Airtel ஓரம்போ.. 42ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. வெறும் ரூ.250-க்குள் அள்ளி கொடுக்கும் Jio..
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் எக்கச்சக்க சலுகைகளை வழங்கி வருகின்றன. மேலும் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, வரும் மாதங்களில் இந்த இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.250-க்கு கீழ் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இந்த திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகாப் பார்ப்போம்.

ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 239 recharge plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 42ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.
அதேபோல் ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. மேலும் JioTv (ஜியோ டிவி), JioCinema (ஜியோ சினிமா), மற்றும் JioCloud (ஜியோ க்ளவுட்) நன்மைகளும் கிடைக்கும் ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.
ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 179 recharge plan) ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 24ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
அதாவது ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் jioTv (ஜியோ டிவி), JioCinema (ஜியோ சினிமா), மற்றும் JioCloud (ஜியோ க்ளவுட்) நன்மைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 239 recharge plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 24ஜிபி டேட்டாவை பெறமுடியும். அதேபோல் இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.
குறிப்பாக ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் பெறமுடியும். இதுதவிர கூடுதல் இலவச நன்மைகளாக, விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) போன்றவற்றை நிறுவனம் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 179 recharge plan) மொத்தமாக 2ஜிபி டேட்டாவை மட்டும் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். இதுதவிர விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) நன்மைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.239, ரூ.179 ப்ரீபெய்ட் திட்டங்களை விட ஜியோ நிறுவனத்தின் ரூ.239, ரூ.179 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் அதிக டேட்டா மற்றும் அதிக நன்மைகளை வழங்குகின்றன. எனவே ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது தான் நல்லது. மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








