காப்பி அடிக்கிறத தவிர வேற ஒன்னும் தெரியாதா.. Jio-வை கடுப்பாக்கும் பழைய Vodafone திட்டம்.. மீண்டும் அறிமுகம்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஆகிய இரண்டையுமே ஒரே நேரத்தில் வெறுப்பேற்றும்படியான ஒரு வேலையை பார்த்துள்ளது விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea)!
வோடபோன் ஐடியா அப்படி என்ன செய்துள்ளது? இந்திய டெலிகாம் துறையின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டரான வோடபோன் ஐடியாவானது புதுப்பிக்கப்பட்ட நன்மைகளுடன் ரூ.49 திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான ஒரு டேட்டா வவுச்சர் ஆகும்.

அதாவது உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு பேஸிக் ரீசார்ஜ் இருந்தால் மட்டுமே வோடாபோனின் ரூ.49-ஐ ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக பார்க்கும் முன்னர், இது எங்கிருந்த்து காப்பி அடிக்கப்பட்டது என்பதை பற்றி பார்த்துவிடலாம்!
ரூ.49 திட்டத்தை முதலில் அறிமுகம் செய்தது ஏர்டெல் நிறுவனம் தான். மிகவும் சுவாரசியமான வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மையை வழங்குவதால்.. ஜியோ நிறுவனமும் ரூ.49 மதிப்பிலான புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. தற்போது தன் பங்கிற்கு, வோடாபோன் ஐடியாவும் ரூ.49 திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

வோடாபோன் ஐடியாவின் இந்த நடவடிக்கையை "மேலோட்டமாக பார்த்தால்".. ஏர்டெல் மற்றும் ஜியோவை "பச்சையாக காப்பி அடிக்கிறது" என்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் இதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்குவதென்பது அவர்களை தக்கவைப்பதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்றாகும்.
தற்போது வோடாபோன் ஐடியாவிற்கு அதுதான் தேவையும் கூட! ரூ.49 திட்டமானது வெற்றி அடைந்தால் அல்லது இந்த 2024 ஐபிஎல் சீசனில் நிறைய ரீசார்ஜ்களை சந்தித்தால், வோடபோன் ஐடியாவின் லாபம் அதிகரிக்கும். ஆக மொத்தம் இங்கே எல்லாமே வியாபாரம் தான். எதுவுமே அவமானம் இல்லை!

வோடபோன் ஐடியா ரூ.49 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? 1 நாள் என்கிற குறுகிய கால வேலிடிட்டியுடன் வரும் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ரீசார்ஜ் செய்த அதே நாளில் இரவு 11:59 மணிக்கு காலாவதியாகி விடும். இருந்தாலும் கூட இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தம் 20ஜிபி டேட்டா (20GB Data) கிடைக்கும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.49 திட்டமும் கூட 20ஜிபி டேட்டாவையே வழங்குகிறது. ஆனால் ஜியோவின் ரூ.49 திட்டமானது மொத்தம் 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆக ஜியோ தான் வெற்றி பெறுகிறது. இருப்பினும் குறுகிய காலத்திற்கு ஏராளமான டேட்டாவை பயன்படுத்த விரும்பும் எந்தவொரு வாடிக்கையாளர்களுமே.. ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ-யின் கீழ் கிடைக்கும் ரூ.49-ஐ தாராளமாக ரீசார்ஜ் செய்யலாம்!
ஜியோவின் ரூ.49-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 25ஜிபி ஹைஸ்பீட் டேட்டா (25GB High Speed Data) கிடைக்கும். அதாவது 1 ரூபாய் 91 பைசா என்கிற விகிதத்தில் 1ஜிபி டேட்டா கிடைக்கும் அல்லது சுமார் ரூ.4 க்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும்.
25ஜிபி என்கிற டேட்டா நன்மையை தவிர்த்து ரூ.49 திட்டத்தின் கீழ் வேறு எந்த நன்மைகளும் (அதாவது அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற எந்த நன்மைகளும்) கிடைக்காது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் ஆகும்.
ஜியோ தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை ஏர்ஃபைபர் (AiFiber) சேவையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தின் கீழ் 50 நாட்கள் இலவச சலுகை (50 Days Free Offer) ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக இந்த சலுகை புதிய வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் மற்றும் ஏற்கனவே ஜியோ சேவையின்கீழ் உள்ள பழைய வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications