அண்டார்டிகாவில் உருவான அதிகபட்ச வெப்பநிலை! நாசா வெளியிட்ட பனி உருகும் அதிர்ச்சி புகைபடங்கள்!

|

உலக வானிலை ஆய்வுத் துறை, அதன் சமீபத்திய ஆய்வின் முடிவு துல்லியத்தைச் சரிபார்க்கும் அதே வேளையில், கடந்த வாரத்தில் அண்டார்டிகா பகுதியில் உள்ள மெல்ட்டிங் குளங்கள் உருகுவதற்கான அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இத்துடன் சமீபத்தில், தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் அண்டார்டிகாவில் இந்த ஆண்டின் வெப்பமான வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது என்று அறிவித்துள்ளது.

முதல் முறையாக அதிகப்படியான வெப்பநிலையை எட்டிய அண்டார்டிகா

முதல் முறையாக அதிகப்படியான வெப்பநிலையை எட்டிய அண்டார்டிகா

நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிப்ரவரி 6 ஆம் தேதி, அண்டார்டிகாவின் டிரினிட்டி பெனின்சுலா பகுதியில் உள்ள ஆராய்ச்சி நிலையமான அர்ஜென்டினாவின் எஸ்பெரான்சா பேஸ் இடத்தில் முதல் முறையாக 18.3° C (64.9 ° F) என்ற வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது. இந்த வெப்பநிலையானது அன்றைய லாஸ் ஏஞ்சல்ஸ் வெப்பநிலைக்குச் சமமாக இருந்தது என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை

இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை

முதல் முறையாக அண்டார்டிகா பகுதியில் 18.3° C வெப்பநிலை எட்டியுள்ளது, இதற்கு முன்பு இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக 17.5° C, சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் மாதம், 2015 ஆண்டில் பதிவு செய்யப்பட்டது என்று நாசா மேலும் குறிப்பிட்டுக் கூறியுள்ளது.

ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா? வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா? வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்

நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்

உலக வானிலை ஆய்வுத் துறை இன்னும் அதன் ஆய்வின் துல்லியத்தைச் சரிபார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நாசா தற்பொழுது இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள ஒரு வார காலஇந்த புகைப்படங்கள் நிச்சயம் உங்கள் கண்களை விரிவடைய செய்யும்.

 ஈகிள் தீவின் கவலை நிலை

ஈகிள் தீவின் கவலை நிலை

நாசாவின் அறிக்கையின்படி, " அண்டார்டிக்காவின் அதிகபட்ச வெப்பமான வெப்பநிலை பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் பிப்ரவரி 13, 2020 வரை தொடர்ந்து நீடித்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள படங்கள், ஈகிள் தீவின் பனிக்கட்டிகள் உருகுவதைத் தெளிவாகக் காட்டுகின்றது, மேலும் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் பிப்ரவரி 13, 2020 வரை, ஆப்பரேஷனல் லேண்ட் இமேஜ்ர் (OLI) லேண்ட்சாட் 8 செயற்கைக்கோள் இந்த புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்

 20% பனிக்கட்டிகள் ஒரே வாரத்தில் உருகியது

20% பனிக்கட்டிகள் ஒரே வாரத்தில் உருகியது

நாசா வெளியிட்ட முதல் புகைப்படத்தில் ஈகிள் தீவில் உள்ள பனிக்கட்டி விபரங்கள் தெளிவாகத் தெரிகிறது, அதிகபட்ச வெப்பநிலை ஒரு வாரம் நீடித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தீவின் பனிக்கட்டிகள் வேகமாக உருகத் துவங்கியுள்ளது. இதனால் மெல்ட்டிங் குளங்கள் உருவாகியுள்ளதையும் புகைப்படம் காட்டுகிறது, தீவின் பனி திரட்டலில் சுமார் 20% உருகி இருப்பதையும் இரண்டாவது புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது.

மூன்றாவது பெரிய பனித் தாக்குதல்

மூன்றாவது பெரிய பனித் தாக்குதல்

மாசசூசெட்டின் நிக்கோல்ஸ் கல்லூரியின் பனிப்பாறை நிபுணர் மோவ்ரி பெல்டோ அறிக்கையின்படி, இதுபோன்ற விரிவான பனி உருகல், உறைபனிக்கும் மேலான வெப்பநிலையின் தொடர்ச்சியான தாக்கத்தால் ஏற்படுகிறது என்று விளக்கினார். அதேபோல், நவம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020 இல் நிகழ்ந்த வெப்பநிலை மாற்றத்தில், இந்த பிப்ரவரி வெப்ப அலை 2019-2020 கோடைக்காலத்தின் மூன்றாவது பெரிய பனித் தாக்குதல் நிகழ்வாகும் என்று நாசா கூறியுள்ளது.

Android 9 & 8 பயனர்களுக்கு இப்படியொரு புளூடூத் சோதனையா? புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்!Android 9 & 8 பயனர்களுக்கு இப்படியொரு புளூடூத் சோதனையா? புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்!

இதற்கான காரணம்

இதற்கான காரணம்

இதுபோன்ற நிகழ்வு, இப்பொழுது மட்டும் நிகழ்கிறது என்று நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று மோவ்ரி பெல்டோ கூறியுள்ளார். இதற்கான காரணம் அண்டார்டிகாவில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் தான். வெப்பநிலை மாற்றங்களுக்கு முக்கிய காரணம் உலக சுற்றுசூழல் பாதிப்படைந்தது தான் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 50 ஆண்டுகளில் கடலுக்குள் கடலோர நகரங்கள் மூழ்க வாய்ப்பு

50 ஆண்டுகளில் கடலுக்குள் கடலோர நகரங்கள் மூழ்க வாய்ப்பு

முன்பே பல ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டது போல அண்டார்டிகா பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகிறது. இதனால் இன்னும் 50 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கும் என்றும், கடலோர இடங்கள் கடலிற்குள் மூழ்கும் வாய்ப்பும் உள்ளதென்று கூறியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
NASA Photos Reveal Shocking Levels Of Ice Melt Created Melting Ponds In Antarctica's Eagle Island : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X