Home
News

வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!

நாங்க கை வச்சாலே.. அது வெற்றி தான் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம், இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஒரு சூப்பர் சாதனையை செய்துள்ளனர். அதுவும் வெறும் 15 கிலோவிற்காக! அதென்ன சாதனை? இதோ விவரங்கள்:

இஸ்ரோவை சேர்ந்த விஞ்ஞானிகள் ராக்கெட் என்ஜின்களுக்கான இலகுரக கார்பன்-கார்பன் முனையை (Lightweight Carbon-Carbon Nozzle For Rocket Engines) உருவாக்கி உள்ளனர். கேட்பதற்கு சாதாரணமாக இருக்கும் இந்த விஷயம், உண்மையிலேயே ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்தில் (Rocket Engine Technology) ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஆகும்.

வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை!

அதெப்படி? சி-சி நாஸில் (C-C Nozzle) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த புதிய வகை ராக்கெட் எஞ்சின் முனையானது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கார்பன்-கார்பன் (C-C) கலவைகள் போன்ற மேம்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது விதிவிலக்கான பண்புகளை (Exceptional Properties) வழங்கும் என்று இஸ்ரோ கூறுகிறது.

அதாவது இது ராக்கெட் என்ஜின்களின் முக்கிய அளவுருக்களை (Vital Parameters) மேம்படுத்தும். அதில் த்ரஸ்ட் லெவல்கள் (Thrust levels), ஸ்பெசிஃபிக் இம்பல்ஸ் (Specific impulse) த்ரஸ்ட்-டூ-வெயிட் விகிதங்களும் (Thrust-to-weight ratios) அடங்கும். இதெல்லாமே சேர்ந்து லான்ச் வெஹிக்கலின் அதாவது ராக்கெட்டின் பேலோட் திறனை அதிகரிக்கும்.

வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை!

எவ்வளவு அதிகரிக்கும்? வெறும் 15 கிலோ மட்டுமே அதிகரிக்கும். இஸ்ரோவின் இந்த புதிய லைட்வெயிட் சி-சி நாஸில் ஆனது குறிப்பாக பிஎஸ்எல்வி (Polar Satellite Launch Vehicle - PSLV) ராக்கெட்டிற்காக தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வியின் நான்காவது ஸ்டேஜ் ஆன பிஎஸ்4, தற்போது கொலம்பியம் அலாய் (Columbium Alloy) மூலம் செய்யப்பட்ட முனைகளுடன் இரட்டை என்ஜின்களை (Twin engines) பயன்படுத்துகிறது.

ஆனால், மெட்டாலிக் டைவெர்ஜென்ட் உடனான சிசி நாஸிலை பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 67% மாஸ் ரிடெக்ஷனை அடைய முடியும். இதன் மூலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பேலோட் திறனை 15 கிலோ வரை அதிகரிக்க முடியும். விண்வெளி பயணத்தில் ஒவ்வொரு கிராமும் கூட முக்கியம் என்பதால்.. உண்மையிலேயே 15கிலோ என்பது ஒரு மிகப்பெரிய மேம்பாடாகும்.

வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை!

எல்லா சோதனைகளும் சக்ஸஸ்! ஒடிசா மாநிலத்தில் உள்ள மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் காம்ப்ளக்ஸில் (ISRO Propulsion Complex) உள்ள ஹை-ஆல்டிட்யூட் டெஸ்ட் ஃபெசிலிட்டியில் (High-Altitude Test facility) கடந்த மார்ச் 19 அன்று, சி-சி நாஸிலுக்கான 60 வினாடிகளுக்கான ஹாட் டெஸ்ட் (60-second hot test) நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் 2 ஆம் தேதியன்று 200 வினாடிகளுக்கான ஹாட் டெஸ்ட் (200-second hot test) உட்பட அடுத்தடுத்து நடத்தப்பட்ட எல்லா சோதனைகளுமே, சி-சி நாஸிலின் திறன்களை உறுதிப்படுத்தி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சிசி நாஸிலின் ஒரு முக்கிய அம்சம் - இதிலுள்ள சிலிக்கான் கார்பைட்டின் ஸ்பெஷல் ஆக்ஸிடேஷன் கோட்டிங் (Special anti-oxidation coating of Silicon Carbide) ஆகும்.

இந்த ஸ்பெஷல் கோட்டிங் ஆனது ஆக்ஸிஜனேற்ற சூழலில் செயல்பாட்டு வரம்புகளை (Operational limits) நீட்டிக்கிறது. கூடவே வெப்பத்தால் தூண்டப்பட்ட அழுத்தங்களை குறைப்பது (Thermally induced stresses) மட்டுமல்லாமல், அரிப்பு எதிர்ப்பையும் (Corrosion resistance) அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த புதிய சி-சி நாஸில் ஆனது உயர்ந்த வெப்பநிலையிலும் கூட இயந்திர பண்புகளை தக்கவைத்துக்கொள்ளும் திறனை கொண்டுள்ளது.

எல்லாவற்றை விட முக்கியமாக, சிறிய மற்றும் பெரிய ஸ்பேஸ் மிஷன்களை திட்டமிட்டும் எல்லா உலக நாடுகளுக்குமே.. இஸ்ரோவின் இந்த புதிய கண்டுபிடிப்பு ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். குறிப்பாக மிகவும் எடை அதிகமான ஸ்பேஸ் மிஷன்களை (Super Heavy Space Missions) திட்டமிடும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கும் (NASA), எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO Scientists Developed Lightweight CC Nozzle for PSLV Why Its Breakthrough in Rocket Engine Tech
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X