Airtel செய்த செய்கை.. அம்பானியே ஆடிபோய்ட்டார்.. ரூ.150-க்குள் 20+ OTT இலவச சந்தா.. 15GB டேட்டா.. எந்த திட்டம்?
டெலிகாம் (Telecom) துறையில் ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிகழ்ந்து வருகிறது. யார் வாடிக்கையாளர்களை அதிகமாக கவரும் சிறந்த நன்மை கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்கிறார்கள் என்பதில் பெரும் போட்டியே நடைபெறுகிறது.
இதனால் ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid plans) அடிக்கடி மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. சில நேரங்களில் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் புதிய நன்மைகளுடன் புது புது திட்டங்களை அறிமுகம் செய்கின்றனர். அந்த வகையில், அள்ளிக்கொடுக்கும் அம்பானியே (Ambani) வியப்படையும் வகையில், ஏர்டெல் (Airtel) நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் 20-திற்கும் மேற்பட்ட OTT சந்தாவை வழங்கும் ஒரு புதிய திட்டத்தை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் என்டர்டைன்மெண்ட் திட்டம் (Airtel Entertainment Plan):
ஆம், மக்களே ஜியோ பயனர்களுக்கு கூட கிடைக்காத நன்மைகளுடன் மிகவும் குறைந்த விலையில் ஏர்டெல் நிறுவனம் இப்போது ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் கிடைக்கும் என்டர்டைன்மெண்ட் பிளான்ஸ் விருப்பத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் உண்மையாவாகவே ஒரு சிறந்த பொழுதுபோக்கு திட்டம் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
தெரியாதவர்களுக்கு, ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் (Truly Unlimited), எண்டர்டைன்மெண்ட் (Entertainment), டேட்டா (Data), டாக்டைம் டாப் அப் வவுச்சர் (Talktime Top up voucher) என்ற பிரிவுகளை கொண்டுள்ளது. இந்த பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு விதமான முக்கிய நன்மைகளை வழங்கும் திட்டங்களை ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ட்ரூலி அன்லிமிடெட் கீழ் வழக்கமான அன்லிமிடெட் டாக்டைம் நன்மைகள் கிடைக்கும் திட்டங்கள் கிடைக்கிறது.
என்டர்டைன்மெண்ட் பிரிவின் கீழ், ஏர்டெல் நிறுவனம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த OTT சந்தா மற்றும் அதற்கு தேவையான FUP வரம்பில்லாத டேட்டா நன்மையை வழங்குகிறது. டேட்டா பிரிவின் கீழ் ஏர்டெல் நிறுவனம் டேட்டா வவுச்சர் நன்மையையும், டாக்டைம் பிரிவில் கீழ் வாய்ஸ் கால் நன்மையையும் நிறுவனம் வழங்கி வருகிறது. இப்போது நாம் இங்கு பார்க்கவிருக்கும் திட்டமானது என்டர்டைன்மெண்ட் பிரிவின் கீழ் வருகிறது.

ஏர்டெல் ரூ.148 திட்டம்.. 20+ OTT.. 15GB டேட்டா.. (Airtel Rs 148 Plan.. 20+ OTT and 15GB Data):
இந்த திட்டம் இப்போது ரூ.148 என்ற மலிவான விலையில் வருகிறது. இது மிகவும் குறைந்த விலையில் 15GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த 15ஜிபி டேட்டா நன்மை எந்தவொரு FUP வரம்பும் இல்லாமல் வருகிறது என்பது சிறப்பு. இதனால், பயனர்கள் எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்திற்கென்று தனியாக வேலிடிட்டி எதுவும் கிடையாது.
உங்கள் அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தின் நன்மைகள் ஒத்துப்போகும். உங்கள் அடிப்படை திட்டம் 28 நாள் வேலிடிட்டியை கொண்டுள்ளது என்றால், இந்த 148 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஒருவேளை உங்கள் அடிப்படை திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை கொண்டிருந்தால், இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்துடன் முக்கியமான நன்மையாக Airtel Xstream Play நன்மையாக 20+ OTT சந்தா கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். 28 நாட்களுக்கு 20-திற்கும் மேற்பட்ட OTT சேனல் நன்மைகளை அனுபவிக்க இந்த திட்டம் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது. 20+ OTT சேனல்கள் என்று பார்க்கையில், Sony Liv, Lionsgate, Fancode, Eros Now, hoichoi, ManoramaMAX போன்ற பல சேனல்களின் சந்தாவை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








