கேபிள் இல்ல.. மாதம் ரூ.899 போதும்.. 350+ சேனல்கள்.. OTT சந்தா.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் டேட்டா!
கேபிள் டிவிக்கு நிகரான சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா, 100 எம்பிபிஎஸ் வேக டேட்டா போன்ற சலுகைகளை வெறும் ரூ 899 மதிப்புள்ள திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. இப்படி 100எம்பிபிஎஸ் வேகத்தில் 2 ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ரூ 899 திட்ட விவரங்கள் (Airtel Xstream AirFiber Rs 899 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் வை-பை டேட்டா (Wi-Fi Data), டிவி சேனல்கள் (TV Channels) மற்றும் ஓடிடி சந்தா (OTT Subscription) கொடுக்கப்படுகிறது.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 1 டிபி டேட்டா வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். அதன்பின் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சேவை கிடைக்கும்.
மொபைல், லேப்டாப், டிவி போன்ற மல்டிபிள் டிவைஸ் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இதற்காக வை-பை ரூட்டர் (Wi-Fi Router) பெற்று கொள்ளலாம். இந்த சலுகை போக ஏர்டெல் பிளாக் (Airtel Black), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா கிடைக்கிறது.
இதில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் கீழ் சோனிலிவ் (SonyLIV), ஈராஸ்நவ் (ErosNow), லயன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), மனோரமாமேக்ஸ் (ManoramaMax), ஹோய்சோய் (HoiChoi), எபிக் ஆன் (Epic ON), ஷீமாரூமீ (ShemarooMe), டிவோ (Divo), டோலிவுட் (Dollywood), நம்மஃபிளிக்ஸ் (Nammaflix) ஓடிடிகள் கிடைக்கின்றன.
அதோடு கிளிக் (Klikk), ,ஷார்ட்ஸ்டிவி (ShortsTV), டாக்குபே (Docubay), ஹங்கமாபிளே (HungamaPlay) போன்ற பல்வேறு ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வளவு சலுகைகள் போக 350+ எச்டி மற்றும் எஸ்டி சப்போர்ட் கொண்ட டிவி சேனல்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. இதற்காக 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் (4K Android Box) வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை பெற வேண்டுமானால், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான தொகையை முழுவதும் கட்ட வேண்டும். அதோடு ஜிஎஸ்டி மற்றும் ரூ.1000 இன்ஸ்டாலேஷன் கட்டணம் (Installation Charge) வசூலிக்கப்படும். இந்த இன்ஸ்டாலேஷன் கட்டணம் 12 மாத வேலிடிட்டியில் கழித்து கொள்ளப்படும்.
இது முதன்முதலில் பெறும் கஸ்மர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதன்பிறகு மாதத்துக்கான தொகையை மட்டுமே செலுத்தி சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதேபோல 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை மட்டுமே கொண்ட மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்ப்போம்.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் ரூ 799 திட்ட விவரங்கள் (Airtel Xstream AirFiber Rs 799 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்திலும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே 1 டிபி டேட்டாவை அதிகபட்சமாக பயன்படுத்தலாம்.
அதன் பிறகு 2 எம்பிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்பட்டு சேவை வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தில் வை-பை ரூட்டர் மட்டுமே கிடைக்கிறது. ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் சலுகை கிடைக்காது. டேட்டா மட்டுமே தேவைப்படும் கஸ்டமர்கள் இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ஏர்ஃபைபர் திட்டத்தை பெற்று கொள்ளலாம்.
முந்தைய திட்டத்தை போலவே 6 அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல ரூ.1000 இன்ஸ்டாலேஷன் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஒரே திட்டத்தில் டேட்டா, ஓடிடி, டிவி சேனல்கள் போன்ற சலுகைகள் தேவைப்படும் கஸ்டமர்கள் இந்த திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications