Home
News

Airtel-க்கு போடு.. வெறும் ரூ.499 போதும்.. 15+ ஓடிடி.. 5ஜி இலவசம்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 ஜிபி டேட்டா!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரோ, அமேசான் பிரைம் வீடியோவோ ஏர்டெல் (Airtel) கொடுக்கும் இந்த 4 ப்ரீபெய்ட் திட்டங்களில் மட்டுமே ஓடிடி (OTT) சலுகையோடு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கூடுதலாக கிடைக்கிறது. இந்த திட்டங்களின் முழு விவரங்கள் இதோ.

ஏர்டெல் ரூ 499 திட்ட விவரங்கள் (Airtel Rs 499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 3 மாதங்களுக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா மற்றும் 28 நாட்களுக்கான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது.

வெறும் ரூ.499 போதும்.. 15+ ஓடிடி.. 5ஜி இலவசம்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தாவில் சோனிலிவ், லயன்ஸ்கேட் பிளே உள்ளிட்ட 15+ ஏடிடி சந்தாவை பெற்று கொள்ளலாம். இதுபோக நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது.

100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கிடைக்கிறது. இதுபோக அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆப் சந்தாவை பெற்று கொள்ளளாம். 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 699 திட்ட விவரங்கள் (Airtel Rs 699 Plan Details): இந்த திட்டத்தில் 56 நாட்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.

முந்தைய திட்டத்தை போல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 5ஜி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதேபோல அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 869 திட்ட விவரங்கள் (Airtel Rs 869 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 3 மாதங்களுக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம்.

100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை வருகிறது. அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆப்களின் சலுகைகள் போக ரிவார்ட்ஸ் மினி (RewardsMini) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது.

ஏர்டெல் ரூ 999 திட்ட விவரங்கள் (Airtel Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதே 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ சந்தாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அதேபோல ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 20+ ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வருகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதிலும் ரிவார்ட்ஸ்மின் சந்தா கொடுக்கப்படுகிறது.

அதேபோல அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகைகளை பயன்படுத்தி கொள்ள முடியும். அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மட்டுமல்லாமல், நல்ல டேட்டா சலுகையும் வேண்டுமென்றால், மேற்கூறிய 4 திட்டங்களை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 869 Plan With Unlimited Voice Calls, 2GB Data, Hotstar Subscription 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X