650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
100 சதவிகித்தை எட்டினால் தான் அது ஆகச்சிறந்த வெற்றி என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு பூஜ்ஜிய சதவிகிதம் கூடவெற்றிதான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) ஒரு தாரமான சாதனையை செய்துள்ளது. அதென்ன சாதனை? இதோ விவரங்கள்:
பிஓஇஎம்-3 (POEM-3) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிஎஸ்எல்வி ஆர்பிட்டல் எக்ஸ்ப்ரீமென்டல் மாட்யூல்-3 (PSLV Orbital Experimental Module-3) என்று அழைக்கப்படும் இஸ்ரோவின் ஸ்பேஸ் மிஷன் (Space Mission) ஆனது.. துளி அளவு கூட விண்வெளியில் எந்த குப்பையையும் போடாமல்.. பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்தது.

இதன் விளைவாக இஸ்ரோவின் பிஓஇஎம்-3 மிஷன் ஆனது ஸீரோ டெப்ரிஸ் மிஷன் (Zero debris mission) ஆக பதிவாகியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இதுவொரு முக்கியமான மைல்கல் ஆகும். ஏனென்றால் வழக்கமாக விண்வெளிக்குள் செல்லும் எந்தவொரு ராக்கெட்டுமே அல்லது விண்கலமுமே, விண்வெளியில் ஏதேனும் சிறிய பாகத்தையோ அல்லது துண்டையே மிதக்கவிட்டு விடுவது வழக்கம். அதுதான் ஸ்பேஸ் டெப்ரிஸ் (Space Debris) என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இஸ்ரோவின் பிஓஇஎம்-3 அப்படி இல்லை. பிஎஸ்எல்வி-சி58 (PSLV-C58) திட்டத்தின் ஒரு பகுதியான பிஓஇஎம்-3 மிஷன் ஆனது கடந்த ஜனவரி 1 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டதாகவும், இந்த மிஷன் நடைமுறையில் பூஜ்ஜிய சதவிகித குப்பைகளை சுற்றுப்பாதையில் விட்டுவிட்டதாகவும் இஸ்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அனைத்து செயற்கைக்கோள்களையும் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்த வேண்டும் என்கிற முதன்மை பணியை முடித்த பிறகு, பிஎஸ்எல்வி-யின் டெர்மினல் ஸ்டேஜ் ஆனது த்ரீ-ஆக்சிஸ் ஸ்டெபிலைஸ்டு பிளாட்பார்ம் ஆன பிஓஇஎம்-3 ஆக மாற்றப்பட்டு, சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த டீ-ஆர்பிட் சோதனையானது விண்வெளியில், 650 கிமீ முதல் 350 கி.மீ வரையிலான சுற்றுப்பாதையில் நடத்தப்பட்டது. இது ஆரம்பநிலை ரீ-என்ட்ரியை (Re-entry) எளிதாக்கியது, எஞ்சிய உந்துசக்திகளை (Residual propellants) குறைப்பதன் மூலம் தற்செயலான முறிவு அபாயங்களை குறைத்தாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிஓஇஎம்-3 ஆனது 9 வெவ்வேறு சோதனை பேலோடுகளுடன் கட்டமைக்கப்பட்ட மிஷனாகும். அந்த 9 பேலோடுகளில் 6 பேலோடுகள் ஆனது அரசு சாரா நிறுவனங்களால் (NGEs) வழங்கப்பட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. "இந்த பேலோடுகளின் பணி நோக்கங்கள் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்பட்டன" என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
பிஓஇஎம்-3 மிஷனின் இந்த துல்லியமான வெற்றியானது.. மிகவும் செலவு குறைந்த செலவில், குறுகிய கால விண்வெளி சோதனைகளை மேற்கொள்வதற்கான முக்கிய தளத்தை திறந்துவிட்டுள்ளது. இது கல்வியாளர்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் என்ஜிஇக்கள் தங்கள் புதிய பேலோடுகளை பரிசோதிக்க ஒரு எளிமையான மற்றும் வெற்றி விகிதம் நிறைந்த ஒரு வழியாக மாறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இஸ்ரோ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும் கூற்று சேர்ந்து உருவாக்கும் நிசார் (NISAR) மிஷன் ஆனது சற்றே தாமதமாகி உள்ளது. தற்போது இந்த மிஷனின் ஏவுகணைக்கான தயார்நிலை தேதியானது "ஏப்ரலின் இறுதிக்குள்" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள நிசார் மிஷன் ஆனது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த செயற்கைக்கோளின் 39-அடி விட்டம் (12-மீட்டர்) ரேடார் ஆண்டெனா ரெஃப்ளெக்டர் மீது ஒரு ஸ்பெஷல் கோட்டிங் போடுவது, இந்த மிஷனின் இறுதிகட்ட பணிகளில் ஒன்றாகும்.
இந்த ஸ்பெஷல் கோட்டிங் ஆனது செயற்கைகோள் ஆனது விண்வெளியில் பாய்ச்சப்படும் போது, அதை பாதிக்கக்கூடிய வெப்பநிலை அதிகரிப்புக்கு எதிராக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும். நாசா தான் இந்த ஸ்பெஷல் கோட்டிங்கிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட ரெஃப்ளெக்டர் ஆனது கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஸ்பெஷல் பெசிலிட்டிக்கு கொண்டுசெல்லப்படும், பின்னர் செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட இந்தியாவுக்கு திரும்பும். இதுவே நிசார் மிஷன் சற்றே தாமதமாக முக்கிய காரணமாகும்.


Click it and Unblock the Notifications








