circle) நன்மையை வழங்குகிறது. இத்துடன் கூடுதலாக இந்த ஏர்டெல் திட்டம் அதன் பயனர்களுக்கு இலவச ஹெலோ டியூன்ஸ் (Hello Tunes) நன்மையையும் வழங்குகிறது.
இத்துடன் நன்மைகள் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் அதன் பயனர்களுக்கு விங்க் மியூசிக் (Wynk Music) இலவச சந்தாவை வழங்குகிறது. இதனால், அன்லிமிடெட் இசையை உங்களால் கேட்டு மகிழ முடியும். ஏர்டெல் நிறுவனம் 28 நாள் மற்றும் 30 நாள் செல்லுபடியாகும் முழு மாத வேலிடிட்டி திட்டங்களை இதுவரை வழங்கி வந்தது.
ஆனால், இப்போது இந்த புதிய ரூ. 329 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் ஏர்டெல் நிறுவனம் முதல் முறையாக 35 நாட்கள், அதாவது ஒரு மாதத்திற்கும் கூடுதலான வேலிடிட்டியை மிகவும் குறைந்த விலையில் வழங்கி உள்ளது. இந்த திட்டம் அதிக டேட்டா தேவை இல்லாத, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை எதிர்பார்க்கும் நபர்களுக்கு பொருத்தமானது. உங்களிடம் வைஃபை (Wi-Fi) இருக்கிறது என்றால் கூட, நீங்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








